ஏன்கள்


  • ஏன் இடது புறம் ஸ்டீரிங் பிடித்து, சாலையின் வலது புறம் வாகனம் ஓட்டுகிறார்கள் ?
  • ஏன் சாவியின் பற்கள் மேல் நோக்கி இருக்கும்படி பூட்டில் நுழைக்கிறார்கள் ?
  • ஏன் ஒற்றைக் கதவின் கைப்பிடியை இடது புறம் பிடித்து உள்ளே தள்ளும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள் ?
  • பூட்டைத் திறக்க ஏன் சாவியை கடிகாரச் சுற்றுக்கு எதிர்த்திசையில் திருகுகிறார்கள் ?
  • மூச்சா போகும் அறையை ஏன் ஓய்வறை (Rest Room) என்கிறார்கள் ?
  • வாஷ்பேஸின் கண்ணாடிக்கு மேலே ஏன் வரிசையாக குண்டு குண்டாய் ஐந்து அல்லது ஆறு பல்புகள் மாட்டி வைத்திருக்கிறரர்கள் ?
  • பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடும் விளையாட்டை ஏன் கால் பந்து விளையாட்டு (Football game) என்று அழைக்கிறார்கள் ?
  • எல்லா வரிசைகளிலும் புத்தர் போல பொறுமையாய் இருக்கிற இவர்கள் காரில் போகையில் மட்டும் ஏன் காஸ் பெடலில் (ஆக்சலரேட்டரில்) சுடுதண்ணியைக் கொட்டிக் கொண்டது போல் அலை மோதுகிறார்கள் ?
  • ஆஸ்பத்திரியில் ஊசி குத்தும்போது ஏன் நீட்டாமல் கொத்துகிறார்கள் (கோலிகுண்டு டெர்மினாலஜிக்கு மன்னிக்கவும் ! ) ?

அமெரிக்கா வந்த புதிதில் இது போல் பல கேள்விகள் மனதில் தோன்றின.