வெள்ளோட்டம்


நேற்று BMW 5 Series ஓட்டிப் பார்த்தோம்.

பொதுவாக கார் ஷோ ரூம்கள் மிகச் சிறந்த முறையில் மூளைச் சலவை நடக்குமிடம். கார் வாங்கலாம் என்று கால்வாசி மனசிருந்தால் போதும். உங்களைக் கசக்கிப் பிழிந்து கையில் காரைக் கொடுத்தனுப்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் அப்படி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. எந்த நிமிஷமும் எங்காவது யாராவது BMW எனது கனவு கார் என்று சொல்லிக் கொண்டேயிருப்பது காரணமாய் இருக்கலாம்.

இரண்டு சிறிய தெருக்களைக் கடந்து நெடுஞ்சாலையைப் பிடித்தபின், பதினைந்து நிமிஷங்கள் ஓட்டியிருப்போம். டாஷ் போர்டில் வழக்கமாய் இடம் பெறும் கசகசப்பான பொத்தான் கூட்டங்களை மழித்து விட்டு ஒரு LCD பேனலும், வட்டமான நாப் மட்டும் கொடுத்து எளிமையாக்கியிருந்தார்கள். மற்றபடி அன்றாடம் AUDI ஓட்டிக் கொண்டிருப்பவர்களை புல்லரிக்க வைக்க BMW-விடம் புதிதாய் ஒன்றுமில்லை.

ஷோ ரூமில் $120,000-க்கு ALPINA என்ற மாடல் நின்றிருந்தது. அப்படி என்ன அதில் இருக்கிறது என எட்டிப் பார்த்தபோது, ” Sir, please don’t touch it ! ”  என்றார் ஒருவர். அதனால் கூட இந்த BMW வெள்ளோட்டம் பிடிக்காமல் போயிருக்கலாம்.

Advertisements