குழு


ஆபிஸில் விநாயக சதுர்த்தி கொண்டாட முடிவு செய்யப்பட்டு சுறுசுறுப்பாக வேலை நடந்தது. நகைகள், கிரீடம், ஆயுதங்கள் மட்டும் தங்கநிற முலாம் பூசப்பட்ட அழகான ஒன்றரை அடி உயர விநாயகர் மண் சிலை எருக்கு மாலை சகிதம் கொணரப்பட்டது. ஒரு சின்ன மேடை அமைக்கப்பட்டு தலைக்குமேல் கலர் பேப்பர் பரிவட்டக் குடையுடன் விநாயகர் அமர்ந்தார். Ganesh Caturthi at Officeவாழைக்கன்றுகள் வந்தன. தாமரை, ரோஜா, சாமந்தி, வாடாமல்லி என வெரைட்டியாய் பூக்கள் கொண்டு அமர்களமாய் போடப்பட்ட ரங்கோலியைச் சுற்றிலும் அகல் விளக்குகள் ஒளிர்ந்தன. இருபுறமும் குத்துவிளக்குகளின் சுடரொளி.

வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டது. கலர் ரிப்பன்கள் சுவரில் நெளிந்தன. வாழையிலைப் படையலில் வீட்டில் அம்மாக்களை தொந்தரவு செய்து கொண்டுவந்த இனிப்புக் கொழுக்கட்டை, கொண்டைக்கடலை சுண்டல், கேசரி. அப்புறம் பொரி, பொட்டுக்கடலை, தேங்காய், பழம், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், கரும்பு, மக்காச்சோளம், வெற்றிலை, பாக்கு, குங்குமம், சந்தனம், திருநீறு. தேங்காய் உடைத்து, கற்பூர ஜ்வாலையில் கேமரா மொபைல்களும், டிஜிடல் கேமராக்களும் கிளிக்க, சதுர்த்தி இனிதே நிறைவேறியது.

Team building exercise என்ற வகையில் அலுவலகத்தில் ஒவ்வொரு குழுவையும் ஜோஹரி விண்டோ (Johari Window), டக்மேன் மாடல் (Tuckman Model) என்று மீட்டிங் போட்டு விளக்கிப் பேசி வரட்டிப் புரட்டி எடுத்ததற்கு ஏதாவது பிரயோஜனம் வேண்டாமா?

மூலாதாரக் கடவுள் பெயரில் ஒரு அருமையான டீம் ஒர்க்.