அமெரிக்காவில் கிச்சாமி
கிச்சாமி என்று பெயர் வைத்தால் போதும். மேற்கொண்டு எந்த வர்ணனையும் தேவைப்படாது. எப்படிப்பட்ட கேரக்டர் என்று முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாரும் எழுதி தள்ளியிருக்கிறார்கள்.
படிக்கிற காலத்தில் நானும் ஒரு முழு கிச்சாமியாய் இருந்தேன். அமெரிக்கா வந்த பின் முக்கால் கிச்சாமியாய் குறைந்திருக்கிறேன்.

வாழ்க்கையில் எப்போதுமே கிச்சாமிகளுக்கு எதிர்ப்பதங்கள்தான் வேகமாக முன்னேறுகிறார்கள். என் காலேஜ் சீனியர் ஒருவன். என்னை ராகிங் கூட பண்ணியிருக்கிறான். ஸ்ட்ரைக் என்றால் முன்னால் நிற்பான். முதல்வருடன் சண்டை போடுவான். வாரத்தில் பல நாள் பட்டை சாரயம் அடித்து, சட்டையெல்லாம் வாந்தியாகி தெருவில் விழுந்து கிடப்பான். படிப்பை முடிப்பதற்குள் குடல் அரித்து செத்து விடுவான் என்று நினைத்தேன். மாறாக நான் கடைசி வருடம் படிக்கையில் ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினனாக வந்து பங்கேற்றான். துபாயில் வேலை பார்க்கிறானாம்.
அமெரிக்காவிலும் கிச்சாமிகளுக்குப் பஞ்சமா என்ன? ஒரு அமெரிக்க கிச்சாமி பற்றிய கதை இது.
கிச்சாமி
~ சத்யராஜ்குமார் ~
அமெரிக்காவே ஆனாலும் சரி, நான்கு நண்பர்கள் கூடுமிடத்தில் கி்ச்சாமி மாதிரி ஒரே ஒரு அப்பாவியாவது இருப்பான்.
இவ்வளவு பரந்த தேசத்தில் கணவர் மனைவிகளே தாயக்கட்டையை வீசிப் போட்ட மாதிரி கிழக்கும் மேற்குமாய் வீசியெறியப்பட்டு, வாரக்கடைசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, தெய்வ சங்கல்பத்தில் நண்பர்கள் எட்டுப் பேர் வாஷிங்டன் டிசிக்குப் பக்கத்தில் ஒரே ஊரில் மாட்டிக் கொண்டோம்.
…..


என். சொக்கன் 7:24 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
தலீவா,
கதை நல்லா விறுவிறுன்னு படிக்க ஷோக்காதான் இருக்கு – ஆனா கிச்சாமியின் மனைவி சேம் சைட் கோல் ரொம்பவே நெருடுது, ‘தொப்புள் தெரிய புடவை கட்டாதேடின்னு என்னை மிரட்டினாளே அந்தப் பாட்டியா?’ வசனத்தில கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன், ஆனா இவங்களே அவருக்கு ஊத்திக்கொடுக்கும் அளவுக்கு அந்தக் காரணம் போதலை, அதுக்கப்புறம் மறுபடி லாஜிக் தவறிப்போச்சுன்னு நினைக்க்றேன்!
ஒருவேளை நான் என்னிக்காச்சும் அமெரிக்காவை எட்டிப்பார்த்திருந்தா இந்தக் கதை பிடிக்குமோ என்னவோ
- என். சொக்கன்,
பெங்களூர்.
சத்யராஜ்குமார் 9:28 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
சொக்கன், குட்டுக்கு நன்றி!
மணிக்கட்டை முழங்காலில் முட்டுக் குடுத்து கையில் பீர் பாட்டிலோடு பார்ட்டி விலங்குகளாய் உட்கார்ந்திருக்கும் சில பாவைகளை பார்க்கும்போது இவர்களுக்கு கிச்சாமி மாதிரி கணவன் வாய்த்தால் என்னாகும் என்று ஒரு சிறு பொறி தட்டியது.
என். சொக்கன் 11:44 பிற்பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம்
அச்சச்சோ, குட்டெல்லாம் இல்லை, நான் சொன்னமாதிரி, இது அங்கே வாழ்க்கைமுறையாக இருக்கலாம், எனக்கு அது தெரியாமல் இருக்கலாம், பார்வைக் கோணம் மாறுகிறது, அவ்வளவுதான்
// பீர் பாட்டிலோடு பார்ட்டி விலங்குகளாய் உட்கார்ந்திருக்கும் சில பாவைகளை பார்க்கும்போது இவர்களுக்கு கிச்சாமி மாதிரி கணவன் வாய்த்தால் என்னாகும் என்று ஒரு சிறு பொறி தட்டியது//
இது ரொம்ப நல்ல பொறியா இருக்கு, ஆனா கதையில அது தெளிவா வரலை-ன்னு நினைக்கறேன், கிச்சாமியின் நண்பர்கள்மேல அதிக ஃபோகஸ் விழுந்துடுச்சு, மனைவி கதாபாத்திரத்தை அதிகம் தொடலை – இந்தக் கதையை இன்னொரு angleல இருந்து திரும்ப எழுதுங்களேன் – ஆங்கிலத்தில் இப்படி ஒரே கதையை ரெண்டு கதாபாத்திரங்களின் கோணத்தில் சொல்வது பிரபலமாக இருக்கிறதாமே!
- என். சொக்கன்,
பெங்களூர்.
SnapJudge 5:20 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம்
சொக்கன்,
—ஆங்கிலத்தில் இப்படி ஒரே கதையை ரெண்டு கதாபாத்திரங்களின் கோணத்தில் சொல்வது பிரபலமாக இருக்கிறதாமே!—
நானறிந்த மட்டும் இல்லை. புகழ்பெற்ற பத்திரிகைகள், வலையகங்களில் ஒரே ஆசிரியரே இவ்வாறு (ஒரே கதையை) எழுதிப் பார்த்ததில்லை. ஆனால், நய்பால், ருஷ்டி போன்ற பலரின் ஏதாவதொரு (ஒன்றிரண்டுதான்) கதையை இந்த மாதிரி எழுதி வாசித்திருக்கிறேன்.
இரண்டு பார்வை தருவதெல்லாம் பழசாகி விட்டது. துவக்க காலத்தில் இந்த மாதிரி எழுதிப் பழகினார்களாக இருக்கும். இப்பொழுது, அது முழுக்க முழுக்க எழுத்தாளரின் விசிறிகளின் களம்.
உங்களுக்குத் தெரிந்த உதாரணங்களையும் சொல்லுங்களேன்.
சத்யராஜ்குமார் 6:34 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம்
சொக்கன்:
நன்றி. கொஞ்ச நாள் கழித்து எழுதலாம்.
பா.பா:
எஸ். பாலச்சந்தரின் பழைய தமிழ்ப் படம் ஒரே சம்பவம் பலரின் பார்வையில் வெவ்வேறு விதமாய் நகரும். விசாரணை உத்தியை அதற்கு பயன்படுத்தியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். Run Lola Run என்ற ஜெர்மன் திரைப்படத்திலும் ஒரே சம்பவத்தொடர் மூன்று கோணங்களில் அடுத்தடுத்து நடக்கும். ஒரு சில வினாடி கால இடைவெளியில் நிகழ்வு தொடங்குவதை அதற்கான உத்தியாக கையாண்டிருப்பார்கள்.
ஒரே கருவை வேறு வேறு விதமாய் எழுதும் பழக்கம் என்னிடம் உள்ளது. அப்படி பல கதைகள் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளேன். கால இடைவெளி விடும்போது அவை ஒரே கருக்கள் என்றே தெரியாது. தற்சமயம் ‘மைய விலக்கு’ கருவை வைத்து 3 சிறுகதைகள் எழுதினேன். மிச்சமிரண்டை பின்னர் வெளியிடுகிறேன். என்னுடைய ஒன்பதிலிருந்து ஐந்து வரை, கடல் கடந்தவன் கதைகளை உற்று கவனிக்கவும். டி ஸி பிச்சைக்காரன் பின்னணியில் இன்னுமொரு கதை எழுதியுள்ளேன். அதையும் பிறகு வெளியிடுகிறேன். தமிழோவியத்தில் 3D கதைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.
எதனால், எப்படி அல்லது ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதற்கான விடை தமிழோவியத்துக்கு சமீபத்தில் அனுப்பி வைத்திருக்கும் சிறுகதைகள் பற்றிய தொடரில் உள்ளது.
SnapJudge 8:06 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம்
—எதனால், எப்படி அல்லது ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதற்கான விடை தமிழோவியத்துக்கு சமீபத்தில் அனுப்பி வைத்திருக்கும் சிறுகதைகள் பற்றிய தொடரில் உள்ளது.—
ஆர்வத்தைத் தூண்டுகிறது!
இந்த பன்னோக்கு பார்வையை ஒரே கதையில், உரையாடல் மூலமாகவோ அல்லது பல கதாபத்திரங்கள் நினைப்பதாகவோ சொல்லி விடலாமே?
என். சொக்கன் 9:03 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம்
//ஒரே கதை – இரண்டு கோணம்//
Twilight வரிசைக் கதைகளின் முதல் கதை கதாநாயகி கோணத்தில் இருக்கும், அதையே கதாநாயகன் கோணத்தில் ஆசிரியர் மீண்டும் எழுதினார், புத்தகமாக வரவில்லை என்று நினைக்கிறேன் – நெட்டில் பிடிஎஃப் (அதிகாரப்பூர்வமாக) பார்த்த நினைவு. வேறு உதாரணங்கள் ஞாபகம் வரவில்லை – இதுபற்றிய என் ஊகம் தவறாகவும் இருக்கலாம்.
//சிறுகதைகள்பற்றிய தொடர்//
ஆஹா, வாழ்த்துகள் & ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கிறோம்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
amuthakrishna 7:26 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
நிஜமாவே நடந்த மாதிரி இருக்கு கதை..என் தம்பி கூட இந்த கிச்சாமு போல தான். அதன் வாசமே ஆகாது.
சத்யராஜ்குமார் 9:29 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி அமுதகிருஷ்ணா! or (அமுதா கிருஷ்ணா?)
பினாத்தல் சுரேஷ் 8:28 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
//கிச்சாமி, ஷாருக்கான் போன்ற அப்பாவிகள் எப்படி கரெக்டாய் மாட்டிக்கொள்கிறார்கள் என்று அத்தனை கவலையிலும் நான் வியந்து போனேன்//
என்னாது? லாஸ்ட் பால்லே கூக்ளியா?
சத்யராஜ்குமார் 9:30 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
சுரேஷ், ஹிஹி!
SnapJudge 8:59 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
ஆரம்பம் தூள்.
ஆனால் மிஸஸ் கிச்சாமியை இந்த கேங்கில் நுழைத்திருக்கலாம். இன்னும் டெசிக்னேடட் ட்ரைவராய் கிச்சாமி தொடர்கிறான்கிற மாதிரி. ஓ… இது உங்க கதை இல்ல
என்னவாக இருந்தாலும்…
—கீழ் வீட்டு அமெரிக்கன் அன்னிக்குப் பார்த்து ராத்திரி பன்னண்டு மணிக்கு—
இது இடிக்குது. நம்ம ஆளுங்கதான் இப்படி அர்த்த ராத்திரியிலும் உரிமையோடு (aka இங்கிதமில்லாமல்) உதவி கேப்பாங்க; செய்யணும்னு நெனப்பாங்க.
இந்த ஊர்க்காரங்க, கேப் பிடிச்சுப் போயிடுவாங்க
சத்யராஜ்குமார் 9:36 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
/இது இடிக்குது./
கதையின் அந்தப் பகுதி ஓர் உண்மை சம்பவம். நான் சின்சினாட்டி போய் நம்ம கிச்சாமிக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதாய் இருந்தது. கடைசியில் அட்டார்னி சில பேப்பர்களை பேக்ஸ் பண்ணினாலே போதும் என்று சொல்லி விட்டார். ராத்திரி கூப்பிட்டவர் வெள்ளைக்காரர்தான்.
ஆனால் உங்கள் பாயிண்ட்டை ஒத்துக் கொள்கிறேன். கதைகளில் நிஜத்தை அப்படியே எழுத முடியாது. கூடாது.
SnapJudge 5:22 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம்
நல்ல கிச்சாமியை இப்படி கெடுத்துட்டீங்களே
—நிஜத்தை அப்படியே எழுத முடியாது. கூடாது—
REKHA RAGHAVAN 9:33 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
//இவ்வளவு பரந்த தேசத்தில் கணவர் மனைவிகளே தாயக்கட்டையை வீசிப் போட்ட மாதிரி கிழக்கும் மேற்குமாய் வீசியெறியப்பட்டு, வாரக்கடைசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க//
நல்ல வர்ணனை. அருமையான விறுவிறுப்பான நடை. லேட்டஸ்ட் சம்பவத்தையும் இணைத்து கதையை முடித்திருப்பது புதுமை.
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார் 9:40 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரேகா ராகவன். நீங்கள் புதிதாய் வலைப்பதிவு துவங்கியிருப்பதை பார்த்தேன். நிறைய எழுதுங்க. பத்திரிகையில் வெளியான உங்க கதைகளையும் போடுங்க.
சித்ரன் 10:52 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
ஹாஸ்யமா செம ஃப்ளோவில எழுதியிருக்கீங்க.
ஷாருக்கானை கடைசில கொண்டு வந்து சேர்த்தீங்க பாருங்க. சூப்பர். ஆனா அவரும் அப்பாவியான கிச்சாமிதான்னு எத வெச்சு சொல்றீங்க? (அவரு ஒரு செயின் ஸ்மோக்கர்னு அவர் படத்தில அஸிஸ்டெண்ட் கேமராமேனா ஒர்க் பண்ணின என் ஃப்ரெண்ட் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். அது மாதிரி நெறைய செயின் இருக்க வாய்ப்பிருக்கிறது)
அமெரிக்கா சரணம் கிச்சாமி -ன்னு கூட தலைப்பு வெச்சிருக்கலாம்.
சத்யராஜ்குமார் 11:13 மு.பகல் on ஆகஸ்ட் 25, 2009 நிரந்தர பந்தம் |
சித்ரன், அது ஹாஸ்யத்துக்காக! கிச்சாமிகள் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக முடியும்?
Twitter Trackbacks for அமெரிக்காவில் கிச்சாமி « இன்று – Today [inru.wordpress.com] on Topsy.com 1:14 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம் |
[...] அமெரிக்காவில் கிச்சாமி « இன்று – Today inru.wordpress.com/2009/08/25/uskichchaa – view page – cached #இன்று – Today RSS Feed இன்று – Today » அமெரிக்காவில் கிச்சாமி Comments Feed இன்று – Today $0.29 – $2.75 – $7.75 ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் — From the page [...]
சத்யராஜ்குமார் 5:35 பிற்பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம் |
கிச்சாமிகளுக்கு நிம்மதி தரும் தகவல் ஒன்றை பத்மா அர்விந்த் ட்விட்டரில் தந்துள்ளார்
—————————————————–
>>>>
DWI பற்றிய சத்யராஜ்குமார் கதையொன்று படித்தேன். இது போல் கைதானால் சொந்த ஜாமீனிலேயே மறுநாள் வெளியே வந்துவிடலாம். போதை தெளியும்வரைதான் லாக்கப்.
<<<>>>
மது அளவும் நேரம் ஆக குறையும். எத்தனை நேரம் குடித்தார், வெறும் வயிற்றீலா, உடல் எடை, எந்த வகை மது என பல காரனங்கள் மது அளவை கட்டுப்படுத்தும்
<<<<
http://twitter.com/padmaa/status/3557628534
பத்மா அர்விந்த்துக்கு என் விளக்கம்:
———————-
இது ஸ்டேட்டுக்கு ஸ்டேட் மாறுமா தெரியவில்லை. நான் ஒஹையோவில் இருந்த போது சின்சினாட்டியில் மாட்டிக் கொண்ட நண்பரின் நண்பரை கையெழுத்து போட்டு வெளியே எடுத்து வர உதவுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டேன். முதல் நாள் அவர் கால் செய்த நண்பர் உதவ மறுத்து விட்டதாக தெரிகிறது. இரண்டாம் நாள் மேற்கில் வசிக்கும் எனது நண்பரின் உதவியை நாடியுள்ளார் அந்த கிச்சாமி. மனைவிக்கு அதிகம் விவரம் போதாது என்று எண்ணி(?!) நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். சம்பவம் நடந்தது 2005-ல்.
Eswar 2:12 பிற்பகல் on ஆகஸ்ட் 27, 2009 நிரந்தர பந்தம் |
//ஒரு சின்னப் புன்னகையில் தாங்கிக் கொண்டு அவர்கள் முகத்தில் கோக்கை பூசினான்.//
ரசித்தேன்.
சத்யராஜ்குமார் 8:01 பிற்பகல் on ஆகஸ்ட் 27, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ஈஸ்வர்!