Updates from ஜூலை, 2008 Hide threads | Keyboard Shortcuts

  • மின்னஞ்சல் செக் லிஸ்ட் 

    சத்யராஜ்குமார் 9:20 pm on July 29, 2008 நிரந்தர பந்தம் | பதில்

    மின்னஞ்சல் எழுதி முடித்ததும் சரி பார்க்க வேண்டிய விஷயங்களில் சில.

    • படிக்கப் போகிறவரை மனதில் வைத்து எழுதினோமா ?
    • சுருக்கெழுத்துக்களையும், கலைச் சொற்களையும் முடிந்தவரை தவிர்த்திருக்கிறோமா ?
    • தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்யப்பட்டதா ?
    • படிக்க வேண்டியவர் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் எழுதினோமா ?
    • இது நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுமா, அல்லது எதிர்மறையாய் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டா ?
    • எதிர் பார்ட்டியின் ஆர்வம், எடுத்துக்கொள்ளும் திறன் முதலானவற்றை மனதிலிறுத்தி அதற்குத் தகுந்தாற்போல் தகவல் வடிவமைக்கப் பட்டுள்ளதா ?
    • ஒவ்வொரு வாக்கியமும் முழுமையாய் உள்ளதா ?
    • செயப்பாட்டு வினைகளை நீக்கி செய்வினைகளால் எழுதப்பட்டுள்ளதா ?

    தொழில்முறை கடிதங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் எல்லா வகை எழுத்தாக்கங்களுக்கும் பயன்படும் வண்ணமே உள்ளது. முழுவதும் படிக்க இங்கே செல்லவும்.

    பின்குறிப்பு: இதில் அரசியல் அல்லது சச்சரவு எதுவும் இல்லை. உள்ளபடியே வெட்டி பாலாஜி, சாரு நிவேதிதா சர்ச்சையைப் படித்ததும் இந்த ஆவணம் நினைவுக்கு வந்தது. யான் படித்ததை பெறுக இவ்வையகம்.

     
  • சாவியில் நடக்காத போட்டிக்குக் கிடைத்த பரிசு ! 

    சத்யராஜ்குமார் 7:37 pm on April 3, 2008 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: சாவி, ரவிபிரகாஷ்

    ரவிப்ரகாஷின் வலைப்பதிவைப் பார்த்ததும் சாவி நாட்கள் நினைவில் மலர்ந்தன. சூர்யகலா, சந்திரகலா, ராஜ்திலக், ராஜாமகள் எல்லாமே இவர்தான் என்று தெரிந்து திடுக்கிட்டேன்.

    சூர்யகலாவின் கதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. ஒரு இளம் பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட மென்மையான கதைகள். அவை குறித்து நானும் சரசுராமும் சிலாகித்து வியந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை ரவிப்ரகாஷ் தனது வலைப்பூவில் தொகுக்க வேண்டுமென்பது நேயர் விருப்பம்.

    என்னுடைய சிறுகதை வாழ்க்கையில் நாலு அல்லது ஐந்து ஒரு பக்கக் கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் குமுதம் இதழில் எழுதிய காதல் கதையை ஏற்கெனவே காணக் கொடுத்தேன். இப்போது இவர் தளத்தைப் படித்ததும், புதையலைத் தோண்டி இன்னொரு கதையை தட்டச்சினேன். சாவி இதழ் தள்ளாடிக் கொண்டிருந்த சமயம் எழுதிய கதை.

    அப்போது சாவியில் ஒரு பக்க கதைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக போட்டி என்றால் சோகத்தைப் பிழிய முயல்வதே வழக்கம். ஏனெனில் போட்டிக் கதைகளில் சயன்ஸ் அல்லது க்ரைம் சாயம் பூசுவது ஒரு க்ரைம் என்பது எழுத்துலக நம்பிக்கை. அதை மீறி நான் சற்று வேறேதாவது கிறுக்கிப் பார்ப்பேன். அப்படி எழுதித்தான் விகடன் ஒரு படத்துக்கு எழுதச் சொன்ன போட்டியில் (வருடம் நினைவில்லை) அறிவியல் கதையாயிருந்தும் பரிசு கிடைத்தது.

    நான் அறிவியல் சாயம் பூசி எழுதிய பல கதைகளை ரவிபிரகாஷ் சாவியில் பிரசுரித்திருக்கிறார். அவை எல்லாவற்றுக்குமே நான் ஒரு உத்தி வைத்திருந்தேன். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும் அல்லது நிகழ்காலத்தில் ஆரம்பித்து எதிர்காலத்தில் முடியும்.

    சாவி அறிவித்த போட்டியின்படி கதைகளை வாராவாரம் வெளியிட்டுக் கொண்டே வருவார்கள். வாசகர்கள் மற்றும் நடுவர்கள் தேர்வின் அடிப்படையில் பரிசுக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். என் கதை வெளியானதும் பல வாசகர்கள், “உங்களுக்குத்தான் பரிசு! ” என எனக்குக் கடிதம் எழுதினார்கள்.

    பேப்பர் பேனா இன்க் செலவை சமாளிக்கும் அளவுக்கு பத்திரிகைகள் அனுப்பும் சன்மான செக்கை விட, வாசித்தவர்கள் எழுதிப் போடும் அந்த போஸ்ட் கார்டுகள் விலை மதிப்பில்லாதவை.

    சாவி இதழின் தள்ளாட்டத்தினால் அப்போட்டி நிறைவு பெறவே இல்லை. ஆனால், கதை வெளியான இரண்டு வாரம் கழித்து ரவிபிரகாஷிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

    ” உங்கள் வி.வெளியிலிருந்து ஒரு குரல் கதையைப் படித்து சாவி மிகவும் ரசித்துப் பாராட்டினார்.”

    இதை விட வேறேன்ன பரிசு வேண்டும் !

     
  • கலாம் + கனவு 

    சத்யராஜ்குமார் 1:21 pm on September 25, 2007 நிரந்தர பந்தம் | பதில்

    அன்புள்ள தனபால்,

    உங்களை அவ்வப்போது செய்திகளில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் இருவரும் இணைந்து பணி புரிந்த நாட்களில் உங்கள் கனவுகளை விலாவாரியாக என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவைகளை வெறும் கனவாகவே கலைத்து விடாமல் செயலாக்கி வருவதற்குப் பாராட்டுக்கள். உங்களை இன்னும் சற்று அண்ணாந்து பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    சத்யராஜ்குமார்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்