சுஜாதா பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இஸ்ரோவில் ராக்கெட்டுக்கும், கம்ப்யூட்டருக்கும் பொட்டு வைத்து, பூ வைத்து பூஜை நடத்தியதைக் குறிப்பிட்டு அறிவியலறிவுக்கும், சில நம்பிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்றார். இது போன்ற சில விஷயங்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் என்றும் சொன்னார்.
என் தற்சமய பணியிடத்தில் ஒரு குறிப்பிட்ட க்யூப் எல்லோரும் அலறிப் பிடித்து ஓடக் கூடிய பயங்கர ஸ்தலமாகக் கருதப் படுகிறது. இங்கே அடிக்கடி ரீ-ஆர்க் நடக்கும். அப்போது இடமாற்றங்களும் இருக்கும். அந்த குறிப்பிட்ட க்யூபில் என்ன கோளாறென்று தெரியவில்லை அங்கே இடம் பெயர்பவர்கள் கூடிய சீக்கிரத்தில் வேலை இழக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல, இந்த வருடத்தில் மட்டும் இது வரை ஆறு பேர்.
இது வாஸ்துவா ? இல்லை மனையடி சாஸ்திரமா என்று பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ இது நிர்வாகத்தின் நாசூக்கான சிக்னல் என்று தோன்றுகிறது.


Kasi 10:15 மு.பகல் on ஆகஸ்ட் 22, 2007 நிரந்தர பந்தம் |
உங்க க்யூப் எந்தப் பக்கம்
சத்யராஜ்குமார்,
இப்படித்தான் என் நண்பர் (ஒரு கிறிஸ்தவர்) அவர் க்யூப் கிழக்கோ/வடக்கோ எதோ பார்த்து இருப்பது ஆகாதுன்னு யாரோ கிளப்பிவிட ‘காசி, நாம் மாத்திக்கலாமா’ன்னார். அடுத்த நொடியிலேயே ‘சரி …. எப்ப இருந்து, இன்னிக்கே மாத்திக்கலாமா’ன்னு கேக்க, அவருக்கே தன்னைப்பற்றி வெட்கமாகியோ என்னமோ, அந்தப் பேச்சை அத்தோடு விட்டார்.
ஒன்னுமே கிடக்காதபொது இதுமாதிரி ஒன்னு.:-)
மீள்வரவுக்கு மகிழ்ச்சி.
Kasi 10:16 மு.பகல் on ஆகஸ்ட் 22, 2007 நிரந்தர பந்தம் |
அப்ப்டியே இந்த ஜஸ்டிபிகேஷனை எடுத்துங்களேன்.
சத்யராஜ்குமார் 10:30 மு.பகல் on ஆகஸ்ட் 22, 2007 நிரந்தர பந்தம் |
காசி, எனக்கு க்யூப் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்க்க வசதியாக இருக்கிறது.
வேர்ட் ப்ரஸ்சில் ஜஸ்டிபிகேஷன் எடுப்பது எப்படி என்று இனி மேல்தான் ஆராய வேண்டும். அனுபவப்பட்டவர்கள் சொன்னால் செய்து விடுகிறேன்.
சத்யராஜ்குமார் 1:34 பிற்பகல் on ஆகஸ்ட் 22, 2007 நிரந்தர பந்தம் |
காசி, CSS மாற்ற வேர்ட் ப்ரஸ் அனுமதிக்கவில்லை. ஆகவே ஜஸ்டிபிகேஷன் இல்லாத ஒரு மேலாடையை மாற்றியுள்ளேன்.
Kasi 10:27 மு.பகல் on ஆகஸ்ட் 23, 2007 நிரந்தர பந்தம் |
thanks