மூட்டை முடிச்சு


முதல் அமெரிக்க விஜயத்தின்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து கிடைக்காது என்று பயமுறுத்தப்பட்டு, வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு, இன்ன பிறவற்றிற்கென கிட்டத்தட்ட ஆயிரம் ருபாய்க்கு மருந்துகள் வாங்கி வந்தேன். எல்லாமே காலாவதியாகிப் போய் தூக்கி எறிந்ததுதான் மிச்சம். சாதாரண காய்ச்சல் தலைவலி தும்மல் மூக்கடைப்புக்கு எல்லா பல்பொருள் அங்காடிகளிலும் Over the Counter மருந்துகள் கிடைக்கும்.

உடைகள் ரொம்ப காஸ்ட்லி என்பது அடுத்த பயமுறுத்தல். எடைக்குக் கேடாய் சுமந்து வந்ததுதான் மிச்சம். ஓரளவு தரமான உடைகள் நம் ஊரிலும் இங்கும் விலை வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

அதற்கப்புறம் அரிசி பருப்பு இத்யாதிகள். நாலு ஊர்களுக்கு மூட்டை கட்டிக் கொண்டு அலைந்தபின், செல்லரித்துப் போய்க் கடைசியில் குப்பைக் கூடைக்குப் போயின. இந்திய மளிகைக் கடைகள் அநேகமாக எங்கும் உள்ளன. நம் ஊரில் நீங்கள் தேடிக் கிடைக்காத ஊதுபத்தி ப்ராண்ட் கூட இங்கே வைத்திருப்பார்கள்.

என்னென்ன எடுத்து வர வேண்டும் என்று மின்னஞ்சலில் கேட்டவருக்குக் கீழ்க்கண்ட பட்டியல் அளித்தேன்.

  1. நாலு நாள் சென்னையில் பிட்ஸாவும் பர்கரும் சாப்பிடவும்.
  2. கண்டதையும் வாங்கிப் பெட்டியில் அடைக்கக் காசிருந்தால் அதை டாலருக்கு மாற்றிக் கொள்ளவும்.
  3. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி போகுமளவுக்கு மட்டும் உடைகள் எடுத்து வைக்கவும்.
Advertisements