மணல்


வாரக் கடைசியில் வெயிலின் கொடுமைக்கு (100+ F) வர்ஜினியா பீச்சை தேர்வு செய்தோம். பிகினி மகளிரை அழித்து விட்டுப் பார்த்தால் மெரினாவுக்கு டெலிபோர்ட் ஆகிவிட்டது போலத்தான் இருந்தது. காலைத் தொடும் அலையின் ஈரம் மூளையை நனைப்பது மேஜிக். கடற்கரையை அனுபவிக்க பிஎச்டி ஞானம் எல்லாம் தேவையில்லை. இயந்திர வாழ்க்கையில் மறந்து போயிருந்தால் ஏதாவது ஒரு ஆறு மாதக் குழந்தையைப் பார்த்து மறுபடி கற்றுக் கொள்ளலாம்.

அந்த இடத்தின் அருமை பெருமைகளை பத்தி பத்தியாய் நான் சிலாகிப்பதை விட இந்த மாதிரி பல தளங்கள் படம் போட்டு விளக்கியிருப்பார்கள்.

வழியில் நாலு இடங்களில் காருக்கு காஸ் போட்டோம். ஒரு அங்காடியில் பீச் சமாசாரங்கள் வாங்கினோம். ‘ஆன் தி வே’ தானே என்று James Town-ல் நுழைவுக் கட்டணம் செலுத்தி அமெரிக்க சரித்திரம் கற்றோம். இரண்டு நாள் உணவு, உடை, இருப்பிடம். வாரம் முழுக்க உழைக்கக் கொடுத்த பணத்தை வாரக் கடைசியில் அழகாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் பொருளாதார வடிவமைப்பு பீச்சை விட ஆச்சரியம்.

Advertisements