RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சத்யராஜ்குமார் 6:06 pm on September 25, 2009 நிரந்தர பந்தம் | பதில் |
    குறிச்சொற்கள்: உன்னைப் போல் ஒருவன், கமல், கமல்ஹாசன், kamal, kamalhasan   

    உன்னைப் போல் ஒருவன்: விமர்சனம் அல்ல 

    சென்ற வெள்ளிக்கிழமை. திரையிட்ட இரண்டாம் நாள். இரவு 9.45-க்கு ஷோ. ‘ரஜினி படம்ன்னா வரேன். கமல் படம் DVD வந்த பிறகு பார்த்துக்கறேன்.’ என்று சொல்லி விட்ட common woman மனைவி. ஆகவே எனக்கும், அகிலுக்கும் மட்டும் movietickets.com-ல் முன்பதிவு செய்தேன். 3-11 வயது வரை அரை டிக்கட் வாங்கினால் போதும் என்று அந்த தளத்தில் போட்டிருந்ததால் அகிலுக்கு பாதி விலையில் டிக்கட்.

    உன்னைப் போல் ஒருவன்

    உன்னைப் போல் ஒருவன்


    “ஏன் ஒன்பது மணிக்கே கிளம்பணும்?” என்று கேட்ட அகிலுக்கு தமிழ் படம்ன்னா கூட்டம் அலை மோதும். லேட்டாய் போனால் நீ ஒரு இடத்திலும் நான் ஒரு இடத்திலும் உட்கார வேண்டி வரும் என்று பதில் சொன்னேன். சிவாஜி, சந்திரமுகி அனுபவம். அவன் அதிருப்தியாய் தலையாட்டினான். Fairfax-ன் கிழகோடியில் தியேட்டர். இந்த திரையரங்கையும், இன்னும் சில திரையரங்குகளையும் ரிலையன்ஸ் குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வாரம் ஒரு தெலுங்கு அல்லது ஹிந்தி படம் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.

    தமிழ்ப்பட ரசிகர்கள் இணையம் தாண்டி வர மறுப்பதால் மணிரத்னம், கமல், ரஜினி படங்கள் வந்தாலொழிய தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்காது. பத்து நிமிஷ டிரைவில் தியேட்டரை அடைந்தபோது அகில் நான் சொன்னதை நம்பினான். அங்கே பெருந்திரளாய் கூட்டம். திருவிழா உணர்வு ஏற்பட்டது. மச்சி, மச்சான் என்று செந்தமிழ் குரல்கள் கேட்டன.

    கவுண்ட்டரில் போய் இணையத்தில் முன்பதிவு செய்த கடன் அட்டையை கொடுக்க, இ-டிக்கெட் கிடைத்தது. அங்கே 3-5 வயது வரை அரை டிக்கட் என்று ஒரு அறிவிப்பு பெரிதாய் எழுதி ஒட்டியிருந்தது பார்த்து திடுக்கிட்டாலும், இணையத்தில் வாங்கினால் எதுவுமே சகாய விலையில் கிடைக்கும் என்று சமாதானமாகிக் கொண்டேன்.

    பூட்டியிருந்த கண்ணாடிக் கதவின் முன்னால் டைனோசரின் வால் மாதிரி பெரிய க்யூ. அதில் நானும், அகிலும் போய் இணைந்து கொண்டோம். இப்படி ஒரு கூட்டம் ஆங்கிலப் படங்களுக்கு அரிதிலும் அரிது என்பதால் அந்த காம்ப்ளக்ஸின் இதர கடைகளுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் வினோதமாய் பார்த்து ரசித்துச் சென்றார்கள்.

    இதற்குள் எனக்கு அறிமுகமான சிலர், ‘ஹாய்’ சொன்னார்கள். க்யூவில் முன்னால் நின்றிருந்த இரு இளைஞர்கள் அங்கே ரகம் ரகமான கார்களில் வந்திறங்கும் நம்மவர்களையும் அவர்கள் கார்களையும் ஒருவர் பாக்கியில்லாமல் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ”எந்த ஒரு தேசிப்பயலாவது இப்படி ஒரு கார் (க்ரைஸ்லர் PT Cruiser) வாங்குவானா? இது காலேஜ் பொண்ணுங்க வாங்கி ஓட்டற கார்!”

    படம் பார்க்கும் ஆவலில் சாப்பிடாமல் கிளம்பி வந்து விட்ட ஒரு குடும்பத்தின் பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

    தனது வெள்ளைக்கார காதலியுடன் க்யூவில் நின்றிருந்தார் ஒரு பச்சைத் தமிழர். சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்த அந்த அழகான அமெரிக்கப் பெண்தான் சென்டர் ஆப் அட்ராக்’ஷன். பல இளைஞர்களின் காதில் புகை. அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது.

    காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.

    மணி பத்தான பின்னும் கதவு திறக்காததால் அகில், “என்னப்பா ஒன்பதே முக்கால் ஷோன்னு சொன்னீங்க?” என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது.

    இருட்டான கொட்டகைக்குள் நுழையும்போது ஹிந்தி பட ட்ரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் இருக்கை பிடித்து அமர்ந்த பின்தான் இதெல்லாம் ஒரு கூட்டமே இல்லை என்று புரிந்தது. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை.

    சாவகாசமாய் படம் துவங்கி டைட்டில் கார்டு போட ஆரம்பிக்க, கமலுக்கும், ஸ்ருதிக்கும் மட்டும் சப்பையாய் கை தட்டினார்கள். அதற்கப்புறம் ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை.

    இடைவேளையில் மெக்சிகோ நாட்டுக்காரியின் கையால் சமோசா வியாபாரம் அமோகமாய் நடந்தது. மீடியம் கோக்… நாலரை டாலர். இரவு பனிரெண்டே கால் மணி போல படம் முடிந்தது.

    Netflix ஸ்ட்ரீமிங் மீடியாவில் A Wednesday நாலைந்து முறை பார்த்து விட்டதால் இந்தப் படம் புதிதாய் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. தமிழுக்கு இப்படி ஒரு படம் அவசியம்தான் என்று மட்டும் மனசில் பட்டது.

    ரொம்ப நாள் கழித்து பல நண்பர்களை அங்கே குடும்பத்தோடு சந்தித்தேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு நாங்கள் எல்லோரும் தியேட்டர் வாசலிலேயே உட்கார்ந்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஏழெட்டு குடும்பங்கள்! குழந்தைகள் அந்த அர்த்த ராத்திரியில் ஜாலியாய் ஓடிப் பிடித்து விளையாடின.

    நன்றி கமல் ஸார்.

    - சத்யராஜ்குமார்

     
    • என். சொக்கன் 10:29 பிற்பகல் on செப்டம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது//

      :) )))

      ஒரு சின்ன யோசனை –> Comments link topலமட்டும் இருக்கிறது டெம்ப்ளேட் பிரச்னைன்னு புரியுது, ஆனா பலர் அதைக் கவனிக்காம போயிட வாய்ப்பு உண்டு. பேசாம ஒவ்வொரு போஸ்ட்லயும் கீழ ஒரு வரி நீங்களே காபி – பேஸ்ட் செஞ்சுடலாமே – இன்னும் அதிகப் பேர் கருத்துச் சொல்வார்கள், அந்தப் புண்ணியத்தால் உங்களுக்கு அடுத்த கமல் படத்தில் ஒரு சின்ன வேஷம்கூட கிடைக்கலாம்!

      • சத்யராஜ்குமார் 11:11 பிற்பகல் on செப்டம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சொக்கன், நீங்கள் சொல்வது சரி. இந்த டெம்ப்ளேட் மாற்றிய பிறகு கருத்து சொல்வது குறைந்துள்ளது. குழுவாக பதிவு செய்ய இந்த வார்ப்புருதான் (ஹையா தமிழ்!) சரியாக இருக்கிறது. உங்கள் அருமையான யோசனையை செயல்படுத்த முயன்றேன். வேலை செய்யவில்லை. ஜாவாஸ்க்ரிப்டினால் காண்பிக்கப்படும் கருத்துப் பெட்டிக்காக அந்த லின்க்கில் dyanamic-ஆக ஒரு எண் சொருகப்படுகிறது. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்! கமல் படத்தில் சான்ஸ் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கு. :-)

    • அறிவிலி 10:59 பிற்பகல் on செப்டம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      போச்சுரா… இன்னோரு உ.போ.ஒ விமர்சன்மா என்று வநதேன். நல்ல வேளை, படத்தை பத்தி நெறைய எழுதாம, உங்க அனுபவத்த எழுதிருக்கீங்க. :-)

    • subhashree 12:46 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      oh..nothing about mr.mohanlal…so sad..anyway nice description…i enjoyed especially ..kamal is talking in english for that beautiful girl..ha..ha..ah…good…u remind me too much of mr.sujatha….

      • சத்யராஜ்குமார் 10:08 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சுபஸ்ரீ, மோகன்லாலும் சரி, அந்த இளம் அதிகாரிகளும் சரி அருமையாக நடித்திருந்தார்கள். சலங்கை ஒலியில் கமலை குதிக்க வைத்து தாறுமாறாக போட்டோ எடுத்து விட்டு, ”அய்யே காலு! இது தலை!” என்று வழியும் குண்டு பையன்தான் படத்தின் இயக்குனராமே!

    • ila 1:52 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நாங்க ஏழு பேர் தான் இருந்தோம்,. முதல் நாள்

      • சத்யராஜ்குமார் 10:10 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        இளா, வியாழக்கிழமை ராத்திரி படம் பார்க்க கூட்டம் கூடுவது கொஞ்சம் சிரமம்தான். :-( பொதுவாக கமல், ரஜினி படங்களை கூட்டமில்லாத தியேட்டரில் பார்ப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது, இல்லையா?

    • REKHA RAGHAVAN 8:01 மு.பகல் on செப்டம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.//

      இந்த வரிகளை ரசித்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் செய்கிற அங்க சேஷ்டைகளுக்காகவே விரும்பி போவதால் கதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு.

      ரேகா ராகவன்.

      • சத்யராஜ்குமார் 10:27 மு.பகல் on செப்டம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        ரேகா ராகவன், ஷங்கர் படத்துக்கு நிகரான சுவாரஸ்யமான கதையும், எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாத திரைக்கதையும் படத்தில் உண்டு.

    • டைனோ 9:13 மு.பகல் on செப்டம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      >>>பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா<<>>அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்<<>>போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி <<>>நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது. <<>>ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை<<<

      பஞ்ச் இல்லாம முடிச்சது!

      உங்க க்ராப்டை சிலாகிக்காம படிக்க முடியல… நல்ல எழுத்துங்க உங்களுக்கு!

    • RaviSuga 10:18 மு.பகல் on செப்டம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நகைச்சுவையாக எழுதியுள்ளிர்கள், அருமை.

    • Sentil 1:32 பிற்பகல் on செப்டம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      “காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.”

      Dear Satya, As I read the title, am very sure you would have captured many special incidents happened around you during the movie other than the movie itself. As expected you have sincerely done it. Very hilarious.

      • சத்யராஜ்குமார் 6:25 பிற்பகல் on செப்டம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        செந்தில், ஒரு திரைப்படத்தை வீட்டில் DVD-யில் பார்ப்பதற்கும், தியேட்டரில் பார்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்கள்தான். அவசர வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றால் இழக்கும் பலவற்றில் அதுவும் ஒன்று. உங்கள் கருத்துக்கு நன்றி!

  • கனகராஜன் 9:27 pm on September 11, 2009 நிரந்தர பந்தம் | பதில் |  

    நீ மேகம் ஆனால் என்ன? 

    அபபோது எனக்கு என்ன வயது என்று தெரியாது

    கனகராஜன் ஆர்ப்பாட்டமில்லாத எழுத்துக்கு சொந்தக்காரர். அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் இந்த ஆண்டு இரண்டாம் பரிசுக்குரிய கதை எழுதியிருக்கிறார். ஏற்கெனவே சில வருஷங்களுக்கு முன்பு முதல் பரிசு வாங்கியுள்ளார். 90-களின் மத்தியில் நானும் இவரும் சத்யராஜ்-கனகராஜ் என்ற பெயரில் இணைந்து எழுதிய குறுநாவல் ஒன்று கலைமகளில் பரிசு பெற்றிருக்கிறது. இந்தப் பதிவில் துவங்கி இவரும் ‘இன்று – Today’ எழுத்தாளராகிறார்.
    – சத்யராஜ்குமார்

    ஆனால் ஒண்ணாம் வகுப்புகூட சேரவில்லை. சமத்தூர் அரண்மனை வீதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். தினமும் சாயங்காலம் ஆனால் ஓலை கொட்டகையில் பாட்டு வைப்பார்கள். ஒரு நான்கு பாடல்கள். அதற்குப் பின்னால் உள்ளே ரிக்கார்டு போட்டு விட்டார்கள் என்று அவசர அவசரமாக சினிமாவுக்கு ஓடுவார்கள். எங்கள் வீட்டில் எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப்போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் மட்டுமே தெரியும். ஒரு நாள் ஏதோ ஷூட்டிங் எடுப்பதாகச் சொன்னார்கள்
    mgr
    படத்தின் பேர் தாயில்லாக் குழந்தை. விஜயகுமார் கதாநாயகன். கதாநாயகி ஜெயசித்ரா. அரண்மனை வீதி கூட்டத்தில் நிறைந்தது. மாட்டு வண்டி ரேஸ் காட்சிக்காக நிறைய மாட்டு வண்டிகள் வந்திருந்தன.

    வரிசையாக மாட்டு வண்டிகள் நிற்க ஒரு ஆள் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். திருவிழாக் கூட்டம் போல மக்கள் இரண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். நான் கால்களுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தர் இரக்கப்பட்டு எனக்கு வழி விட நான் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அடுத்த நாள் மாட்டு வண்டிகள் ஒவ்வொன்றாக ஓடின. மற்றொருநாள் வரிசையாக கார்கள் வந்தன

    ஒரு காரில் ஜெயசித்ரா வந்தார். கலர் பொம்மை மாதிரி எனக்குத் தெரிந்தார். விஜயகுமாரைப் பார்க்க முடியவில்லை. நான் காமிராவைப் பார்த்தேன். அந்தப் படம் ஒரு நாள் எங்கள் ஊர் ஓலைக் கொட்டகைக்கு வந்தது.

    எல்லாரும் ஓடிஓடிப் பார்த்தார்கள். நான் பள்ளிக்கூடம் போகத் துவங்கியிருந்த சமயம். எங்கள் வீட்டில் அழைத்துப் போகவில்லை. வகுப்பில் அந்தப் படத்‍தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டார்கள். நான் வீட்டில் சினிமாவுக்கு கூட்டிப் போகச் சொன்னேன். அப்பா அனுமதிக்கவில்லை. படத்தில் நாங்கள் குடியிருந்த வீடெல்லாம் இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு அதைப் பர்க்க ஆசையாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தப் படம் கருப்பு வெள்ளையா? ஈஸ்ட்மெண்ட் கலரா என்றுகூடத் தெரியாது. ஆனால் ஒரு பாட்டு மட்டும் நினைவில் இருக்கிறது. நீ மேகம் ஆனால் என்ன? நான் தோகை ஆன பின்னே… எப்போதாவது டிவியில் போடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    - கனகராஜன்

     
    • சித்ரன் 11:31 பிற்பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கனகு, சுத்தமாய் விவரம் தெரியாத குட்டிப் பையனாய் இருந்தபோது அப்பா அம்மாவுடன் டெண்ட் கொட்டகையில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்களின் தலைப்புகள் ஒரு சில தெள்ளத்தெளிவாய் ஞாபகம் இருக்கின்றன. அவள் ஒரு தொடர்கதை, தாலியா சலங்கையா, மயங்குகிறாள் ஒரு மாது, தீபம் அவைகளில் சில. ஆனால் கதையோ நடிகர்களோ சுத்தமாய் நினைவில்லை.

      சித்ரன்
      http://chithran.com

    • REKHA RAGHAVAN 11:56 பிற்பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும். சின்ன வயசில் நடந்த சம்பவங்களை அசை போடுவதில் எல்லோருக்கும் ஒரு அலாதி பிரியம்தான் (என்னையும் சேர்த்து).

      ரேகா ராகவன்.

  • சித்ரன் 11:33 am on January 30, 2009 நிரந்தர பந்தம் | பதில் |  

    ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்! 

    dialogue_pic

    1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??
    2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.
    3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..
    4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.
    5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.
    6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!
    7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!
    8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.
    9. தூக்குடா அவன..
    10. நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம்.
    11. உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..
    12. என் அன்னையின் மேல் ஆணை..
    13. யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.
    14. அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…
    15. தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…
    16. எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.
    17. நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக் குடுத்தாதான் எனக்கு நிம்மதி.
    18. என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டீங்களே..
    19. உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன செய்யணும்?
    20. ஏய்ய்ய்ய்ய்ய்ய்!
    21. என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!
    22. என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை பாக்கிறமாதிரியே இருக்கு.
    23. ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??
    24. ஏ.. யாருடி அவன்..?
    25. சார்.. போஸ்ட்..!!
    26. கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
    27. ஒரு பொண்ணு நினைச்சா…
    28. இத்துடன் கோர்ட் கலைகிறது.
    29. நான் இப்ப எங்கிருக்கேன் ?
    30. எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.
    31. ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..
    32. நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு வந்திருக்கறது…
    33. ……..

    தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற  வசனங்கள் என்னென்ன என்று ஒரு போரடித்த பொழுதில் யோசித்தபோது ஞாபகம் வந்தவை இவை.  ஏற்ற இறக்கங்களுடன் படிக்கவும். நீங்களும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்லலாம்.

     
    • chinnappaiyan 12:08 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      1. கங்ராஜுலேஷன்ஸ்… நீங்க அப்பாவாக போறீங்க!!!
      2. பணத்தை எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளியே இருக்கற பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்துடுங்க!!!

    • Yaathirigan 12:17 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :-) ))))))))))))))) sema collection

    • நாமக்கல் சிபி 1:26 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :) )

      தயவு செஞ்சி என்னை மறந்துடுங்க ராஜு!

    • மருதநாயகம் 1:45 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்கள பத்தி முழுசா தெரியாம ஏதேதோ பேசிட்டேன் என்ன மன்னிச்சுருங்க

    • Rajathi Raj 1:55 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      A few from me:
      பெத்தமனம் பித்து பிள்ள மனம் கல்லுனு சும்மாவா சொன்னாங்க
      …என்ன செய்வேனு எனக்கே தெரியாது
      இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா????
      வயித்தில நெருப்ப கட்டிகிட்டு இருக்குறது எனக்கு தான் தெரியும்…
      ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா??
      Bast**d
      அவன மொத்த dept வல வீசி தேடிட்ருக்கு
      மாத பிதா குரு தெய்வம்….
      சட்டம் தன்னோட கடமைய செய்யட்டும்
      தோள்ளயும் மார்லயும் தூக்கி வளத்த என்ன பாத்து….
      கல்யாணங்ரது சொர்க்கத்துல நிசசயிக்கபடுது
      இந்த உலகத்தில அனாதைனு யாரும் இல்ல
      என்ன எதுக்க இனிமே ஒருத்தன் பொறந்து தாண்டா வரணும்…
      பணத்தால எதையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்காதீங்க

      காதல்னா…..

    • sridharkannan 2:35 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நான் இப்ப எங்கிருக்கேன் ?

      :-)

    • Rajathi Raj 5:36 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Sridhar,
      Chithran has already said… # 29 :)

      Raj

    • sridharkannan 5:42 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Raj,
      நான் சும்மா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. நீங்கள் சீரியஸ் ஆகா எடுத்து கொள்ள வேண்டாம் .. :-)

    • sandanamullai mugilvananan 6:57 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :-) )))

    • Sakthi 8:55 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வில்லன்: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்
      ஹீரோ: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய

    • துளசி கோபால் 11:58 பிற்பகல் on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      25. நம்ம டுபுக்கு சாருக்கு எடுத்து வச்சுருங்க:-)

    • சித்ரன் 4:36 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாவ்.. எல்லார்கிட்டேயும் பெரிய லிஸ்டே இருக்குது போல..
      நன்றி!
      இன்னும் சிலது:
      1. பொண்ணு அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா.
      2. ஆங்.. பை தி பை.. இது என்னோட………
      3. அவ வயித்துல ஒரு புழு பூச்சி உண்டாகாதான்னு இத்தனை வருஷமாஆஆஆ..
      4. அம்மா! எனக்கு மெட்ராஸ்ல வேலை கிடைச்சிருச்சு. மாசம் ஆஆஆஆயிரம் ரூபா சம்பளம்.
      5. இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தா எப்படி? (பஞ்சாயத்து ஸீன்)
      6. எட்றா வண்டிய….
      7. டேய்.. நீ யாராயிருந்தா எனக்கென்னடா?
      8. வேண்டாம் முதலாளி! என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க!
      9. மிஸ்டர் ராஜா! வெல்டன். சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க.
      10. உன் கைய காலா நெனச்சுக் கேக்கறம்பா..
      11. இந்த உதவிய நான் என் வாழ்நாள் பூரா மறக்கமாட்டேன்.

    • துளசி கோபால் 4:45 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சரியான நேரத்துலே கொண்டுவந்துட்டீங்க. இன்னும் பத்து நிமிசம் லேட்டாயிருந்தா காப்பாத்தி இருக்க முடியாது.

    • SRIKANTH 7:54 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      NAN MADURA KARAN DA
      NANGALLAM

    • ஷாஜி 7:58 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      super collecton

    • Robot 8:39 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      naakula narambilama pesathinga….
      itha maranthutinga sir…

    • manikandan 9:19 மு.பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      wonderful collection..laughed like anything after a long time… :)
      we add these also…
      oru student nenacha…
      neenga ilatha vazhaiya enala nenachu kooda parka mudiyathu…

    • சித்ரன் 1:02 பிற்பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Rajathi Raj : நீங்க சொன்ன மாதிரி திரையில் அதிகம் பேசப்பட்ட வசனம் “காதல்ங்கறது…” -ன்னு நினைக்கிறேன்.

      இன்னும் பேசிகிட்டே இருக்காங்கப்பா!

    • r k prabu 1:28 பிற்பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      mappillai romba thangamanavaru

    • R.Kanagasabai 11:03 பிற்பகல் on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Very Good Collections

      Some Words as follows:

      Ayya Pichai Podungayya……
      Autooooo…….
      Taxiiii……..
      Pathinettu Patti Gramam…..

    • Ramachandran Usha(உஷா) 12:19 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ஐ ஹேட் யூ – ஈரோயினி, ஈரோக்கிட்ட அழுதுக்கிட்டே சொல்லிட்டு ஓடுவது.

      அவன தூக்கிடுங்க- சமீபக்கால வசனம்.

    • பிரேம்ஜி 1:19 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      டாக்டர் சொல்லுவார்.It is a medical miracle.அவர் உயிர் பொழச்சது ரொம்ப அதிசயம்.

    • பிரேம்ஜி 1:22 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      I am proud of you.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

    • சித்ரன் 2:15 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உஷா: அவன தூக்கிடுங்க -வை “9வது வசனமாக பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.” எனினும் anyway (ரைமிங் பாத்தீங்களா!) நன்றி.

    • aswin 3:23 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      innaki seththa naalakki paal
      vithiyai yaralum matra mudiyathu.
      Dr :sorry.nanga evvalavo try panniyum avara kaappatha mudiyala (kandippa intha edathula dr kannadiya kalattuvar)

    • navin 10:24 மு.பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      iyyo naa yenna pannuven?
      petha vayiru patthi eriyudu
      kappatunga

    • பினாத்தல் சுரேஷ் 12:44 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      1. சேலை மேலே முள்ளு விழுந்தாலும் முள்ளு மேலே சேலை விழுந்தாலும்..

      2. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சு..

    • சித்ரன் 12:59 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இதுவும்..

      * அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத ஒனக்கு என் பொண்ணு கேக்குதா?

      * நாழியாயிடுத்து.. பொண்ண அழைச்சுண்டு வாங்கோ!

    • Rajathi Raj 2:58 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி
      மற்றும் ஒன்று:

      கெட்டி மேளம் கெட்டி மேளம்….

    • Rajathi Raj 3:17 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்களோட “6. எட்றா வண்டிய…” பார்த்ததும் ஞாபகத்திற்க்கு வந்தது:

      ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஒரு காட்சி: ராதா ரவி விஜயை தேடி அவர் வீட்டுக்கு வந்து கத்திட்டு போகும்போது…எட்றா வண்டிய…னு sound-அ சொல்லிட்டு அவரே ஓட்டிட்டு போவார் :)

    • Sriram 10:57 பிற்பகல் on பெப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Enna vittudu … Enna vittudu … Plz…
      (Heroine or Hero’s sister during raping scene)

    • athirai 7:34 மு.பகல் on பெப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி?.
      2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும்! இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .
      3.வில்லன்: எவன் லே இந்த சிவா?. “அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்”.
      4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.
      5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்
      5.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.
      6.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா ?).

      மேலும் இது போன்ற சினிமா கடிக்களுக்கு:

      http://aruvadai.blogspot.com/2008/12/blog-post_3839.html

    • tnvmaniraj 10:07 மு.பகல் on பெப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிகவும் சுவையாக இருந்தது!

    • சித்ரன் 10:34 மு.பகல் on பெப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே இருக்குதே.

      மேலும் சில :
      * ஹலோ.. யார் பேசறது?
      * கமிஷனர் : இந்தக் காரியத்தை வெற்றிகரமா செய்து முடிக்க நம்ம டிபார்ட்மெண்ட்ல ஒருத்தராலதான் முடியும்.. அவர் பேரு…. (ஹீரோ இண்ட்ரொடக்‌ஷன்)
      * நான் பண்ணின பாவத்துக்கெல்லாம் ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை குடுத்துட்டார்.
      * ச்சே! உன்னயெல்லாம் என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுக்கே வெக்கமாயிருக்கு. (இனிமே என் மூஞ்சில முளிக்காத!)
      * குண்டடிபட்ட துணை நடிகர்: என்னப் பத்திக் கவலப்பட வேண்டாம்.. நீங்க எப்படியாவது இங்கிருந்து சீக்கிரம் தப்பிச்சு போயிருங்க!

    • athirai 4:01 மு.பகல் on பெப்ரவரி 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      More
      1. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.

      2. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்?.

      3. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.

      4. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு?).

      5. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,

      6. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இதெல்லாம் பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).

      http://aruvadai.blogspot.com/2009/02/blog-post.html

    • rajesh 2:03 மு.பகல் on பெப்ரவரி 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      tamilish is good…… matrum onru (neeum naanum apadiya pazhaganum)

    • S.Vadivelmurugan 8:53 மு.பகல் on மே 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அவன்: அவர் வரட்டும்
      மற்றவன்: அதோ அவரே வந்துட்டாரே
      சகாதேவன்

    • KK 2:20 மு.பகல் on ஜூன் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Aazaghukirthu Mugathil illa aathu maanasulathan eeruku!!!!!!!!!!!!!

    • sethu 8:44 மு.பகல் on ஜூன் 28, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      படிச்சி முடிச்சி ஊருக்கு ஹீரோஇன் வந்தவுடன் ….
      ரயில் பயணம் எப்பிடிமா இருந்திச்சி ? னு ஹீரோஇன் அம்மா/அப்பா கேட்பாங்க..
      அடுத்தது , குளிச்சிட்டு வாம்மா டிப்பன் ரெடியா இருக்கு …னு சொல்லுவாங்க …

    • sethu 9:08 மு.பகல் on ஜூன் 28, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      1) சட்டம் தன் கடமையை செய்யும் …
      2) என் தலைய அடமானம் வச்சாவது …. இத முடிப்பேன் …
      3) ஜாம்.. ஜாம்… னு கல்யாணத்த நடத்திடலாம்…..
      4) சின்ன மீன போட்டுதான் பெரிய மீன பிடிகணும்

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்