தமிழின் முதல் மொபைல் நூல்
1996-97 வாக்கில் சொந்த இணைய தளம் வைத்திருந்தேன். குமுதம், விகடன் போன்ற வாராந்திரிகளில் வெளியான எனது சிறுகதைகள் சிலவற்றை அதில் தொகுத்திருந்தேன். இணையம் அதிகம் பரவலாகியிருக்காத நிலையில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கு எப்படி அதை பலருக்கும் எடுத்துச் செல்வது என்பது அப்போது தெரியவில்லை.

அது போலவே இன்னும் செல்பேசி தளத்தில் தமிழ் படைப்புகள் பரவலாகியிருக்காத இத்தருணத்தில் இப்போது Android Mobile-ல் முதல் முறையாக தமிழில் ஒரு மின்னூல் கொண்டு வந்துள்ளேன். முழுக்க முழுக்க இது ஒரு பரிசோதனை முயற்சி. இதை ஒரு பீரியாடிக் போல செயல் பட வைக்க உத்தேசம். ஆன்ட்’ராய்ட் போன் அளிக்கும் மென்பொருள் இற்றைப்படுத்தும் வசதி மூலமாக எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் புது கதை அல்லது கட்டுரை தொகுப்புகள் வாசகருக்குக் கிடைக்கும்.
விரைவில் ஐ போனிலும் இதை அறிமுகப்படுத்த உள்ளேன். ஆப்பிள் நிறுவனம் அனுமதி வழங்கும் பட்சத்தில்.
இப்போதைக்கு ஆண்ட்’ராய்ட் போன் உபயோகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் eNool என்னும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.
Android Market Place-ல் eNool அல்லது tamil என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.
UPDATE: eNool ஐபோனிலும் இப்போது கிடைக்கும்.

இலவசக்கொத்தனார் 7:58 பிற்பகல் on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
சீக்கிரமே ஐபோனில் வரப் பிராப்திரஸ்து!
சத்யராஜ்குமார் 8:06 பிற்பகல் on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி
என். சொக்கன் 10:39 பிற்பகல் on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துகள்
ஆண்ட்ராய்ட், ஐஃபோன் இரண்டுமே கைவசம் இல்லை, நோக்கியாமீது நீங்கள் கருணை காட்டும்போது பார்த்துக் கருத்துச் சொல்கிறேன்
பெங்களூரு.
சத்யராஜ்குமார் 7:46 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
சொக்கன், வாழ்த்துக்கு நன்றி!
சித்ரன் 10:51 பிற்பகல் on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
முதலில் ஆ கிடைக்கவேண்டும் பிறகுதான் இ.
நீங்கள் 2001-ல் எலெக்ட்ரிக் ட்ரெயினில் (மாம்பலம் டு கிண்டி) போகும்போது PDA -வில் தமிழ் நிறுவி சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும்போதே இது மாதிரி பின்னாளில் ஏதாவது நடக்கும் என்று ஊகித்தேன்.
வாழ்த்துக்கள் உரித்தாகுக.
சத்யராஜ்குமார் 7:48 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
ஆண்ட்’ராய்ட் ப்ரொக்ராம்கள் இன்னும் கொஞ்ச நாளில் கூகிள் டி.வி வந்த பின் டிவி திரையில் கூட செயல்படும். அப்போது டி இருந்தால் கூட போதும்!
கௌதமன் 11:53 பிற்பகல் on ஜூன் 19, 2010 நிரந்தர பந்தம் |
திரு என் சொக்கன் அவர்கள் கூறியுள்ளதை, நானும் வழிமொழிகிறேன்.
கே ஜி கௌதமன்
பெங்களுரு
சத்யராஜ்குமார் 7:54 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
கௌதமன், நன்றி. ஆனால் நோக்கியா அப்ளிகேஷன்கள் குறித்து எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.
பத்மநாபன் 3:15 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
பெருமைக்குரிய விஷயம் சத்யா ….எல்லா மொபைலிலும் டவுன் லோட் செய்யமுடியுமா என்பதயும் விளக்குங்கள். முடியும் என்றால் என்ன செய்யவேண்டும்….
சத்யராஜ்குமார் 7:56 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
இல்லை, ஆன்ட்’ராய்ட் ப்ளாட்பார்ம் இயக்க வல்ல கருவிகளிலேதான் இந்த அப்ளிகேஷன் செயல்படும்.
பத்மா அர்விந்த் 6:35 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
பாராட்டுக்கள். நிறைய பேருக்கு மிக உதவியாக பயணிக்கும் போது வசதியாக இருக்கும்.
சத்யராஜ்குமார் 7:59 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பத்மா அர்விந்த்.
சீனா 7:53 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி சத்யராஜ்குமார் – வெற்றி பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
சத்யராஜ்குமார் 8:06 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி சீனா! இது மிகச் சிறிய ஒரு முயற்சிதான்.
காஞ்சி ரகுராம் 9:34 மு.பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
நேற்று கிண்டிக்கு ரயிலில் பயணித்தபோது, ஒரு கல்லூரி யுவதி iPad-ல் ஏதோ ஒரு eBook-ஐ படித்துக் கொண்டிருந்தார். வேகு சீக்கிரமே ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு அனுமதி வழங்குவதாகுக. யுவன் யுவதிகளெல்லாம் iPhone-னும் iPad-டும் வாங்கி தங்கள் படைப்புகளை படிப்பதாகுக. தங்கள் பெயர் தமிழ்(பட்டி) தொட்டியெல்லாம் சென்றடைவதாகுக.
சத்யராஜ்குமார் 3:53 பிற்பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
ரகுராம், இனி வருங்காலம் மொபைல் கருவிகள்தான், சந்தேகமில்லை.
dhandapanidevarajan 1:49 பிற்பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
ஐயா,
தமிழினை iPhone, android இல் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி…
உங்களுடைய iPhone app பற்றி ஒரு சந்தேகம்.. அதில் எப்படி font rendering சரி வர செய்தீர்கள்… நானும் தமிழில் ஒரு iPhone app செய்ய முயற்சித்தேன்.. ஆனால் font சரியாக வரவில்லை…. எனக்கு இது சார்பாக உங்கள் உதவி கிடைக்குமா…
சத்யராஜ்குமார் 3:57 பிற்பகல் on ஜூன் 20, 2010 நிரந்தர பந்தம் |
iPhone, Android இரண்டிலுமே தமிழ் ரெண்டரிங் சப்போர்ட் இதுகாறும் இல்லை. இன்னும் ஐபோன் அப்ளிகேஷன் செய்து முடிக்கவில்லை. ஆண்ட்’ராய்டில் custom font போட்டுக் கொள்ளவியலும். அப்படித்தான் eNool-ல் தமிழ் வருகிறது.
dhandapanidevarajan 11:54 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம்
நன்றி!! ஐபோனிலும் தமிழ் எழுத்துரு சீக்கிரம் வர எதிர்பார்ப்போம். நானும் ஐபோனிற்கு அப்ளிகேஷன் எழுதுவதால் தமிழ் மொழிக்காக ஏதாவது செய்ய ஆவலுடன் இருக்கிறென்… அதற்கு தங்களுடன் இணைந்து செய்ய வாய்ப்பிருந்தால் தெரியபடுத்தவும்.. !!!
ந.ர.செ. ராஜ்குமார் 3:10 பிற்பகல் on நவம்பர் 12, 2010 நிரந்தர பந்தம்
//ஆண்ட்’ராய்டில் custom font போட்டு…
யுனிகோட் எழுத்துருவையே போட்டுக் கொள்ள இயலுமா? அல்லது TAM/TAB போல பயன்படுத்த வேண்டுமா? ஆண்ட்ராய்ட் இ-நூல் யுனிகோடா?
சத்யராஜ்குமார் 3:25 பிற்பகல் on நவம்பர் 12, 2010 நிரந்தர பந்தம்
யுனிகோட் எழுத்துருவை போட்டுக் கொள்ள இயலும். அப்படி போட்டுக் கொண்டாலும் தமிழ் ரெண்டரிங் சப்போர்ட் இல்லாததால் உடைந்த தமிழையே இப்போதைக்கு படிக்க இயலும். ஆகவே இ நூலில் யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தவில்லை. ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்து வரவுள்ள ‘ஜிஞ்சர்ப்ரெட்’டில் தமிழ் யுனிகோட் சப்போர்ட் கிடைத்தால் பரவாயில்லை.
சத்யராஜ்குமார் 5:06 பிற்பகல் on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம் |
இணைந்து செய்யுமளவு அர்ப்பணிப்பும், நேரமும் இருக்காது. எனினும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். BTW, ஐபோனில் தமிழ் எழுத்துரு வந்து விட்டது!
dhandapanidevarajan 11:51 மு.பகல் on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம்
மிக்க நல்ல செய்தி…. !!!!! ஐ போனில் தமிழ் எழுத்துரு 4.0 வந்துள்ளதா?? அதை பற்றி மேலும் தகவல்கள் எங்கு கிடைக்கும்??
dhandapanidevarajan 11:58 மு.பகல் on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம்
ஒருங்குறி (unicode) rendering தமிழில் ஒழுங்காக வருமா?
நன்றி
சத்யராஜ்குமார் 12:08 பிற்பகல் on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம்
வரும். பார்க்க TrueNext.com
ஆசிப் மீரான் 1:37 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
விரைவிலேயே ஐபோனிலும் வர வாழ்த்துகள்!
சத்யராஜ்குமார் 5:26 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
ஆசிப் மீரான், வாழ்த்துக்கு நன்றி.
ஜி எஸ் ஆர் 10:02 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நிச்சியமாக இனி வருங்காலத்தில் அலைபேசியில் இயங்குதளம் மற்றும் ஒரு ரிமோட் சிஸ்டமாக மாறியிருக்கும் அதனால் தானே இப்போதே பெரிய நிறுவனங்கள் தங்கள் கவணத்தை அலைபேசி பக்கம் திருப்பியிருக்கிறது உதராணத்துக்கு மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளை சொல்லலாம் மேலும் பணப்பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்த்னை இந்த மொபைல் போன்கள் கொண்டுவரும் அநேகமாக 2030க்கு மேல் பணம் நம் கண்களில் பார்ப்பது கடிணம் தான் அந்த இடத்தையும் இந்த மொபைல் போன்கள் ஆக்ரமித்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை
நான் தங்களின் பதிவுக்கு சம்பந்தமேயில்லாமால் எழுதுகிறேன் மன்னிக்கவும் தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
சத்யராஜ்குமார் 6:54 பிற்பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கு நன்றி ஜி.எஸ்.ஆர். மொபைல் தொழில்னுட்பம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பதிவுக்கு சம்பந்தமில்லாமலில்லை!
சண்முகம் 10:24 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி. உங்கள் பணி தொடரட்டும். ஆண்ட்ராய்ட் யுனிகோட் கூட support செய்ய வில்லை. எனது புதிய கைபேசியில் தமிழ் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு இது நல்ல செய்தி. உங்க அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
சத்யராஜ்குமார் 6:55 பிற்பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி சண்முகம்!
yirus.exe 11:28 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
nandri…
முரளி 11:55 மு.பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நன்றாக இருக்கிறது. எப்படி மற்ற மாத கதைகளை படிப்பது?
சத்யராஜ்குமார் 6:56 பிற்பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
பதிவில் குறிப்பிட்டபடி அடுத்த அப்டேட்டில் படைப்புகளை மாற்ற உத்தேசம்.
ila 3:09 பிற்பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
சேவையைத் தொடருங்கள். இன்னும் சில காலத்தில் அலைபேசிதான் வாழ்க்கை என்றாகும்போது, பணம் செய்து கொள்ளுங்கள்(being practical)
சத்யராஜ்குமார் 7:02 பிற்பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி இளா! இதுவும் சரி வலைப்பதிவு, இணையதளங்களும் சரி… ஒழிந்த நேரத்தில் டென்னிஸ் ஆடுவது போலவோ, செஸ் விளையாடுவது போலவோ மன நிறைவுக்காக செய்வது. பண நிறைவுக்குதான் எட்டு மணி நேரம் அலுவலகத்தில் உழைக்கிறோமே! தவிர நிறுவன சாமர்த்தியம் எனக்குப் போதாது என்றும் நினைக்கிறேன்.
Sentil 10:50 பிற்பகல் on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் |
அருமையன முயற்சி சத்யராஜ்குமார் – வெற்றி பெற வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:02 பிற்பகல் on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம் |
Sentil, நன்றி!
ஜெகதீஸ்வரன் 10:30 பிற்பகல் on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் |
வெற்றி மேல் வெற்றி கிட்ட ஈசன் அருள் செய்யட்டும்!
http://sagotharan.wordpress.com
சத்யராஜ்குமார் 5:02 பிற்பகல் on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம் |
ஜெகதீஸ்வரன், நன்றி!
Kumaran 8:18 பிற்பகல் on ஜூன் 23, 2010 நிரந்தர பந்தம்
Thirukkural Mobile Books distributed for Participants at Ulaga Thirukkural Peravai’s
Conference
By Ganesh Ram KR, MobileVeda
Dated: Jun 20, 2009
Vellore,
யெஸ்.பாலபாரதி 2:05 மு.பகல் on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் |
படிக்கவே சந்தோசமாக இருக்கு. வாழ்த்துகள்..
சத்யராஜ்குமார் 9:13 பிற்பகல் on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கு நன்றி பாலபாரதி.
ராசா 6:32 மு.பகல் on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துகள்
சத்யராஜ்குமார் 6:40 மு.பகல் on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி ராசா! எப்படி இருக்கிங்க?
ila 2:28 பிற்பகல் on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.
சத்யராஜ்குமார் 5:53 பிற்பகல் on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி இளா. நீங்கள் தந்திருக்கும் லின்க் வேலை செய்யவில்லையே?
இராமசாமி கண்ணண் 3:01 பிற்பகல் on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல முயற்சி சார். வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:54 பிற்பகல் on ஜூன் 28, 2010 நிரந்தர பந்தம் |
இராமசாமி கண்ணண், மிக்க நன்றி.
madurai saravanan 9:22 பிற்பகல் on ஜூன் 29, 2010 நிரந்தர பந்தம் |
pakirvukku nanri.
சத்யராஜ்குமார் 6:53 மு.பகல் on ஜூன் 30, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி சரவணன்.
பாலராஜன்கீதா 5:45 மு.பகல் on ஜூலை 22, 2010 நிரந்தர பந்தம் |
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:51 மு.பகல் on ஜூலை 22, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கு நன்றி பாலராஜன்கீதா.
kumaran 7:57 மு.பகல் on ஜூலை 22, 2010 நிரந்தர பந்தம் |
vazthukkal tamilukku ungal sevai thodarattum
சத்யராஜ்குமார் 6:01 மு.பகல் on அக்டோபர் 26, 2010 நிரந்தர பந்தம் |
nanRi kumaran.
Samathur saravanan 5:22 மு.பகல் on ஆகஸ்ட் 30, 2010 நிரந்தர பந்தம் |
Nandri, valthugal
சத்யராஜ்குமார் 6:01 மு.பகல் on அக்டோபர் 26, 2010 நிரந்தர பந்தம் |
nanRi saravanan.
sekar 12:10 மு.பகல் on அக்டோபர் 25, 2010 நிரந்தர பந்தம் |
Nokia platform la eppo launch panringa?
சத்யராஜ்குமார் 6:05 மு.பகல் on அக்டோபர் 26, 2010 நிரந்தர பந்தம் |
நோக்கியா பிளாட்பார்ம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.
அருட்பெருங்கோ 9:34 பிற்பகல் on அக்டோபர் 30, 2010 நிரந்தர பந்தம் |
முயற்சிக்கு வாழ்த்துகள். இன்றுதான் எனது android செல்பேசியில் நிறுவினேன். பழைய இதழ்களை படிக்க இயலுமா?
சத்யராஜ்குமார் 5:35 மு.பகல் on அக்டோபர் 31, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி. அந்த வசதி இன்னும் செய்யப்படவில்லை.
ramji_yahoo 11:23 மு.பகல் on நவம்பர் 14, 2010 நிரந்தர பந்தம் |
பல மொபைல் போன்களில் (இந்தியாவில்- குறிப்பாக எல் ஜி, சாம்சங், நோக்கியா பல மாடல்களில்) தமிழ் எழுத்துருவே படிக்கும் வசதி இப்போது இல்லை. தமிழ் வலைப்பதிவுகளை கூட படிக்க முடிவதில்லை. அதற்கும் ஒரு வழி செய்யுங்கள் உடனே
சத்யராஜ்குமார் 8:53 பிற்பகல் on நவம்பர் 14, 2010 நிரந்தர பந்தம் |
ராம்ஜி, அடிப்படையில் நான் தமிழ் கம்ப்யூட்டிங் அல்லது மொபைல் துறை வல்லுனர் இல்லை. என்னிடம் இருந்த ஆண்ட்’ராய்ட் மற்றும் ஐபோன்களில் சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவ்வளவே. மற்றபடி இத்துறையில் தேர்ந்த பலரும் இந்த பிளாட்பார்மில் தமிழுக்காக பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். அவர்கள் வாயிலாக உங்கள் விருப்பம் நிறைவேறக் கூடும்.
ராஜரத்தினம் 2:11 பிற்பகல் on நவம்பர் 22, 2010 நிரந்தர பந்தம் |
நண்பர் சத்யாவிற்கு.. மிக நல்ல முயற்சி. மனநி்றைவிற்காக செய்யும் போது உந்துதல் குறையும் போது அதை நாம் தொடர்வதில்லை. அது போலாகாமல் ஈநூல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நான் இதை எனது ஐ-டச்சில் படிக்கிறேன்.
ஜெயமோகனின் பதிவு என நீங்கள் சொல்லியிருப்பது ஐ ட்யூன்ஸில் வரவில்லை. கடைசி அப்டேடாக ஜூலை 2010 என்றே காண்பிக்கிறது. சமீபத்திய பதிவுகளை எப்படி பதிவிறக்கம் செய்வது?
மீண்டும் மிக முக்கிய முயற்சியான ஈநூல் பற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.
சத்யராஜ்குமார் 6:39 பிற்பகல் on நவம்பர் 22, 2010 நிரந்தர பந்தம் |
ராஜரத்தினம், மிக்க நன்றி. ஐபோன் / ஐ-டச்சைப் பொறுத்தவரை, நீங்கள் இண்ட்டர்நெட்டில் அதை இணைத்திருப்பின் லேட்டஸ்ட் படைப்பு தானாகவே உங்கள் கருவிக்கு push செய்யப்படும். புதிய படைப்பு வரும்போது பேட்ஜ் ஐகான் மூலம் தெரிவிக்கப்படும் (Badge Notification). அப்ளிகேஷனை ஐ-ட்யூன்சிலிருந்து ஒரு முறை நிறுவினால் போதும்.
shalini.v 1:10 மு.பகல் on பெப்ரவரி 10, 2011 நிரந்தர பந்தம் |
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 8:06 மு.பகல் on பெப்ரவரி 21, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி!