தொழில்
செப்டம்பர் 10, 2007
ஒன்றிரண்டு சிறு தொழில்களில் கால் வைத்திருப்பதால் நண்பருக்கு நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. வீட்டை சுத்தம் செய்ய ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். நிறுவனத்தைச் சேர்ந்த பெண்மணி வாரம் ஒரு முறை வந்து மேஜை, டெலிபோன் உட்பட வீடு பூராவும் சொட்டு நீலம் இட்டுத் தோய்த்தாற் போல் பளிச் ஆக்கி விட்டுப் போய் விடுவார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவர் ஒரு வக்கீல் என்பது தெரிந்தது. ஏன் வக்கீல் வேலைக்கு முயற்சி செய்யாமல் இப்படித் துடைக்கிற வேலை என்று கேட்டால், 1. மொழிப் பிரச்சனை, 2. ஸ்பெயினில் படித்த சட்டம் வேறு, அமெரிக்க சட்டங்கள் வேறு என்று பதில்.
அதே நண்பர் நடத்தும் சப்வே துரித உணவகத்தில் ஸாண்ட்விச் மடித்துக் கொடுப்பவர் ஹங்கேரியைச் சேர்ந்த டாக்டர். இங்கே டாக்டர் ஆக வேண்டும் என்றால் இன்னும் சில தேர்வுகள் முடிக்க வேண்டும். அதற்குப் பல ஆயிரம் டாலர்களும் சில வருஷங்களும் செலவாகும். அது வரை ஸாண்ட்விச் வேலையை விடும் உத்தேசமில்லை என்கிறார்.
மாதா மாதம் விரட்டும் பில்கள் காரணமா, அல்லது எந்த வேலை செய்தாலும் மரியாதையளிக்கும் சமூகச் சூழல் காரணமா ? என்பது சாலமன் பாப்பையாவுக்கு சமர்ப்பணம்.



செப்டம்பர் 10, 2007 at 8:55 மு.பகல்
இதுக்கு எதுக்கு பாப்பையாவும் இன்னொருவரும் ?
நானே போறுமே
அடிச்சு சொல்றேன், எந்த வேலை செய்தாலும் மரியாதை தரும் சமூகச் சூழல் தான் காரணம்.
செப்டம்பர் 10, 2007 at 8:02 பிற்பகல்
பிரகாஷ், அவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன். வேலைக்கு மரியாதை ஒரு அளவிற்குத் தான். ஆனால் அடிப்படைக் காரணம் மாதாமாதச் செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருப்பது தான் என்று நினைக்கிறேன். இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி பெரிதாகிக் கொண்டே இருக்கும் சமூகம் இது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. (கத்ரீனா லூசியானா பற்றியெல்லாம் மறக்கக் கூடாது).
செப்டம்பர் 10, 2007 at 10:19 பிற்பகல்
செல்வராஜ், நீங்க சொல்றது உண்மையாக இருக்கலாம். நான் இந்திய சூழ்நிலையை வைத்து மட்டுமே அந்த முடிவுக்கு வந்தேன். உதாரணமாக, இந்தியாவில் தொண்ணூறு சதவீதம், டெசிக்னேஷனை வைத்துத்தான் மதிப்பு, வாங்கும் ஊதியத்தை வைத்துக் கூட அல்ல.
தனியாக பிராக்டிஸ் செய்யும் மருத்துவர் ஒருவர், என்னதான் நோயாளிகளே வராமல் சிங்கி அடித்தாலும், க்ளினிக்கை இழுத்து மூடிவிட்டு, வாகுவம் க்ளீனர் விற்கவோ, கேஸ் ஏஜென்ஸி எடுத்து நடத்தவோ உண்டான சூழ்நிலை இங்கு கிடையாது. குடும்ப அங்கத்தினர் முதற்கொண்டு, பக்கத்து வீட்டு எல்ஐசி மாமா ( ரிட்டையர்ட்), தெருமுனை மளிகைக் கடைக்காரர், வழக்கமாக வண்டியை விடும் கேரேஜ் ஓனர், சலூன் காரர், வீட்டு வேலை செய்பவர் ( ஏம்மா, அய்யா கிளீனிக்க இழுத்து மூடிட்டாராமே, மெய்யாலுமா? ) வரை எல்லாவருக்கும் நின்று பதில் சொல்லியாகவேண்டிய சூழ்நிலை தான் இங்கே பெரும்பாலும். மேற்கிலே, நிலைமை அத்தனை மோசமில்லை என்று நினைக்கிறேன். அதைத்தான் சொல்ல வந்தேன்.
செப்டம்பர் 11, 2007 at 6:05 மு.பகல்
இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடயவை. ஒன்றின் காரணமாய் மற்றது நடக்கிறதென நினைக்கிறேன்.
செப்டம்பர் 11, 2007 at 6:22 மு.பகல்
I just want to record my experience about the topic which Mr.Prakash and Mr. Selvaraj are conversing.
We hire Russian research ships for our deep sea operations. All house keeping jobs onboard are done by ladies. I sailed few times as chief scientist in those vessels. There was a lawyer (age 32) and a Marine Geologist(age 48) worked as house keeping maids.
Their responsibility includes cleaning toilets.
When I asked them about continuing their previous white collar profession, they were sure of that after few years in Russia.
Does this add one more perspective?
செப்டம்பர் 11, 2007 at 8:17 மு.பகல்
I feel that the ATTITUDE of the individual who takes a job lower than his real profession, also matters..
செப்டம்பர் 11, 2007 at 11:21 மு.பகல்
தலை சுத்துது.
மங்களூர் சிவா