வெள்ளோட்டம்
செப்டம்பர் 9, 2007
நேற்று BMW 5 Series ஓட்டிப் பார்த்தோம்.
பொதுவாக கார் ஷோ ரூம்கள் மிகச் சிறந்த முறையில் மூளைச் சலவை நடக்குமிடம். கார் வாங்கலாம் என்று கால்வாசி மனசிருந்தால் போதும். உங்களைக் கசக்கிப் பிழிந்து கையில் காரைக் கொடுத்தனுப்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் அப்படி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. எந்த நிமிஷமும் எங்காவது யாராவது BMW எனது கனவு கார் என்று சொல்லிக் கொண்டேயிருப்பது காரணமாய் இருக்கலாம்.
இரண்டு சிறிய தெருக்களைக் கடந்து நெடுஞ்சாலையைப் பிடித்தபின், பதினைந்து நிமிஷங்கள் ஓட்டியிருப்போம். டாஷ் போர்டில் வழக்கமாய் இடம் பெறும் கசகசப்பான பொத்தான் கூட்டங்களை மழித்து விட்டு ஒரு LCD பேனலும், வட்டமான நாப் மட்டும் கொடுத்து எளிமையாக்கியிருந்தார்கள். மற்றபடி அன்றாடம் AUDI ஓட்டிக் கொண்டிருப்பவர்களை புல்லரிக்க வைக்க BMW-விடம் புதிதாய் ஒன்றுமில்லை.
ஷோ ரூமில் $120,000-க்கு ALPINA என்ற மாடல் நின்றிருந்தது. அப்படி என்ன அதில் இருக்கிறது என எட்டிப் பார்த்தபோது, ” Sir, please don’t touch it ! “ என்றார் ஒருவர். அதனால் கூட இந்த BMW வெள்ளோட்டம் பிடிக்காமல் போயிருக்கலாம்.



செப்டம்பர் 9, 2007 at 8:15 மு.பகல்
அல்பினா யாரு?
)
முன்னனி நடிகை?
நடிகைக்கும் BMW க்கும் என்ன சம்பந்தம்?
செப்டம்பர் 9, 2007 at 8:14 பிற்பகல்
—இவர்கள் அப்படி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.—
டொயோட்டா, ஹோண்டாவிலும் தற்போது ரொம்ப படுத்துவதில்லை. அதிகம் பேசினால் வெறுப்பாகிறார்கள் என்பதாலும் இணையத்தின் மூலம் வருவதாலும், வலியுறுத்தல்கள் பெருமளவு குறைந்திருக்கின்றன
செப்டம்பர் 9, 2007 at 8:36 பிற்பகல்
@பாலா: இணையத்தில் போன அனுபவமும் உண்டு. போன வருஷம் விசாரித்ததற்கு ஒரு டீலர் பாக்கி இல்லாமல் இன்னமும் இமெயில் மழை பொழிகிறார்கள். க்ரைஸ்லர் டீலர் ஒருபடி மேலே போய் கார் சாவியைக் கொடுத்து ஒரு நாள் பூராவும் வைத்திருந்து பார்த்து விட்டு அப்புறம் சொல்லு என்றார்.