வார்த்தைக் கூட்டம்


Tags அல்லது குறிச் சொற்கள் எனக் குறிப்பிடப்படும் வார்த்தைக் கூட்டங்களைப் பார்க்கையில் நமது மூளை இப்படித்தான் நினைவுகளைச் சேமிக்கிறது என்று தோன்றியது. எந்த இடத்தில் அப்படிச் சேமிக்கிறது என்று கூகுளைக் கேட்டபோது, “லிம்பிக் சிஸ்டம்” என்று பதில் வந்தது.

பாமாலை. சஷ்டி கவசம். சாணம் மெழுகிய தரை. கலர்ப்பொடிக் கோலம். கோயில். பட்டுப் பாவாடை. துர்க்கை. எலுமிச்சை விளக்கு. ஈரக்கூந்தல். சுத்த சைவம். மாலைக்காட்சி. ஒலியும் ஒளியும். பீச். சுண்டல். இரவுக்காட்சி. ஜீன்ஸ். டிசர்ட். டீம் லஞ்ச். TGI Fridays. சிக்கன் விங்ஸ். ஸாம் ஆடம்ஸ். 1.30AM.

வெள்ளிக் கிழமை என்பதற்கு எனது லிம்பிக் சிஸ்டம் காலக்கிரமமாய்ப் போட்டு வைத்திருக்கும் குறிச் சொற்கள் இவை.