டோரா


சுட்டி டிவி யில் வரும் டோராவின் பயணங்கள் (Dora the Explorer) PreKG குழந்தைகளுக்கானது என்றாலும் நானும் என் 2ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் உட்கார்ந்து பார்க்கிறேன். பெரிய கண்களையுடைய டோரா தன் ஒவ்வொரு பயணத்தின் மூலமும் குழந்தைகளுக்கு Interactivity என்பதை மிக எளிமையாய் கற்றுக்கொடுத்துவிடுகிறது. டோரா கேட்கிற கேள்விகளுக்கு என் மகனோ அல்லது டி.வி பார்க்கிற வேறு குழந்தைகளோ தன்னை அறியாமல் வாய்விட்டு பதில் சொல்லிக்கொண்டிருப்பதே இந்த ஷோவின் பெரிய வெற்றி எனலாம். டோராவுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்கிற சிறுமியின் உற்சாகம் இன்னொரு ஈர்ப்பு.

ஒரு காரியத்தை செய்து முடிக்க எப்படி திட்டமிடுவது, இடையில் எதிர்படுகிற சவால்களை எப்படி முறியடிப்பது, இலக்கை அடைந்தபின் அதை எப்படி கொண்டாடுவது என்று பல பெரிய விஷயங்களை டோரா போகிற போக்கில் சுட்டிகளுக்கு சொல்லித்தருகிறது.

ஏழு கழுதை வயதானாலும் இந்த ப்ரோக்ராமை பார்க்கும்போது ஏனோ ஒரு சந்தோஷம் தொற்றிக்கொள்கிறது.

Tom and Jerry – க்கு அடுத்தபடியாக.