RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சித்ரன் 7:47 am on January 10, 2009 நிரந்தர பந்தம் | பதில் |
    குறிச்சொற்கள்: ஓவியம், கலை   

    ராப் என்கிற கலைஞன் 

    டோராவுக்கு அடுத்தபடியாக நான் ரசித்துப்பார்க்கிற இன்னொரு நிகழ்ச்சி POGO – வில் வருகிற MAD. இந்த நிகழ்ச்சியை நான் வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் பார்ப்பதற்கு காரணம் நிகழ்ச்சியை நடத்துகிற ROB என்று செல்லமாய் குழந்தைகளால் அறியப்படுகிற Harun Robert.

    போகோ-வை எனக்குப் பொதுவாகவே பிடிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அதன் கிரியேட்டிவிட்டி. அடுத்தது எந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும் கலர்ஃபுல்லாக இருப்பது. நிகழ்ச்சிகளின் டைட்டில் அனிமேஷன்கள், ட்ரைலர்களைப் பார்த்தாலே நான் சொல்ல வருவது புரியும்.

    இந்த ராப் என்கிற ஆசாமிக்கு கிரியேட்டிவிட்டி கொஞ்சம் ஜாஸ்திதான். கையில் எது கிடைத்தாலும் கொஞ்சம் வர்ணங்கள், இத்துனூண்டு பசை, ஒரு கத்திரிக்கோல் இத்யாதிகளை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு அழகான பொருளாக அதை மாற்றிவிடுகிற கைங்கரியம் இருக்கிறதே!! அது பல சமயங்களில் ‘அட’ என்று சொல்ல வைக்கும். எங்கிருந்து இந்த மனிதருக்கு மட்டும் இப்படிக் கற்பனை ஊற்றெடுக்கிறதென்று ஆச்சரியமாக இருக்கும்.

    ராப் ஒரு அருமையான ஓவியர். அனிமேஷனில் மிகத் தேர்ச்சிபெற்றவர். டன் டன்னாக கலைத் திறமை கொட்டிக்கிடக்கிற படைப்பாளி. 

    ஸ்டைலான ஒரு குறுந்தாடி, தலையில் ஒரு பெரிய கர்சீப் அல்லது தொப்பி, வரிசைப் பல் சிரிப்பு , கலர்ஃபுல் பனியன் என்று அசத்தலான கெட்டப்பில் வருகிற ராபுக்கு தன் கிரியேட்டிவிட்டி மூலம் குழந்தைகளை ஸ்நேகமாய் ஈர்க்கத் தெரிந்திருக்கிறது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இறுதியில் அவர் ஒரு சின்ன டீமுடன் அல்லது தனியாக உருவாக்குகிற  “தி பிக் பிக்சர்” அமர்க்களமான ஒன்று. 

    குழந்தைகளின் படைப்புத்திறனை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் MAD-ஐ பார்க்க ஊக்குவிக்கலாம்.

    - சித்ரன்

     
  • சித்ரன் 7:25 am on October 7, 2007 நிரந்தர பந்தம் | பதில் |  

    பார்த்துத் தொலைப்போம்!! 

    விஜய் டிவியின் ஜோடி நெ.1 நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவரான சிம்புவின் நேரடி அதிரடித் தீர்ப்பின் தீர்க்கத்தை தாங்க மாளாத நடிகர் பப்லு என்கிற பிருத்வி தன் உணர்ச்சிப் பிழம்பின் சீற்றத்தை சிம்புவின் மேல் திருப்பி அனுப்ப, நிகழ்ச்சி ரசாபாசமாகி சிம்பு ‘இந்த நிகழ்ச்சியிலிருந்து eliminate ஆவது நான்தான்’ என்று தானே அறிவித்துக் கொண்டு கேமரா, ட்ராலி, செட்களைத் தாண்டி வெளியேற, போட்டியில் கலந்து கொண்டவர்கள் வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு காரில் ஏறும்முன் மடக்கி, கெஞ்சி மறுபடியும் கொண்டுவந்து நடுவர் இருக்கையில் அமர வைத்தார்கள். மேலும் தொடர்ந்த சிம்புவின் emotional burst-out அழுகை இன்னபிற காரணங்களால் பிருத்விராஜ் போட்டியிலிருந்து வெளியேற, இத்தனையையும் லைவ் ரிலே என்ற பெயரில் போட்டுக் காட்டி டி.வி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    பெரிய திரையில் K. பாலசந்தர் கையால் எல்லாம் குட்டுப்பட்ட நடிகர் பப்லு என்கிற பிருத்வி சின்னத்திரையில் இப்படி சிம்புவிடம் சிலுப்பிக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது என்கிற கேள்வியை பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள்தான். அதை விடுங்கள்!

    இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage-ல் இருக்கவேண்டிய நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது.

    ரொம்ப கஷ்டம்தான்! ஆனாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

     
    • Ramu 9:17 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      yes, vijay tv does it a last. it makes money out of people emotions.
      bad example set by vijay tv.
      lot of issues in this Jodi number I session II

    • ராஜா 9:34 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      மற்ற நடுவர்கள் பாராட்டி மதிப்பெண் வழங்கிய நிலையில் சிம்புவின் கமெண்ட்களை பப்லு இந்தளவு சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லைதான். என்றாலும், solo round இல் இருந்தே சிம்புவின் கமெண்ட்கள் பப்லுவை மட்டம் தட்டும் வகையில் இருப்பதை உணர முடிகிறது. பப்லு
      உண்மையிலேயே நன்றாக ஆடினார் என்பதில் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் யாருக்கும் இருவேறு அபிப்ராயம் இருக்க முடியாது. பேச விரும்பவில்லை என்று நின்றவரை வீண் வம்புக்கு இழுத்து ரசாபாசமாக்கி வெளியேற்றியது வரை எல்லாம் சிம்புவின் கைவண்ணம்.

      ஒவ்வொரு ஜோடியும் ஆடி முடித்ததும் அவர்களை டென்ஷன் ஆக்குகிறேன் பேர்வழி என்று சிம்பு அடிக்கும் கொட்டம்; ஒரு ஜோடியிடம் இன்னொரு ஜோடி பற்றி கருத்து கேட்டு சங்கடப்படுத்தி ரசிக்கும் மனோபாவம் – எல்லாமே சிறுபிள்ளைத்தனம்.

      –”இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது” –

      நிஜம்.

    • சித்ரன் 10:45 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      ராமு, ராஜா,
      நீங்கள் சொல்வது சரியே. ‘எனக்குப் பிடிக்கல’ என்று முகத்தில் அடித்தார்போல் தீர்ப்பு சொல்வதேகூட ஒரு நல்ல நடுவருக்கு அழகில்லை. நாகரிகமும் இல்லை என்பது என் கருத்து. அப்படிச் சொல்வது ஒரு Audience attitude என்றே கருதுகிறேன். சிம்பு அதைத்தான் செய்கிறார்.

    • சத்யராஜ்குமார் 10:46 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      பல வருடங்களுக்கு முன்பே யாகவா முனிவரையும், சிவஷங்கர் பாபாவையும் வைத்து ஏதோ ஒரு டிவியில் இந்த மாதிரி ட்ரையல் பார்த்தார்கள் என்று நினைக்கிறேன்.

    • சித்ரன் 10:50 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்.. எங்கேயோ போயிட்டீங்க..!

    • LORDLABAKKU 10:51 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      ithu ellam pre-planned thaan… since too many channels showing the same kind of dance show, seems vijay tv is making some gimmicks…

    • Prakash 11:16 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      எல்லாமே செட்டப் மாதிரிதான் எனக்குத் தோணுச்சு

    • bsubra 11:21 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      எந்த மாதிரி ஆடியன்ஸ் வேணும் என்று எண்ணுவதில்தான் இருக்கிறது.

      ஷில்பா ஷெட்டி கலந்து கொண்ட பிக் பிரதர், அமெரிக்க எம்.டிவியின் நிஜ நாடகங்களில், இந்த ‘ரியாலிடி’யை சிறப்பாகவே அரங்கேற்றுகிறார்கள். பதின்ம வயதினரையும் கட்டிப்போட்டு பார்க்க வைக்கிறது.

      சன்/விஜய்- கள் இன்னும் இந்த ஒத்திகை பார்க்கப்பட ‘அதிரடி நிஜ’ நிகழ்வுகளை எடிட் செய்வதில் தேறவில்லை. சினிமா வெளியாகும் முன் எஸ்.ஜே சூர்யாவிற்கும் மீரா ஜாஸ்மினுக்கும் திருமணம் போன்ற வதந்திகளைக் கிளப்பி விருவது போல், டிவி கிசுகிசுக்களில் ப்ரொஃபஷனலிஸம் போதவில்லை.

    • என்னத்த கண்ணைய்யா 11:22 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      பப்லுவை திரையுலகில் ஒரு தாயின் சபதம் படத்தில் டான்சராக அறிமுகம் செய்து வைத்தவர் டி ராஜேந்தர்.

      முன்று நடுவர்கள் இருந்தால் எல்லோருமே ஒரே கருத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. சிம்பு வெளிப்படையாக பேசி இருக்கக் கூடாது என்று தான் பலரும் சொல்கிறார்கள். சிம்பு பாயிண்டும் சரியாக இருக்கும் முந்தய நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார் என்பதையும் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது.

    • சித்ரன் 11:25 மு.பகல் on அக்டோபர் 7, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      இருக்கலாம் பிரகாஷ்,
      இந்த நிகழ்வு ஒன்றை மட்டுமே இந்த தொடருக்கான விளம்பரங்களில் ஒரு வாரமாய் காட்டி காட்டி நிகழ்ச்சி அன்று நிறைய viewership-ஐ ஈட்டிக்கொண்டார்கள்.

  • சத்யராஜ்குமார் 11:13 am on October 3, 2007 நிரந்தர பந்தம் | பதில் |  

    திரை 

    Brambleton சினிப்ளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் இப்போதுதான் சிவாஜி பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் DVD வந்து விட்டது. நேற்று நந்தா என்னுடைய LCD ப்ரொஜெக்டரில் பார்க்க வேண்டுமென்று இந்திய அங்காடியிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்திருந்தார்.

    சிவாஜி, மனிதன் இரண்டு படங்களும் ஒரே DVD-யில்! மெனு திரையில் மனிதன் ரஜினியின் முகத்தையும், சிவாஜி ரஜினியின் முகத்தையும் க்ளோஸப்பில் பக்கம் பக்கம் போட்டிருந்தார்கள். ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முயன்று என்னால் ஒன்று மட்டுமே பிடிக்க முடிந்தது.

    இந்தச் சமயத்தில் ப்ரொஜெக்டர் பற்றி சிறு குறிப்பு. நண்பர்கள் நாற்பது இன்ச் குறுக்களவில் HDTV-களை நிறைய விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்க, அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் HDTV சிக்னலுடன் ஒத்துப் போகிற LCD ப்ரொஜெக்டர் வாங்கினேன். ஏதாவது ஒரு குட்டிச்சுவரில் 100 இன்ச் அகலத்துக்கு படு தாராளமாய்ப் படம் பார்க்கலாம். ஏற்கெனவே வைத்திருந்த BOSE இசை வழங்கியுடன் சேர்ந்து தியேட்டர் அனுபவம் அப்படியே கிடைக்கிறது.

    வரவேற்பறையை பந்தாவாகக் காட்ட முடியாதென்பதைத் தவிர வேறெந்த அசௌகரியமும் இதனிடம் இல்லை.

     
    • மங்களூர் சிவா 1:35 பிற்பகல் on அக்டோபர் 3, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      //
      மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் HDTV சிக்னலுடன் ஒத்துப் போகிற LCD ப்ரொஜெக்டர் வாங்கினேன். ஏதாவது ஒரு குட்டிச்சுவரில் 100 இன்ச் அகலத்துக்கு படு தாராளமாய்ப் படம் பார்க்கலாம்
      //

      புரொஜக்டர்க்கு லைப் ரொம்ப கம்மி என ஒரு பேச்சு இருக்கிறதே உண்மையா?

      சிவாஜி டிவிடி ப்ரிண்ட் நன்றாக இருக்கிறதா?

    • சத்யராஜ்குமார் 2:03 பிற்பகல் on அக்டோபர் 3, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      சிவா,
      ப்ரொஜெக்டர் பல்புக்கு ஆயுள் காலம் உள்ளது. ஆயுள் முடிந்ததும் மாற்ற வேண்டும். ஆனால் இது Back Projection Big Screen TV-க்களுக்கும் பொருந்தும்.

      சிவாஜி DVD ப்ரிண்ட் சும்மா அதிருதுங்க.

    • T.V.Radhakrishnan(raki) 5:24 பிற்பகல் on நவம்பர் 23, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      Brambletonil Ungalukku yaar irukkirargal.,enadhu magal Irukkiral,. Naan ippodhu anguthan march 3 varai iruppen.
      T.V.Radhakrishnan

    • சத்யராஜ்குமார் 10:03 மு.பகல் on டிசம்பர் 5, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      @raki: Did you get my email ?

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்