Updates from ஏப்ரல், 2008 Hide threads | Keyboard Shortcuts

  • சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3 

    சித்ரன் 6:47 am on April 29, 2008 நிரந்தர பந்தம் | பதில்

    லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது Singaporeஉறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க கூடுகிற கூட்டம்தான்.  Money Transfer அலுவலகங்களில் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசை நீளமாய்க் காத்திருக்கிறது. அர்ஜூனரு வில்லு அரிச்சந்த்ரன் சொல்லு.. என்று ஒலி பெருக்கியில் பாடல் முழங்குகிறது. சி. ஒ. சி. வி -2-ல் குறிப்பிட்டபடி நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்.

    லிட்டில் இந்தியாவின் மிக முக்கிய அட்ராக்ஷன் செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். எளிதில் புரிய வைக்க இதை சிங்கப்பூரின் சரவணா ஸ்டோர்ஸ் என்று சொன்னால் முதலாளி கோபித்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைவிட 10 மடங்கு இருக்கிற இந்த மெகா ஸ்டோரில் சிங்கப்பூர் விசா தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். இது தவிர முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் (எல்லோரும் ஏன் இதை நிரஞ்சன் என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை) என்று ஒரு சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கிறது.

    ஆக லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் இந்திய இதயம்.

    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 2
    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1

     
  • தமிழில் பேசி எரிச்சலூட்டாதீர் 

    சத்யராஜ்குமார் 8:59 am on February 17, 2008 நிரந்தர பந்தம் | பதில்

    உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இங்கே Expedia அல்லது SideStep தளங்களைப் போலவே இத்தளம் இந்தியாவின் வெவ்வேறு விமான நிறுவனங்களின் பயண விலையை தேடி தொகுத்துக் கொடுக்கிறது. அவர்கள் சேவையும் சிறப்பாகவே இருப்பதாக உமேஷின் வாசகர்கள் தரும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

    கூடுதலாக Small World என்ற பகுதியையும் இத்தளம் நிர்வகிக்கிறது.  நீங்கள் பயணிக்க இருக்கும் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் பற்றிய சிறு விபரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.  அதில் சென்னை பற்றிய குறிப்பைப் பார்த்து சற்றே துணுக்குற்றேன்.

    People in Chennai are generally averse to speaking in Hindi which makes it difficult to converse with the locals, especially if they are not conversant in English either.           

    சென்னைக்கு பயணிப்பவர்களுக்கான உபயோகமான தகவல்தானே என்று தோன்றுகிறதா ? பிரச்சனை தகவல் குறித்து அல்ல.Cleartrip Annoyanceஅது தொகுக்கப்பட்டிருக்கும் இடம். சென்னை நகரத்தின் எரிச்சலூட்டும் அல்லது அசவுகர்யம் தரும் விஷயங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருக்கிறது இந்த மும்பை நிறுவனம். ஒரு பகுதி மக்கள் அவர்கள் தாய்மொழியில் பேசிக்கொள்வதை எப்படி அசௌகர்யம் என்று கருதலாம் ? 

    இது போன்ற தகவல்களை கருத்தாக்கமாகத் தராமல்  புள்ளி விபரங்களாகத் தருவது வியாபார நிறுவனங்களுக்கு நல்லது. 

     
    • மூக்கு சுந்தர் 8:54 பிற்பகல் on பெப்ரவரி 17, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      இதே விதமான கருத்து பெரும்பாலான வட இந்தியர்களிடம் இருக்க்கிறது. இதற்குக் காரணம் நாம் மொழி மற்றும் இனம் பற்றி ஓவராக அலட்டிக் கொள்கிறோம் என்கிறார்கள்.

      நாம்தான் “மும்பை மண்ணின் மைந்தர்களுக்கே ” என்று சொல்லி மற்றாவர்களை துரத்துகிறோமா..?? :-) :-)

    • Deepak 12:47 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      Hi,

      What you told is absolutely true. Even I have faced similar words from my colleagues here in Bangalore. I always tell them that we don’t require to speak hindi in TN as most of them speak tamil. After all chennai is known to be good to people who travel from outside our state and even country.

    • blj 2:21 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      I wonder if Cleartrip has annoyance guide to other cities in the world, lets say people in Shanghai, Budapest or even London are reluctant to speak in Hindi. How annoying!

    • மணியன் 5:33 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      மும்பை,தில்லி போன்ற நகரங்களுக்கான வழிகாட்டுதலில்,
      //People in Mumai/Delhi are generally averse to speaking in English which makes it difficult to converse with the locals // என்று போட்டிருந்தால் கொள்ளாம்:)

    • சத்யராஜ்குமார் 9:35 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      @சுந்தர்: அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபங்களுக்காக தோற்றுவிக்கும் கருத்துக்களுக்கு மக்களும், நிறுவனங்களும் பலியாகின்றன. ஹிந்தி படிப்பதாலோ படிக்காததாலோ எழும் லாபமோ நஷ்டமோ அவரவர் சொந்த வாழ்க்கைப் பாதையின் அடிப்படையில் நிகழும் ஒன்று. எந்த பாஷைக்கும், எந்த மண்ணின் மைந்தர்களுக்கும் நாம் எதிரி அல்லவே. :-)

      @Deepak: This topic is discussed in internet by individuals so many times and there is no end for this debate. I wanted to convey cleartrip or any other organization that this can only be an information to Indians speaking Hindi (or 20 other languages excluding Tamil and Hindi) or foreigners visiting Chennai, not annoyance.

      @blj: :-)

      @மணியன்: சென்னை, மும்பை, டில்லி உட்பட எப்பகுதி மக்களின் மனதையும் காயப்படுத்தாவண்ணம் செய்திகள் தொகுக்கப்படட்டும் !

      @Umesh Gopinath: Thanks for addressing this post with the exact tone in Whitespace. I wondered that you could read and understand Tamil !

    • Umesh 11:24 மு.பகல் on பெப்ரவரி 19, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      @SRK Yes i can read and understand Tamil; just that it took some extra time for me :)

    • Balaji Prasanna 5:36 மு.பகல் on மார்ச் 7, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      this is not a valid point.

    • Stone 5:22 மு.பகல் on டிசம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      Regarding the clear trip remarks, the said words are due to the experience of the reporter or as the case may be. Let him be like that. We the tamilians continue to be as we are. Without knowing a language and visiting that country is a mistake on the visitor. Just because other language people are visiting, a tourist country cannot learn all other languages. They forgot one thing, That is “when you are Rome, you should be a romanian”. If you are not so, the mistake is yours only and not that of Rome’s. To avoid such irritations, the visitor should take atleast some simple steps to learn the language. Particularly in a diversified cultural / linguistic / ethnic country like that of ours, we should respect others culture, language, etc., and everybody should try to learn other language etc., and try to mingle with them. Otherwise intolerence will be growing within us without our knowlege

    • சத்யராஜ்குமார் 8:11 மு.பகல் on டிசம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      Stone, You are right. Nothing wrong in learning one more language basics if you have to visit the place.

  • கற்றது தமிழ் மட்டுமல்ல 

    சத்யராஜ்குமார் 8:09 am on November 15, 2007 நிரந்தர பந்தம் | பதில்

    கற்றது தமிழ் பார்க்கையில் சட்டென நினைவுக்கு வந்தவர் தமிழாசிரியர் ஆ. கணேசன். நான் எழுத ஆரம்பித்ததற்கான பல காரணிகளில் அவரும் ஒருவர். பெற்றோர் விருப்பத்துக்காக பி.எஸ்.சி தாவரவியல் படித்து விட்டு, தன் சொந்த விருப்பத்துக்காக எம்.ஏ தமிழ் படித்து, தமிழ் ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

    வகுப்பில் பாதி நேரம் பாடம் நடத்தினால் மீதி நேரம் பொது விஷயம் போதிப்பார். அந்த அடலஸன்ட் பருவத்தில் மனதிலிருக்கும் பல கேள்விகளுக்கு யாரும் கேட்காமலே வகுப்பறையில் அவர் விடை சொல்லியிருக்கா விட்டால், சரியாகத் தெரிந்து கொள்ள பல நாளாகியிருக்கும். அல்லது தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

    இயற்பியல் பேராசிரியர் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது. ” என்ன நீ அந்த ஆளோட அதிகமா சுத்திட்டிருக்கே ? நீ ஒழுங்கா படிக்கிற பையன். உருப்படாம போயிடாதே. “. இதெல்லாம் தொழில்நுட்ப பள்ளியில் நான் பத்தாவது படிக்கும்போது நடந்தது. டிப்ளமோ முடித்ததும் எனது முதல் சிறுகதை சாவியில் வெளியானது. வழியில் அவரை சந்தித்தபோது, ” நிறைய எழுதுப்பா. ” என்று மெலிதான ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.

    சரி, கடைசி பத்திகள் பார்த்த சினிமாவுக்கு அர்ப்பணம். படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல் கல். ஒளியை கதை சொல்ல பயன்படுத்துவது தமிழ் சினிமாக்களில் அபூர்வம். இதில் படம் பூராவும் ஒளியமைப்பும் சேர்ந்து கதை சொல்கிறது. பாலாவும், தங்கர்பச்சனும் குத்தாட்டத்தோடு சாதித்ததாகச் சொல்லிக் கொண்டதை இந்த இயக்குனர் – நிஜமாத்தான் சொல்றேன் – சாதித்திருக்கிறார். ஏற்கெனவே காதல் திரைப்படம் 90% நெருங்கியது. சில பாடல் காட்சிகளில் கோட்டை விட்டது. பதினாறு வயதினிலே கிராமத்தைக் காட்டிய மாதிரி இது நகரத்தையும், இன்றைய காலகட்டத்தையும் அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறது. ஆனால், காட்சியமைப்புகளில் இருந்த யதார்த்தம் கதையில் பல இடங்களில் சறுக்குகிறது. நாயகன் கொலைகள் செய்ய வலுவாகக் காரணங்கள் இருந்தாலும், ‘கொலை செய்ய காரணம் தேவையில்லை’ என்றும், ‘தமிழ் படித்ததால் கொலை செய்தேன்’ என்றும் ஆரம்பக் காட்சியிலேயே அஸ்திவாரம் போட்டது ஃபான்ட்டஸி. கிராமத்தில் போலிஸ் சுற்றி வளைக்கும் காட்சியை இயக்குநர் வைத்திருக்க மாட்டார். சென்சார் போர்டு வைத்திருந்திருக்கும். இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.

    வாழ்க்கையைப் படிக்காத அந்தக் கதாநாயகனுக்கு தமிழ் அல்ல, கம்ப்யூட்டர் படித்திருந்தாலும் இதே கதிதான்.

     
    • T.V.Radhakrishnan(raki) 3:15 பிற்பகல் on நவம்பர் 15, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      I am a script writer.so far I have written 14 drama scripts and more than 30 short stories.my script Bharataratna not only won the best script award but also selected as the best script of 2005.All the credits goes to my tamil teacher(srmhs,ambattur)sri Ramachandran

    • Manki 6:35 மு.பகல் on டிசம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      //இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.//

      நிஜ வாழ்க்கையில் so-called தீமை ஜெயிப்பதைத்தான் தினமும் பார்க்கிறோமே. ஒரு கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் ஏன் அது கூடாது?

    • சத்யராஜ்குமார் 8:45 மு.பகல் on டிசம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் | பதில்

      Manki, கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் அது கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பட்ட கதைகளை நானே எழுதியிருக்கிறேன். ஸ்தாபிக்க முயன்ற உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

    • பொன்.சுதா 11:10 பிற்பகல் on ஜனவரி 8, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      அய்யா சரியான விமர்சனமுங்க…

    • சத்யராஜ்குமார் 9:06 பிற்பகல் on ஜனவரி 9, 2008 நிரந்தர பந்தம் | பதில்

      பொன்.சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்