Updates from நவம்பர், 2007 Hide threads | Keyboard Shortcuts

  • கற்றது தமிழ் மட்டுமல்ல 

    சத்யராஜ்குமார் 8:09 am on November 15, 2007 நிரந்தர பந்தம் | பதில்

    கற்றது தமிழ் பார்க்கையில் சட்டென நினைவுக்கு வந்தவர் தமிழாசிரியர் ஆ. கணேசன். நான் எழுத ஆரம்பித்ததற்கான பல காரணிகளில் அவரும் ஒருவர். பெற்றோர் விருப்பத்துக்காக பி.எஸ்.சி தாவரவியல் படித்து விட்டு, தன் சொந்த விருப்பத்துக்காக எம்.ஏ தமிழ் படித்து, தமிழ் ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

    வகுப்பில் பாதி நேரம் பாடம் நடத்தினால் மீதி நேரம் பொது விஷயம் போதிப்பார். அந்த அடலஸன்ட் பருவத்தில் மனதிலிருக்கும் பல கேள்விகளுக்கு யாரும் கேட்காமலே வகுப்பறையில் அவர் விடை சொல்லியிருக்கா விட்டால், சரியாகத் தெரிந்து கொள்ள பல நாளாகியிருக்கும். அல்லது தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

    இயற்பியல் பேராசிரியர் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது. ” என்ன நீ அந்த ஆளோட அதிகமா சுத்திட்டிருக்கே ? நீ ஒழுங்கா படிக்கிற பையன். உருப்படாம போயிடாதே. “. இதெல்லாம் தொழில்நுட்ப பள்ளியில் நான் பத்தாவது படிக்கும்போது நடந்தது. டிப்ளமோ முடித்ததும் எனது முதல் சிறுகதை சாவியில் வெளியானது. வழியில் அவரை சந்தித்தபோது, ” நிறைய எழுதுப்பா. ” என்று மெலிதான ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.

    சரி, கடைசி பத்திகள் பார்த்த சினிமாவுக்கு அர்ப்பணம். படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல் கல். ஒளியை கதை சொல்ல பயன்படுத்துவது தமிழ் சினிமாக்களில் அபூர்வம். இதில் படம் பூராவும் ஒளியமைப்பும் சேர்ந்து கதை சொல்கிறது. பாலாவும், தங்கர்பச்சனும் குத்தாட்டத்தோடு சாதித்ததாகச் சொல்லிக் கொண்டதை இந்த இயக்குனர் – நிஜமாத்தான் சொல்றேன் – சாதித்திருக்கிறார். ஏற்கெனவே காதல் திரைப்படம் 90% நெருங்கியது. சில பாடல் காட்சிகளில் கோட்டை விட்டது. பதினாறு வயதினிலே கிராமத்தைக் காட்டிய மாதிரி இது நகரத்தையும், இன்றைய காலகட்டத்தையும் அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறது. ஆனால், காட்சியமைப்புகளில் இருந்த யதார்த்தம் கதையில் பல இடங்களில் சறுக்குகிறது. நாயகன் கொலைகள் செய்ய வலுவாகக் காரணங்கள் இருந்தாலும், ‘கொலை செய்ய காரணம் தேவையில்லை’ என்றும், ‘தமிழ் படித்ததால் கொலை செய்தேன்’ என்றும் ஆரம்பக் காட்சியிலேயே அஸ்திவாரம் போட்டது ஃபான்ட்டஸி. கிராமத்தில் போலிஸ் சுற்றி வளைக்கும் காட்சியை இயக்குநர் வைத்திருக்க மாட்டார். சென்சார் போர்டு வைத்திருந்திருக்கும். இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.

    வாழ்க்கையைப் படிக்காத அந்தக் கதாநாயகனுக்கு தமிழ் அல்ல, கம்ப்யூட்டர் படித்திருந்தாலும் இதே கதிதான்.

     
    • T.V.Radhakrishnan(raki) 3:15 பிற்பகல் on நவம்பர் 15, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      I am a script writer.so far I have written 14 drama scripts and more than 30 short stories.my script Bharataratna not only won the best script award but also selected as the best script of 2005.All the credits goes to my tamil teacher(srmhs,ambattur)sri Ramachandran

    • Manki 6:35 மு.பகல் on டிசம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      //இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.//

      நிஜ வாழ்க்கையில் so-called தீமை ஜெயிப்பதைத்தான் தினமும் பார்க்கிறோமே. ஒரு கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் ஏன் அது கூடாது?

    • சத்யராஜ்குமார் 8:45 மு.பகல் on டிசம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      Manki, கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் அது கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பட்ட கதைகளை நானே எழுதியிருக்கிறேன். ஸ்தாபிக்க முயன்ற உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

    • பொன்.சுதா 11:10 பிற்பகல் on ஜனவரி 8, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      அய்யா சரியான விமர்சனமுங்க…

    • சத்யராஜ்குமார் 9:06 பிற்பகல் on ஜனவரி 9, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      பொன்.சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  • படம் காட்டுதல் 

    சத்யராஜ்குமார் 9:44 am on October 8, 2007 நிரந்தர பந்தம் | பதில்

    குழந்தைகளை மகிழ்விப்பதாய் நினைத்து ஒரு சயன்ஸ் பிக்’ஷன் DVD போட்டு விட்டார் நந்தா. வினோத உருவங்களைப் பார்த்து சில குழந்தைகள் அலறின. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த உஷா, ” சினிமா, விடியோன்னு குழந்தைகளைக் கெடுக்காதிங்க. நான் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு சொல்லித் தரேன். ” என்றார்.

    உஷா எஞ்சினீரிங் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட். ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்தான் ஆர்வம் என்று சொல்லி இங்கே டீச்சர் வேலை பார்க்கிறார். அவர் அறிமுகம் கொடுத்த Pictionary என்ற அந்த விளையாட்டில் குழந்தைகள் மட்டுமல்ல, எல்லோருமே ஆர்வமாய்ப் பங்கெடுக்க முடிந்தது.

    மூளையை ஒரு கலக்குக் கலக்கி விடுகிறது. உங்களுக்குள் இருக்கும் ஆர்ட்டிஸ்ட்டிக் புலனை உசுப்பி விடுகிறது. தகவல் பரிமாற்றத் திறனை கூர்மையாக்குகிறது. உங்களுக்குத் தரப்படும் வார்த்தைகளை வாய் பேசாமல் படம் போட்டுக் காட்டி உங்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு.

    என்ன ரொம்ப சுலபம் போல் தோன்றுகிறதா ? SMART என்ற வார்த்தையை படம் போட்டு யாருக்காவது புரிய வைத்துப் பாருங்கள்.

     
  • பள்ளியறை 

    சத்யராஜ்குமார் 7:00 am on October 2, 2007 நிரந்தர பந்தம் | பதில்

    ஆனந்த விகடனில் 1998-ல் நான் எழுதிய சிறுகதை ஓரிரு நாள் முன்பு பள்ளித் தலம் பதிவிட்ட போது நினைவுக்கு வந்தது. பள்ளித் தலம் அமெரிக்க Back to School பற்றிய சிறுகட்டுரை என்றால் தேய்பிறைகள் இந்திய Back to School பற்றிய சிறுகதை.

    அந்த பிரபல கான்வென்ட்டில் நான்கு வயதே ஆன என் தங்கை மகளை ஞாபக மறதியாய் வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டி வைத்து விட்ட சம்பவத்தை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அடுத்து மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாய் விடுமுறை. நாங்கள் அவளை ஸ்கூல் முழுவதும் தேடிக் கொண்டிருந்தபோது, “அம்மா… அம்மா… யாராவது கதவைத் திறங்க… ” என்று ஹீன ஸ்வரத்தில் கேட்ட பிஞ்சுக் குரல் இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது.

    அந்தச் சின்னக் குழந்தையின் முதல் முதலான பள்ளி அனுபவங்களைக் கோர்த்து அவளின் View Point-லேயே எழுதிய விகடன் இதழைத் தேடிப் பிடித்து நேற்று சத்யராஜ்குமார்.காம்-ல் வெளியிட்டேன். இந்த அவசர இணைய யுகத்தில் ஐந்து பக்கங்கள் படிக்கப் பொறுமையும் நேரமும் இருந்தால் இங்கே சென்று வாசிக்கலாம்.

     
    • REKHA RAGHAVAN 11:11 மு.பகல் on அக்டோபர் 2, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      A very very good story Raj. Thanks for posting in Sathyarajkumar.com.

    • சத்யராஜ்குமார் 1:38 பிற்பகல் on அக்டோபர் 2, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      REKHA RAGHAVAN, Thanks for the comment.

    • Agila 4:23 பிற்பகல் on அக்டோபர் 2, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      பள்ளித்தலம் கதை போய் படிச்சேன். அண்ணா பையனுக்கும் இதே நிலம தான். வீட்டுல கேட்டா எல்லாம் சொல்றான். ஸ்கூல்ல டீச்சரைப்பாத்தா மட்டும் பயம் வந்திருது அப்படீங்கறாங்க.

    • சத்யராஜ்குமார் 5:30 பிற்பகல் on அக்டோபர் 2, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      Agila,
      நான் படிக்கிற காலத்தில் முதிர்ச்சி நிரம்பிய ஆசிரியர்கள் அமையப் பெற்றார்கள். குழந்தைகளை ஒரேடியாய் பயமுறுத்தாமல் அதே சமயம் கண்டிப்புடன் கற்றுத் தர அவர்களுக்குத் தெரிந்திருந்தது. குழந்தைகள் – ஆசிரியர்கள் இரண்டு பேருக்கும் மகிழ்ச்சியளிக்கும் சூழலை உருவாக்கும் பொறுப்பு பள்ளி நிர்வாகத்திடம்தான் உள்ளது.

    • chandravathanaa 2:25 பிற்பகல் on அக்டோபர் 3, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      தேய்பிறைகள் நல்ல கதை.
      ஒரு குழந்தையின் திறமையும் ஆர்வங்களும் எப்படி மழுங்கடிக்கப் படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம்

    • சத்யராஜ்குமார் 9:32 பிற்பகல் on அக்டோபர் 3, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      chandravathanaa, Thanks for your comments.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்