Google vs XYZ


Amazon-ல் பொருள் வாங்கும் அனுபவம் இது வரை படு திருப்திகரம். பல முறை, ஆர்டர் செய்த சற்று நேரத்தில் மனம் மாறினால் இலகுவாய் கேன்சல் செய்ய முடிந்துள்ளது.

மகனுக்கு பரிசளித்த மீடியா ப்ளேயருக்கான சார்ஜர் தேவைப்படவே Google-ல் ஆர்டர் செய்தேன். பிறகுதான் தெரிந்தது, கம்ப்யூட்டருடன் இணைத்தால் அது தானே சார்ஜ் செய்து கொள்ளும் என்று. ஆர்டரை ரத்து செய்ய முறையான வழி முறைகள் Google-ல் இல்லை. பொருள் வழங்கும் பார்ட்னருடன் தொலை பேசி ( No response!) அல்லது மின்னஞ்சல் அனுப்பி ரத்து செய்ய கேட்க வேண்டியிருந்தது. நான்கு நாட்களாகியும் பதில் இல்லை. இன்று க்ரெடிட் கார்டில் பணம் கழிக்கப் பட்டு, பொருள் Ship ஆகி விட்டது.

சமீபத்திய வாடிக்கையாளர் கருத்துக் கணிப்பில் Google-லை Yahoo-வும் பிற நிறுவனங்களும் பின்னுக்குத் தள்ளியது எப்படி என்று புரிகிறது.

Advertisements