காடு


சனிக்கிழமை இரவு பர்க் ஏரிக் கரையோரம் அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் டென்ட் அடித்து Camping ! மின்சாரம், மெத்தை போன்ற நவீன சௌகரியங்களை மறந்து, Fire Ring-ன் விறகுத் தீக்கு முன்னால் ஓர் இரவு குளிர் காய்வது உள் மனசை சற்றே ஒட்டடை அடிக்கிறது.

அவ்வப்போது நான் தடவிப் பார்க்கும் Acoustic Guitar அன்றைக்குத்தான் பிறவிப் பயனை அடைந்தது. இந்த எலக்ட்ரானிக் உலகத்தில் இது மாதிரி non-electric இசைக் கருவிகள் இன்னும் உயிரோடிருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன். Ohio-விலிருந்து வந்திருந்த ஸாம் தொட்டதும், துள்ளி எழுந்தது பாட்டு.

ஹரிக்கேன் விளக்கின் ஒளிக்கு அவ்வப்போது சில நட்டுவாக்காலிகள் குறுக்கே பறப்பதும், உடை மேல் அமர்வதுமாய் இருந்தன. நள்ளிரவுக்கு மேல் ஓநாய்கள் வரும் என்றார்கள். மற்றபடி காடு சுகமே.