அர்த்த சாஸ்திரம்


சுஜாதா பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இஸ்ரோவில் ராக்கெட்டுக்கும், கம்ப்யூட்டருக்கும் பொட்டு வைத்து, பூ வைத்து பூஜை நடத்தியதைக் குறிப்பிட்டு அறிவியலறிவுக்கும், சில நம்பிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்றார். இது போன்ற சில விஷயங்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் என்றும் சொன்னார்.

என் தற்சமய பணியிடத்தில் ஒரு குறிப்பிட்ட க்யூப் எல்லோரும் அலறிப் பிடித்து ஓடக் கூடிய பயங்கர ஸ்தலமாகக் கருதப் படுகிறது. இங்கே அடிக்கடி ரீ-ஆர்க் நடக்கும். அப்போது இடமாற்றங்களும் இருக்கும். அந்த குறிப்பிட்ட க்யூபில் என்ன கோளாறென்று தெரியவில்லை அங்கே இடம் பெயர்பவர்கள் கூடிய சீக்கிரத்தில் வேலை இழக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல, இந்த வருடத்தில் மட்டும் இது வரை ஆறு பேர்.

இது வாஸ்துவா ? இல்லை மனையடி சாஸ்திரமா என்று பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ இது நிர்வாகத்தின் நாசூக்கான சிக்னல் என்று தோன்றுகிறது.

Advertisements