எளிய முறையில் குடும்ப அட்டை பெறுவது எப்படி?
சென்னையில் எளிதாக எப்படி ரேஷன் கார்டு பெறுவது என்று கற்றுக் கொண்டேன். சென்னைக்குக் குடிபெயர்ந்த புதிதாய் திருமணமான தம்பதிகள் முதலில் ஊரிலுள்ள குடும்ப ரேஷன் கார்டுகளில் தத்தமது பெயர்களை நீக்கி deletion certificate வாங்கி அதை (மறக்காமல் xerox எடுத்துவைத்துக்கொண்டு) புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பத்துடன் இணைத்து அருகாமையிலுள்ள உணவுப் பொருள் வழங்குதுறை அலுவலகத்தில் கொடுக்கவேண்டும். (brokers excuse) அவர்கள் பதிலுக்குக் கொடுக்கும் ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு அதற்கப்புறம் மனைவி home maker-ஆக இருக்கும் பட்சத்தில் ஒரு ஆறு மாதம் அல்லது 2 வருடத்திற்கு சீட்டு கிழிந்து cello tape ஒட்டுகிறவரை உ.பொ.வ.து-க்கு நடையாக நடந்தால், உங்கள் விண்ணப்பம் எப்படியோ தவறிப் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு, மறுபடியும் புதிய ரேஷன்கார்டுகளுக்கான விண்ணப்பத்தேதியை அறிவிக்கும்போது வரச்சொல்லுவார்கள்.
மனம் தளராமல் மறுமுறை செல்லும்போது நாம் முன்பு கொடுத்த deletion certificate-களை அவர்கள் பொறுப்பில்லாமல் தொலைத்துவிட்டதை அவர்களுக்கு நல்லமுறையில் உணர்த்தி xerox -ஐ இணைத்து சமாளிக்கவேண்டும். பிறகு மறுபடியும் கிடைக்கப் பெற்ற துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு சுமார் ஒரு வருடம் நடந்தால் ஒரு நாள் நாம் அதிர்ந்து ஆச்சரியப்படும் வகையில் ‘உங்க கார்டு ப்ரிண்டிங்-க்கு போயிருக்கு’ என்று சொல்வார்கள். அதற்கப்புறம் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தால் அது கிடைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
ரேஷன் கார்டு அலுவலகத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட விவரத்தைப் பெற அலுவலர்கள் மேசைக்கு மேசை அலையவைத்து குடிமக்களுக்கு சகிப்புத்தன்மையை வளர்க்கவும் உதவி செய்கிறார்கள்.
நம் ரேஷன் கார்டு விவரங்களை லெட்ஜரில் பார்த்துச் சொல்லும் பெண் அலுவலர், மனைவியிடம் கார்டு விண்ணப்பத்தில் குடும்பத்தலைவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் யார் எனக் கேட்பதும், ‘என் கணவர்’ என்று பதிலளித்த மனைவியை ஏற இறங்கப் பார்த்து “ஓ! உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?” என்று கேட்பதும் கூட சிலசமயம் நடக்கும்.
கவுரவ அட்டை என்று இதைத்தான் குறிப்பிட்டார்களா என்று தெரியவில்லை.
bsubra 10:39 முப on செப்ரெம்பர் 30, 2007 நிரந்தர பந்தம் |
—விண்ணப்பத்தில் குடும்பத்தலைவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் யார் எனக் கேட்பதும்,—
வீட்டு சாமான் வாங்கும் பலசரக்கு அங்காடியினுள்ளே வீடியோவும் வாடகைக்கு விடுகிறார்கள். ‘ஆர்’ போன்ற வயது வந்தோருக்கான படங்கள் எடுத்தால் அடையாள அட்டை கேட்பார்கள்.
நான் சாமான்களுக்கு பில் போட்டுக் கொண்டிருக்கும்போதே, என்னுடைய அட்டையை எடுத்துக் கொண்டு படம் எடுக்க மனைவி சென்றிருந்தார்.
‘உங்க அப்பாவை வரச் சொல்லுங்கம்மா’ என்று திருப்பியனுப்பி விட்டார்களாம் 🙂
சித்ரன் 12:05 பிப on செப்ரெம்பர் 30, 2007 நிரந்தர பந்தம் |
நன்றி பாலசுப்ரா.
ஹா.. ஹா.. இதுவும் நல்ல காமெடிதான்.
வடுவூர் குமார் 1:48 முப on ஒக்ரோபர் 1, 2007 நிரந்தர பந்தம் |
ஊருக்கு போய் தான் அப்பளை செய்யவேண்டும்,இது நல்ல சங்கதி- ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.
பிரதீஷ் குமார் 9:38 பிப on ஜூலை 9, 2010 நிரந்தர பந்தம் |
எனக்கு குடும்ப அட்டை வ்ந்து 3 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இதுவரை என் கைக்கு வரவில்லை டி எ ஸ் ஓ அலுவலகத்தில் கேட்டால் இன்னும் வரவில்லை வேறு மனு கொடுங்கள் மீண்டும் புதிய அட்டை வரவைத்து தருகிரோம் என்று சொல்கின்றாற்கள்
k.shanmugam 5:49 முப on திசெம்பர் 16, 2010 நிரந்தர பந்தம் |
i have applied before 3 1/2 years but my ration card is not yet ready.