
- இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??
- ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.
- நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..
- சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.
- இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.
- மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!
- அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!
- நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.
- தூக்குடா அவன..
- நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம்.
- உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..
- என் அன்னையின் மேல் ஆணை..
- யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.
- அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…
- தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…
- எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.
- நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக் குடுத்தாதான் எனக்கு நிம்மதி.
- என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டீங்களே..
- உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன செய்யணும்?
- ஏய்ய்ய்ய்ய்ய்ய்!
- என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!
- என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை பாக்கிறமாதிரியே இருக்கு.
- ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??
- ஏ.. யாருடி அவன்..?
- சார்.. போஸ்ட்..!!
- கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
- ஒரு பொண்ணு நினைச்சா…
- இத்துடன் கோர்ட் கலைகிறது.
- நான் இப்ப எங்கிருக்கேன் ?
- எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.
- ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..
- நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு வந்திருக்கறது…
- ……..
தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள் என்னென்ன என்று ஒரு போரடித்த பொழுதில் யோசித்தபோது ஞாபகம் வந்தவை இவை. ஏற்ற இறக்கங்களுடன் படிக்கவும். நீங்களும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்லலாம்.


chinnappaiyan 12:08 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
1. கங்ராஜுலேஷன்ஸ்… நீங்க அப்பாவாக போறீங்க!!!
2. பணத்தை எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளியே இருக்கற பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்துடுங்க!!!
Yaathirigan 12:17 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
நாமக்கல் சிபி 1:26 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
தயவு செஞ்சி என்னை மறந்துடுங்க ராஜு!
மருதநாயகம் 1:45 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
உங்கள பத்தி முழுசா தெரியாம ஏதேதோ பேசிட்டேன் என்ன மன்னிச்சுருங்க
Rajathi Raj 1:55 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
A few from me:
பெத்தமனம் பித்து பிள்ள மனம் கல்லுனு சும்மாவா சொன்னாங்க
…என்ன செய்வேனு எனக்கே தெரியாது
இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா????
வயித்தில நெருப்ப கட்டிகிட்டு இருக்குறது எனக்கு தான் தெரியும்…
ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா??
Bast**d
அவன மொத்த dept வல வீசி தேடிட்ருக்கு
மாத பிதா குரு தெய்வம்….
சட்டம் தன்னோட கடமைய செய்யட்டும்
தோள்ளயும் மார்லயும் தூக்கி வளத்த என்ன பாத்து….
கல்யாணங்ரது சொர்க்கத்துல நிசசயிக்கபடுது
இந்த உலகத்தில அனாதைனு யாரும் இல்ல
என்ன எதுக்க இனிமே ஒருத்தன் பொறந்து தாண்டா வரணும்…
பணத்தால எதையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்காதீங்க
காதல்னா…..
sridharkannan 2:35 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
நான் இப்ப எங்கிருக்கேன் ?
Rajathi Raj 5:36 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
Sridhar,
Chithran has already said… # 29
Raj
sridharkannan 5:42 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
Raj,
நான் சும்மா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. நீங்கள் சீரியஸ் ஆகா எடுத்து கொள்ள வேண்டாம் ..
sandanamullai mugilvananan 6:57 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
Sakthi 8:55 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
வில்லன்: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஹீரோ: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
துளசி கோபால் 11:58 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் |
25. நம்ம டுபுக்கு சாருக்கு எடுத்து வச்சுருங்க:-)
சித்ரன் 4:36 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
வாவ்.. எல்லார்கிட்டேயும் பெரிய லிஸ்டே இருக்குது போல..
நன்றி!
இன்னும் சிலது:
1. பொண்ணு அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா.
2. ஆங்.. பை தி பை.. இது என்னோட………
3. அவ வயித்துல ஒரு புழு பூச்சி உண்டாகாதான்னு இத்தனை வருஷமாஆஆஆ..
4. அம்மா! எனக்கு மெட்ராஸ்ல வேலை கிடைச்சிருச்சு. மாசம் ஆஆஆஆயிரம் ரூபா சம்பளம்.
5. இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தா எப்படி? (பஞ்சாயத்து ஸீன்)
6. எட்றா வண்டிய….
7. டேய்.. நீ யாராயிருந்தா எனக்கென்னடா?
8. வேண்டாம் முதலாளி! என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க!
9. மிஸ்டர் ராஜா! வெல்டன். சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க.
10. உன் கைய காலா நெனச்சுக் கேக்கறம்பா..
11. இந்த உதவிய நான் என் வாழ்நாள் பூரா மறக்கமாட்டேன்.
துளசி கோபால் 4:45 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
சரியான நேரத்துலே கொண்டுவந்துட்டீங்க. இன்னும் பத்து நிமிசம் லேட்டாயிருந்தா காப்பாத்தி இருக்க முடியாது.
SRIKANTH 7:54 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
NAN MADURA KARAN DA
NANGALLAM
ஷாஜி 7:58 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
super collecton
Robot 8:39 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
naakula narambilama pesathinga….
itha maranthutinga sir…
manikandan 9:19 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
wonderful collection..laughed like anything after a long time…
we add these also…
oru student nenacha…
neenga ilatha vazhaiya enala nenachu kooda parka mudiyathu…
சித்ரன் 1:02 பிற்பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
Rajathi Raj : நீங்க சொன்ன மாதிரி திரையில் அதிகம் பேசப்பட்ட வசனம் “காதல்ங்கறது…” -ன்னு நினைக்கிறேன்.
இன்னும் பேசிகிட்டே இருக்காங்கப்பா!
r k prabu 1:28 பிற்பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
mappillai romba thangamanavaru
R.Kanagasabai 11:03 பிற்பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் |
Very Good Collections
Some Words as follows:
Ayya Pichai Podungayya……
Autooooo…….
Taxiiii……..
Pathinettu Patti Gramam…..
Ramachandran Usha(உஷா) 12:19 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
ஐ ஹேட் யூ – ஈரோயினி, ஈரோக்கிட்ட அழுதுக்கிட்டே சொல்லிட்டு ஓடுவது.
அவன தூக்கிடுங்க- சமீபக்கால வசனம்.
பிரேம்ஜி 1:19 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
டாக்டர் சொல்லுவார்.It is a medical miracle.அவர் உயிர் பொழச்சது ரொம்ப அதிசயம்.
பிரேம்ஜி 1:22 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
I am proud of you.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
சித்ரன் 2:15 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
உஷா: அவன தூக்கிடுங்க -வை “9வது வசனமாக பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.” எனினும் anyway (ரைமிங் பாத்தீங்களா!) நன்றி.
aswin 3:23 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
innaki seththa naalakki paal
vithiyai yaralum matra mudiyathu.
Dr :sorry.nanga evvalavo try panniyum avara kaappatha mudiyala (kandippa intha edathula dr kannadiya kalattuvar)
navin 10:24 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
iyyo naa yenna pannuven?
petha vayiru patthi eriyudu
kappatunga
பினாத்தல் சுரேஷ் 12:44 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
1. சேலை மேலே முள்ளு விழுந்தாலும் முள்ளு மேலே சேலை விழுந்தாலும்..
2. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சு..
சித்ரன் 12:59 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
இதுவும்..
* அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத ஒனக்கு என் பொண்ணு கேக்குதா?
* நாழியாயிடுத்து.. பொண்ண அழைச்சுண்டு வாங்கோ!
Rajathi Raj 2:58 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி
மற்றும் ஒன்று:
கெட்டி மேளம் கெட்டி மேளம்….
Rajathi Raj 3:17 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
உங்களோட “6. எட்றா வண்டிய…” பார்த்ததும் ஞாபகத்திற்க்கு வந்தது:
‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஒரு காட்சி: ராதா ரவி விஜயை தேடி அவர் வீட்டுக்கு வந்து கத்திட்டு போகும்போது…எட்றா வண்டிய…னு sound-அ சொல்லிட்டு அவரே ஓட்டிட்டு போவார்
Sriram 10:57 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் |
Enna vittudu … Enna vittudu … Plz…
(Heroine or Hero’s sister during raping scene)
athirai 7:34 மு.பகல் on பெப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் |
1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி?.
2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும்! இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .
3.வில்லன்: எவன் லே இந்த சிவா?. “அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்”.
4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.
5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்
5.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.
6.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா ?).
மேலும் இது போன்ற சினிமா கடிக்களுக்கு:
http://aruvadai.blogspot.com/2008/12/blog-post_3839.html
tnvmaniraj 10:07 மு.பகல் on பெப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் |
மிகவும் சுவையாக இருந்தது!
சித்ரன் 10:34 மு.பகல் on பெப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் |
லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே இருக்குதே.
மேலும் சில :
* ஹலோ.. யார் பேசறது?
* கமிஷனர் : இந்தக் காரியத்தை வெற்றிகரமா செய்து முடிக்க நம்ம டிபார்ட்மெண்ட்ல ஒருத்தராலதான் முடியும்.. அவர் பேரு…. (ஹீரோ இண்ட்ரொடக்ஷன்)
* நான் பண்ணின பாவத்துக்கெல்லாம் ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை குடுத்துட்டார்.
* ச்சே! உன்னயெல்லாம் என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுக்கே வெக்கமாயிருக்கு. (இனிமே என் மூஞ்சில முளிக்காத!)
* குண்டடிபட்ட துணை நடிகர்: என்னப் பத்திக் கவலப்பட வேண்டாம்.. நீங்க எப்படியாவது இங்கிருந்து சீக்கிரம் தப்பிச்சு போயிருங்க!
athirai 4:01 மு.பகல் on பெப்ரவரி 3, 2009 நிரந்தர பந்தம் |
More
1. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.
2. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்?.
3. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.
4. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு?).
5. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,
6. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இதெல்லாம் பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).
http://aruvadai.blogspot.com/2009/02/blog-post.html
rajesh 2:03 மு.பகல் on பெப்ரவரி 5, 2009 நிரந்தர பந்தம் |
tamilish is good…… matrum onru (neeum naanum apadiya pazhaganum)
S.Vadivelmurugan 8:53 மு.பகல் on மே 15, 2009 நிரந்தர பந்தம் |
அவன்: அவர் வரட்டும்
மற்றவன்: அதோ அவரே வந்துட்டாரே
சகாதேவன்
KK 2:20 மு.பகல் on ஜூன் 10, 2009 நிரந்தர பந்தம் |
Aazaghukirthu Mugathil illa aathu maanasulathan eeruku!!!!!!!!!!!!!
sethu 8:44 மு.பகல் on ஜூன் 28, 2009 நிரந்தர பந்தம் |
படிச்சி முடிச்சி ஊருக்கு ஹீரோஇன் வந்தவுடன் ….
ரயில் பயணம் எப்பிடிமா இருந்திச்சி ? னு ஹீரோஇன் அம்மா/அப்பா கேட்பாங்க..
அடுத்தது , குளிச்சிட்டு வாம்மா டிப்பன் ரெடியா இருக்கு …னு சொல்லுவாங்க …
sethu 9:08 மு.பகல் on ஜூன் 28, 2009 நிரந்தர பந்தம் |
1) சட்டம் தன் கடமையை செய்யும் …
2) என் தலைய அடமானம் வச்சாவது …. இத முடிப்பேன் …
3) ஜாம்.. ஜாம்… னு கல்யாணத்த நடத்திடலாம்…..
4) சின்ன மீன போட்டுதான் பெரிய மீன பிடிகணும்