விதிகளை மீறுங்கள்
- இங்கு எச்சில் துப்புங்கள்
- இங்கு சிறுநீர் கழித்தால் தண்டிக்கப்படமாட்டீர்கள்.
- தயவு செய்து பூக்களைப் பறியுங்கள்.
- இங்கு புகை பிடிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிரம், கரம் புறம் நீட்டுங்கள்.
- படிக்கட்டில் நின்று பயணம் செய்யுங்கள்.
- இங்கு ஹார்ன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டாம்.
- பள்ளிக்குழந்தைகள் கடக்குமிடம். வாகனங்கள் மெதுவாக செல்லவேண்டாம்.
- மருத்துவமனை. தயவு செய்து சப்தம் செய்யுங்கள்.
- உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவாதீர்கள்.
- முன்சீட்டில் காலை நீட்டுங்கள்.
- கோவில் வளாகம். இங்கு செல்ஃபோன் உபயோகியுங்கள்.
- சுவரில் விளம்பரம் செய்யுங்கள்.
- 10 மீட்டர் இடைவெளி விட்டுத் தொடராதீர்கள்.
- தயவு செய்து வரிசையில் வராதீர்கள்.
- குடிபோதையில் வாகனம் ஓட்டுங்கள்.
- இந்த கேட்டின் முன் வாகனத்தை நிறுத்தலாம்.
- இது பொது வழி அல்ல. அத்துமீறி நுழைபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
- குழாயை சரியாக மூடாதீர்கள்.
- நிற்காதே. கவனிக்காதே. அப்படியே செல்.
“Break the rules” பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள்.
PPattian 10:12 முப on செப்ரெம்பர் 26, 2007 நிரந்தர பந்தம் |
இங்கு பின்னூட்டம் இடாதீர்கள்…
:))))))))
சித்ரன் 12:05 பிப on செப்ரெம்பர் 26, 2007 நிரந்தர பந்தம் |
நன்றி PPattian!
‘இங்கு குப்பை கொட்டாதீர்கள்’ என்று அறிவிப்பு வைத்திருந்த இடத்திலேயே ஒரு ஆள் குப்பை கொட்டிக்கொண்டிருந்ததை இன்று காலை காண நேர்ந்ததால் உதித்த பதிவு இது.
vizhiyan 10:45 பிப on செப்ரெம்பர் 26, 2007 நிரந்தர பந்தம் |
🙂
kalyanakamala 7:29 முப on செப்ரெம்பர் 27, 2007 நிரந்தர பந்தம் |
கொஞ்சம் அதிகம் இதப்பற்றி பேசினீங்க போரட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய ஏற்பாடு செய்து அறிக்கை விட்டுருவோம்!ஜாக்கிரதை!
vasu 6:39 முப on ஒக்ரோபர் 1, 2007 நிரந்தர பந்தம் |
படிக்கும் பிள்ளைகளே பாடங்களைப் படிக்காதீர்கள் ,டீவீ பாருங்கள் ,சினிமாதான் வாழ்க்கை அதை அப்படியே பின் பற்றுங்கள்
எதையும் நேரத்தில செய்யாதீர்கள் எந்த வேலையானாலும் ஒத்திப்போடுங்கள்
பெற்றோரகளே எந்தக் குழந்தையையும் கண்டித்து வளர்க்காதீர்கள் அவர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும்
சாலையில் யாராவது அடிபட்டுக்கிடந்தா கண்டுக்காதீங்க்க நாளைக்கு நாம அடிபட்டுக்கிட ந்தா அப்ப பாத்துக்கலாம்