பாஷா அமெரிக்கா
செப்டம்பர் 14, 2007
வரிசையில் எனக்கு முன்னால் ஒரு சல்வார் கமீஸ் யுவதி. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்காக DMV (Department of Motor Vehicles) சென்றிருந்தேன். இந்த மாதிரி அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமானால் முதலில் Q-Matic இயந்திரத்திடமிருந்து டோக்கன் வாங்க வேண்டும். பின்பு நாற்காலியில் கொஞ்ச நேரம் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஓர் எலக்ட்ரானிக் குரல் உங்கள் டோக்கன் எண்ணை அழைத்து, எந்த கவுன்ட்டருக்கு நீங்கள் போக வேண்டும் என்பதைக் குறிப்பிடும்.
சரி, சல்வார் கமீஸ் யுவதிக்கு வருவோம். அவர் டோக்கன் வாங்கிக் கொண்டு இருக்கையில் அமராமல், நேராக ஒரு கவுன்ட்டர் அருகே போய் உள்ளிருந்த நபரிடம் என்னவோ சொல்லி விட்டு வந்தார். (தனது டோக்கன் எண்ணைச் சொன்னார் என்பது பின்பு தெரிந்தது.)
பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் முன்னர் கிசுகிசுத்து விட்டு வந்த அதே கவுன்ட்டருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதற்குப் பக்கத்தில் இருந்த கவுன்ட்டருக்கு சற்று நேரத்தில் நான் அழைக்கப்பட்டேன்.
அங்கே நின்றிருந்த பத்து நிமிஷங்களும் பக்கத்து கவுன்ட்டரில் அட்சர சுத்தமான ஹிந்தியிலேதான் சம்பாஷணை நடந்தது. நானிருப்பது வாஷிங்டனா, புது டெல்லியா என்று ஒரு விநாடி எனக்குக் குழப்பம். அமெரிக்காவில் எந்த அரசாங்க அலுவலகத்திலாவது தமிழில் மட்டுமே பேசி வேலையை முடித்துக் கொண்டு வர முடியுமா என்று தேவையில்லாமல் யோசித்தேன்.
ஹிந்தி படித்துத் தொலையுங்கள் என்றால் யாராவது கேட்கிறீர்களா !



செப்டம்பர் 15, 2007 at 5:49 மு.பகல்
I remember that u can understand hindi well….?
செப்டம்பர் 15, 2007 at 6:51 மு.பகல்
அது பஞ்ஞாபியா இருந்திருக்குமோ?
செப்டம்பர் 15, 2007 at 7:21 மு.பகல்
@AKK: Yes, I can understand Hindi.
@tamilan: பஞ்சாபிகளும், குஜராத்திகளும் இங்கு பெருமளவு இருக்கிறார்கள். எனினும் அந்த உரையாடல் ஹிந்தியில்தான் நடந்தது.
செப்டம்பர் 15, 2007 at 12:22 பிற்பகல்
லண்டனில் ஒரு புகையிரதநிலையத்தில்,
ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நிலையத்தின் பெயரும், சில சைகைகளுக்கான விளக்கங்களும் எழுதப் பட்டிருந்தன.
ஆச்சரியம் ஒரு புறமும், தமிழிலும் இருக்கலாமே என்ற ஆதங்கம் மறுபுறமுமாய் நான் புகையிரதத்துக்குக் காத்திருந்தேன்.
செப்டம்பர் 15, 2007 at 2:55 பிற்பகல்
நாம் தமிழ் மொழியை சேர்க்க சொன்னால், மொழிபெயர்த்து தந்தால் (உடல் நல பட்வங்களை) மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார்கள். கலாசார துறையினருக்கு தொலை பேசி சேர்ந்துகொள்ளலாம். இங்கே நிய்ஜெர்சியில் என்னால் முடிந்தவரை நிறைய படிவங்களை தமிழ்ப்படுத்தி இருக்கிறேன்.
செப்டம்பர் 15, 2007 at 3:03 பிற்பகல்
@chandravathanaa: அது செய்தி !
@பத்மா அர்விந்த்: தகவலுக்கு நன்றி.