தமிழில் பேசி எரிச்சலூட்டாதீர்
உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இங்கே Expedia அல்லது SideStep தளங்களைப் போலவே இத்தளம் இந்தியாவின் வெவ்வேறு விமான நிறுவனங்களின் பயண விலையை தேடி தொகுத்துக் கொடுக்கிறது. அவர்கள் சேவையும் சிறப்பாகவே இருப்பதாக உமேஷின் வாசகர்கள் தரும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
கூடுதலாக Small World என்ற பகுதியையும் இத்தளம் நிர்வகிக்கிறது. நீங்கள் பயணிக்க இருக்கும் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் பற்றிய சிறு விபரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும். அதில் சென்னை பற்றிய குறிப்பைப் பார்த்து சற்றே துணுக்குற்றேன்.
People in Chennai are generally averse to speaking in Hindi which makes it difficult to converse with the locals, especially if they are not conversant in English either.
சென்னைக்கு பயணிப்பவர்களுக்கான உபயோகமான தகவல்தானே என்று தோன்றுகிறதா ? பிரச்சனை தகவல் குறித்து அல்ல.
அது தொகுக்கப்பட்டிருக்கும் இடம். சென்னை நகரத்தின் எரிச்சலூட்டும் அல்லது அசவுகர்யம் தரும் விஷயங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருக்கிறது இந்த மும்பை நிறுவனம். ஒரு பகுதி மக்கள் அவர்கள் தாய்மொழியில் பேசிக்கொள்வதை எப்படி அசௌகர்யம் என்று கருதலாம் ?
இது போன்ற தகவல்களை கருத்தாக்கமாகத் தராமல் புள்ளி விபரங்களாகத் தருவது வியாபார நிறுவனங்களுக்கு நல்லது.


மூக்கு சுந்தர் 8:54 பிற்பகல் on பெப்ரவரி 17, 2008 நிரந்தர பந்தம் |
இதே விதமான கருத்து பெரும்பாலான வட இந்தியர்களிடம் இருக்க்கிறது. இதற்குக் காரணம் நாம் மொழி மற்றும் இனம் பற்றி ஓவராக அலட்டிக் கொள்கிறோம் என்கிறார்கள்.
நாம்தான் “மும்பை மண்ணின் மைந்தர்களுக்கே ” என்று சொல்லி மற்றாவர்களை துரத்துகிறோமா..??
Deepak 12:47 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் |
Hi,
What you told is absolutely true. Even I have faced similar words from my colleagues here in Bangalore. I always tell them that we don’t require to speak hindi in TN as most of them speak tamil. After all chennai is known to be good to people who travel from outside our state and even country.
blj 2:21 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் |
I wonder if Cleartrip has annoyance guide to other cities in the world, lets say people in Shanghai, Budapest or even London are reluctant to speak in Hindi. How annoying!
மணியன் 5:33 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் |
மும்பை,தில்லி போன்ற நகரங்களுக்கான வழிகாட்டுதலில்,
//People in Mumai/Delhi are generally averse to speaking in English which makes it difficult to converse with the locals // என்று போட்டிருந்தால் கொள்ளாம்:)
சத்யராஜ்குமார் 9:35 மு.பகல் on பெப்ரவரி 18, 2008 நிரந்தர பந்தம் |
@சுந்தர்: அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபங்களுக்காக தோற்றுவிக்கும் கருத்துக்களுக்கு மக்களும், நிறுவனங்களும் பலியாகின்றன. ஹிந்தி படிப்பதாலோ படிக்காததாலோ எழும் லாபமோ நஷ்டமோ அவரவர் சொந்த வாழ்க்கைப் பாதையின் அடிப்படையில் நிகழும் ஒன்று. எந்த பாஷைக்கும், எந்த மண்ணின் மைந்தர்களுக்கும் நாம் எதிரி அல்லவே.
@Deepak: This topic is discussed in internet by individuals so many times and there is no end for this debate. I wanted to convey cleartrip or any other organization that this can only be an information to Indians speaking Hindi (or 20 other languages excluding Tamil and Hindi) or foreigners visiting Chennai, not annoyance.
@blj:
@மணியன்: சென்னை, மும்பை, டில்லி உட்பட எப்பகுதி மக்களின் மனதையும் காயப்படுத்தாவண்ணம் செய்திகள் தொகுக்கப்படட்டும் !
@Umesh Gopinath: Thanks for addressing this post with the exact tone in Whitespace. I wondered that you could read and understand Tamil !
Umesh 11:24 மு.பகல் on பெப்ரவரி 19, 2008 நிரந்தர பந்தம் |
@SRK Yes i can read and understand Tamil; just that it took some extra time for me
Balaji Prasanna 5:36 மு.பகல் on மார்ச் 7, 2008 நிரந்தர பந்தம் |
this is not a valid point.
Stone 5:22 மு.பகல் on டிசம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் |
Regarding the clear trip remarks, the said words are due to the experience of the reporter or as the case may be. Let him be like that. We the tamilians continue to be as we are. Without knowing a language and visiting that country is a mistake on the visitor. Just because other language people are visiting, a tourist country cannot learn all other languages. They forgot one thing, That is “when you are Rome, you should be a romanian”. If you are not so, the mistake is yours only and not that of Rome’s. To avoid such irritations, the visitor should take atleast some simple steps to learn the language. Particularly in a diversified cultural / linguistic / ethnic country like that of ours, we should respect others culture, language, etc., and everybody should try to learn other language etc., and try to mingle with them. Otherwise intolerence will be growing within us without our knowlege
சத்யராஜ்குமார் 8:11 மு.பகல் on டிசம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் |
Stone, You are right. Nothing wrong in learning one more language basics if you have to visit the place.