RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • பொன்.சுதா 6:17 am on October 20, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    பன்றிக்காய்ச்சலும் பதினேழாம் பதிகமும் 

    நாளுக்கு இரண்டு மூன்று முறை கடந்து சென்றும் கண்ணில் படாமலேயே போயிருக்கிறது. நண்பர் ஒருவருக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது தான் பார்க்க நேர்ந்தது.

    பன்றிக் காய்சலுக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் என்னென்னவெல்லாம் செய்தார்கள்.

    இன்னுமொரு மாபெரும் மார்க்கமிருப்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இப்பதிவை சமர்பிக்கிறேன்.
    swine1
    சென்னை சைதாப்பேட்டையில் என் இல்லத்தினருகில் உள்ள திருவாசக மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் கண்டடைந்தது இது.

    7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்த போது குளிர்சுரம் என்னும் கொடிய நோய் மக்களைத் தாக்கியதாம். மக்கள் கூடி சம்பந்தரிடம் முறையிட்ட போது அவர் சில பதிகங்கள் பாடித் தந்தாராம். அதைப் பாடி மக்கள் குளிர்சுரத்திலிருந்து தப்பித்தார்கள் என்ற செய்தியோடு, அந்த பதிகத்தின் பாடல்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அப்பதிகங்களை திருநீறு அணித்து தினமும் பாடினால் சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை வராது என்று எழுதி இருந்தது.

    இதன் நம்பகத் தன்மை குறித்து வல்லுனர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் யாராவது ஒருவருக்கு இதை முயற்சித்து பலன் இருப்பின் உலகெங்கும் பரப்பலாமே. நமது அரிய கண்டுபிடிப்பை. அப்படி செய்கின்ற போது தமிழ் தவிர இந்திய மற்றும் உலக மொழியினர் இப்பதிகத்தை உச்சரிக்க முடியுமா? எனவே தமிழாசியர்களை உலகெங்கும் பயிற்சியாளர்களாக அனுப்பி சம்பாதிக்கச் செய்யலாம். கற்ற தமிழால் வாழட்டுமே.
    swine3
    மற்ற மொழியினர் இதை அப்படியே பாட வேண்டுமா? அல்லது இதை மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் சொல்லலாமா? சொன்னால் பலனிருக்குமா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? மருந்தும், மருத்துவர்களும் இதன் மூலம் செயலிழந்து போவதால் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மருத்துவக் கல்லூரிகளை என்ன செய்வது என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டிவரும்.

    இப்பதிகத்தை தெரிந்து கொள்ள உலகெங்கும் உள்ள அனைவரும் பறந்தோடி வந்தால் சைதை தாங்குமா என்று ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது.

    முக்கியமாக ஒன்று, ஃப்ளெக்ஸில் 17 வது பதிகம் கிடைக்கவில்லை என்று குறிபிடப்பட்டு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் படிப்பதால் பலன் எதாவது குறையுமாவென்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

    அப்பதிகத்தைத் தேடித் தர ஆய்வு மேற்கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    - பொன்.சுதா

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
  • சத்யராஜ்குமார் 3:56 pm on August 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    எக்ஸானந்தா 

    எல்லா லெவல்களிலும் சாமிகள் இருப்பது போல் சாமியார்களும் இருக்கிறார்கள்.
    yogi
    எங்கள் ஊருக்குப் பக்கத்தில் புரவிபாளையம் ஜமீன் மாளிகையில் இருந்த சாமியார் ரொம்ப பிரபலம். லீவு நாட்களில் பெரும் க்யூ வரிசையில் மக்கள் வெள்ளம் காத்திருக்கும். ‘டயம் சரியில்லை சாமி என்ன பண்ணலாம் ?’என்று ஒருவர் கேட்டதற்கு அவருடைய டைட்டன் வாட்சை கழற்றச் சொல்லி தேங்காய் உடைக்கும் கருவியால் ஒரே போடாய்ப் போட்டு சுக்கு நூறாய் உடைத்து விட்டாராம். பிரசாதத்தை வாயில் போட்டு குதப்புக் குதப்பி வெளியே எடுத்துத் தருவது அவர் ஸ்டைல். நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அங்கே போன போது அப்படி அவர் பிரசாதம் தந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டே போனேன். நல்ல வேளை, ஹைஜீனிக்காக ஒரு எலுமிச்சம்பழம் மட்டுமே கொடுத்தார். அமாவாசைக்கும் பவுர்ணமிக்கும் இளையராஜா தவறாமல் அங்கே வந்து விடுவாராம். இருவரும் ராத்திரி பூராவும் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள் என்று பொள்ளாச்சி பூராவும் பேசிக் கொள்வார்கள்.

    இது போன்ற பிரபலங்கள் தவிர, கோயமுத்தூர் க்ராஸ் கட் ரோடு அருகே சின்ன ஓட்டு வீட்டுக்குள் ஏராளமான சாமி படங்களுடன் அழுக்கு பனியன் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் குட்டி சாமியார் ஒருவரையும் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நூல் மில்லில்தான் வேலை பார்க்கிறார். சாமியார் வேலை பார்ட் டைம். மந்திரித்து தாயத்து கட்டுவது அவர் வேலை. தொழிலில் பிரச்னை என்றால் அடிக்கடி அவரை சந்தித்து தாயத்து மாற்றிக் கொண்டு வருவான் என் நண்பன். வீடு பூராவும் விபூதி மணம் கமழும். கைக் குழந்தை நை நை என்று அழும். ‘காபி சாப்பிடறிங்களா?’ என்று அவர் மனைவி உபசரிக்கக் கூட செய்வார். இப்படியான கேஷுவல் சாமியார்கள்.

    யாகவா முனிவர், ஷிவசங்கர் பாபா போன்ற மிட் ரேஞ்ஜ் சாமியார்கள் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    யோகா பிரபலமானவுடன் எக்ஸானந்தாக்கள் பெருகி விட்டார்கள். அதாவது x என்ற மாறியில் பிரேமானந்தா, சகஜானந்தா என என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இவர்கள் எலைட் வகையறாக்கள். வார இதழ்களில் தொடர் எழுதுவது முதல் பெரு நகரங்களில் ஆங்கில சொற்பொழிவாற்றுவது வரை இது காறும் சாமியார்கள் செய்திராத என்னென்னவோ செய்து பிரமிப்பூட்டி வருபவர்கள். ஜனாதிபதி, பிரதமர்களுக்கு ஆசி வழங்குதல் இவர்கள் ப்ரைம் டைம் ஜாப்.

    இந்தியாவில் இருந்த வரை விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இப்படி யாராவது சாமியார் குறுக்கிடாமல் இருப்பதை தவிர்க்க இயலாமலே இருந்து வந்தது. அமெரிக்கா வந்தபின் ஆசுவாசமாய் மூச்சு விடலாம் என்றால் – டாக்டர்கள், எஞ்ஜினியர்களை விட அதிக எண்ணிக்கையில் காவி உடை எக்ஸானந்தாக்கள் இங்கே உலவி வருவது தெரிந்து அதிர்ந்தேன்.

    ஆரம்பத்தில் என் மனைவிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட போது இவர்களுக்கெல்லாம் மட்டும் எப்படி சுலபமாய் விசா கிடைக்கிறதென்று கவலை கலந்த ஆச்சர்யம் அடைவேன். புது பட ரிலீஸ் போல வருடம் பூராவும் எங்காவது யாராவது சாமியார் வாரா வாரம் பஜனை, பூஜை, சிறப்புரை ஆற்றிக் கொண்டிருப்பார். மக்கள் வெள்ளம் அலை மோதும்.

    இந்தப் பின்னணியில் எழுதிய எக்ஸானந்தா சிறுகதை கீழே:


    எக்ஸானந்தா
    ~சத்யராஜ்குமார் ~


    ரூம் மேட் பலராமனால் வந்த வினை. சுவாமி எக்ஸானந்தாவின் அதி தீவிர பக்தன். ஆபிஸ் கம்ப்யூட்டரில் ஒரு ஃபார் லூப் எழுதுவது கூட அவரின் மகிமையால்தான் என்று பலமாக நம்பிக் கொண்டிருக்கிறான். டெஸ்க்டாப்பிலிருந்து, பர்சுக்குள் வரை அவனிடம் அவர் திருவுருவப் படம்.

    எக்ஸானந்தா பக்தர்களுக்கு அருள் பாலிக்க அமெரிக்கா வரும்போதெல்லாம் பலராமன் பிசி ஆகி விடுவான். போஸ்டர் ஒட்டுவதிலிருந்து சுவாமிகளும், அவர் அடிபொடிகளும் தங்க இடம் பார்ப்பது வரை பம்பரமாய் சுழல்வான்.

    ….

    மேலும் படிக்க…

     
    • சித்ரன் 8:56 பிற்பகல் on ஆகஸ்ட் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கதையும் டைட்டிலும் சூப்பர்!

      /**இது மாதிரி பலவீன தருணத்தில் யாராவது கழுதைக்கு கால் கழுவிவிடச் சொன்னாலும் மறுபேச்சுப் பேசப்போவதில்லை. சுவாமி ஸ்ரீ ஸ்ரீ எக்ஸானந்தா அதை விட மேலான அவதாரம்.**/

      ஹாஹா! இதுதானே நிறைய இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

      என் நண்பர்கள் இருவருக்கு நாங்கள் முறையே “கசமுசானந்தா” மற்றும் “மலேசிய காம கேந்திர பிரம்மரிஷி” என்று பெயர் வைத்திருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. அதில ஒருத்தன் அமெரிக்காலதான் இருக்கான். எங்கயாவது மேப்பிள் மரத்தடில பாத்தா விசாரிச்சதா சொல்லுங்க.

    • என். சொக்கன் 3:33 மு.பகல் on ஆகஸ்ட் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :) ))) எக்ஸானந்தா புகழ் ஓங்குக :) )))

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • துபாய் ராஜா 5:18 மு.பகல் on ஆகஸ்ட் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்லதொரு அனுபவ பதிவு.

      இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

    • REKHA RAGHAVAN 6:40 மு.பகல் on ஆகஸ்ட் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      யாராலும் எதிர்பார்க்க முடியாத முடிவு. அருமையான கதை. இன்றும் சாமியார்களை சுற்றி வரும் பக்த கோடிகளுக்கு இதை படித்தாலாவது ஞானம் வந்தால் சரி.

      ரேகா ராகவன்

    • K.G.Jawarlal 8:11 மு.பகல் on ஆகஸ்ட் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கதையின் புரோலாக் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. இந்து மதத்தில் இருக்கும் அதீத சுதந்திரம்தான் இப்படிப்பட்ட தந்தூரி சாமியார்களின் வளர்ச்சிக்குக் காரணம். இதன் விளைவாக சாமியார்கள் என்றாலே சமூக விரோதிகள் என்கிற மாதிரி ஒரு பொதுப்படையான அச்சம் மக்களிடையே உருவாகி விடுகிறது!

      http://kgjawarlal.wordpress.com

      • சத்யராஜ்குமார் 1:53 பிற்பகல் on ஆகஸ்ட் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        ஜவஹர், மன்னிக்கவும். உங்கள் மறுமொழி spam-ல் சிக்கிக் கொண்டதை இன்றுதான் கவனித்தேன். உங்கள் கருத்துக்கு நன்றி. கதை சாமியார்களை நோக்கி அல்ல, முக்கியமாய் தொண்டரடிகளை நோக்கி எழுதப்பட்டது :-)

    • பினாத்தல் சுரேஷ் 9:29 பிற்பகல் on ஆகஸ்ட் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கதையில் நாயகன் கதவைத் திறந்தால் காற்று வரும்; அத்தனைக்கும் ஆசைப்பட்டு சங்கராபுரம் சென்றிருந்தாலும் தெளிவு பெற்று மோட்சம் பெற்றிருக்கலாம்.

      க்ரிஸ்பான முடிவை மிகவும் ரசித்தேன்.

    • Gowtham 11:44 பிற்பகல் on ஆகஸ்ட் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Not yet read the “Xanandha” but this part is hilarious. :) )))))

      ‘டயம் சரியில்லை சாமி என்ன பண்ணலாம் ?’என்று ஒருவர் கேட்டதற்கு அவருடைய டைட்டன் வாட்சை கழற்றச் சொல்லி தேங்காய் உடைக்கும் கருவியால் ஒரே போடாய்ப் போட்டு சுக்கு நூறாய் உடைத்து விட்டாராம்.

    • Gowtham 12:04 மு.பகல் on ஆகஸ்ட் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Xanandha is awesome,humorous and ticklish “revelation”. Keep writing with your funny bone. :)

    • தகடூர் கோபி 1:44 பிற்பகல் on ஆகஸ்ட் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கதை சூப்பர்.

      <>

      கிடைத்த ஞானத்தை வீணடிக்காம ஒரு வோர்ல்ட் ட்ரிப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க. (கூட வர வெள்ளைக்கார சிஷ்யைகளை எல்லாம் தேட முடியாது. நான் வேணா ஜாயின் பண்ணிக்கறேன்)

    • சத்யராஜ்குமார் 7:24 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம்

      Prakash, :-)

  • சத்யராஜ்குமார் 8:50 am on January 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: vivekananda, youth, youth day   

    விழிமின் ! 

    நடிகர் விவேக் அவர்களின் பிறந்த நாள் அளவுக்கு சுவாமி விவேகானந்தா பிறந்த நாள் நம் இளைஞர்களுக்கு அவ்வளவு முக்கியமில்லைதான்.

    akhil-vivekananda

    ஆனால் 84-லிருந்து ஜனவரி 12, அவர் பிறந்த நாளை  இளைஞர்கள் தினமாகக் கொண்டாட இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இன்று. நான் சின்ன வயதில் பள்ளி விழாவில் அவரைப் போல் வேடம் தரித்து அவர் போல் உரையாற்றியுள்ளேன். அந்த வேஷம் கட்டியதுமே, மேடைக் கூச்சம் பறந்தே போய் விட்டது.

    இந்த பாரம்பரியத்தை உடைக்காமல் 2002 இளைஞர் தினத்தின் போது அகில் அதே மாதிரி விவேகானந்தர் காஸ்ட்யூம் அணிந்து உரை ஆற்றினான். (பார்க்க படம்)

    ஆரம்பத்திலிருந்தே இவர் ஒரு சாமியார் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒரு வீரனைப் போல்தான் உருவகமாகியிருக்கிறார். பாரதியாருக்கு அடுத்து இவர் எழுத்துக்கள் படித்தால் உத்வேகம் ஏற்படுவதை மறுக்க இயலாது.

    இவர் போன்ற ஆளுமைகளை மதம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்கும் கலை அறிந்தால் மிகவும் நல்லது.

     
c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்