மின்னஞ்சல் செக் லிஸ்ட்
ஜூலை 29, 2008
மின்னஞ்சல் எழுதி முடித்ததும் சரி பார்க்க வேண்டிய விஷயங்களில் சில.
- படிக்கப் போகிறவரை மனதில் வைத்து எழுதினோமா ?
- சுருக்கெழுத்துக்களையும், கலைச் சொற்களையும் முடிந்தவரை தவிர்த்திருக்கிறோமா ?
- தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்யப்பட்டதா ?
- படிக்க வேண்டியவர் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் எழுதினோமா ?
- இது நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுமா, அல்லது எதிர்மறையாய் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டா ?
- எதிர் பார்ட்டியின் ஆர்வம், எடுத்துக்கொள்ளும் திறன் முதலானவற்றை மனதிலிறுத்தி அதற்குத் தகுந்தாற்போல் தகவல் வடிவமைக்கப் பட்டுள்ளதா ?
- ஒவ்வொரு வாக்கியமும் முழுமையாய் உள்ளதா ?
- செயப்பாட்டு வினைகளை நீக்கி செய்வினைகளால் எழுதப்பட்டுள்ளதா ?
தொழில்முறை கடிதங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் எல்லா வகை எழுத்தாக்கங்களுக்கும் பயன்படும் வண்ணமே உள்ளது. முழுவதும் படிக்க இங்கே செல்லவும்.
பின்குறிப்பு: இதில் அரசியல் அல்லது சச்சரவு எதுவும் இல்லை. உள்ளபடியே வெட்டி பாலாஜி, சாரு நிவேதிதா சர்ச்சையைப் படித்ததும் இந்த ஆவணம் நினைவுக்கு வந்தது. யான் படித்ததை பெறுக இவ்வையகம்.



ஜூலை 29, 2008 at 9:33 பிற்பகல்
செய்ய வேண்டிய செயல்கள் அனைத்த்க்குமே இது மாதிரி ஒரு ஆவணம் தேவைப்படுகிறது இக்காலத்தில். இயல்பாகவே இவை அனைத்தையும் உள்ளடக்கி மடல் எழுதிய காலங்கள் மறைந்து விட்டன.
ஜூலை 29, 2008 at 9:49 பிற்பகல்
பின்குறிப்பு நல்லா இருந்துச்சுங்க.
ஜூலை 30, 2008 at 4:54 மு.பகல்
Very nice.
Can I suggest a change to the link to the above document to something like this…
தொழில்முறை கடிதங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் எல்லா வகை எழுத்தாக்கங்களுக்கும் பயன்படும் வண்ணமே உள்ளது.
ஜூலை 30, 2008 at 5:25 மு.பகல்
@Cheena ( சீனா ): வெளியே கிளம்பிச் சென்ற பின் வீட்டைப் பூட்டினோமா என்ற சந்தேகம் போலத்தான் மின்னஞ்சல் அனுப்பிய பின் யோசிக்கும் பழக்கம் இந்த அவசர யுகத்தில் அடிக்கடி நேர்கிறது.
@ila: பின்குறிப்பு மட்டும்தானா ?
@blj: Thank you. I have included rel attribute to the anchor as you suggested.
ஜூலை 30, 2008 at 11:51 மு.பகல்
மின்னஞ்சல் – தமிழ். செக் லிஸ்ட் ஆங்கிலமா? அது சரி!!
ஜூலை 30, 2008 at 12:25 பிற்பகல்
@Reader Digests:
பேரை ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டு தமிழில் பின்னூட்டமா ? அது சரி.
ஆகஸ்ட் 1, 2008 at 4:32 மு.பகல்
Sorry, I was not suggesting the rel=nofollow. A link text should at best describe what the content is, rather than ‘more info’, ‘read more’, etc. Just our little effort to make the Internet better.
ஆகஸ்ட் 1, 2008 at 5:57 மு.பகல்
blj,
Later I realized what you are suggesting, Usually I do that. You can see that in my other posts. Because it is a translation of excerpt from some one’s document I wanted to avoid the confusion and wanted to clearly point the external document.