ஆலங்கட்டி மழை


Hailstorm in chennai

நேற்று மதியம் தடதடவென இரைச்சலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு காணக் கிடைக்கிற காட்சி. அலுவலகத்தில் எல்லோரும் அவரவர் வேலையை விட்டுவிட்டு பால்கனிக்கு ஓடி வானத்திலிருந்து கொட்டுகிற ஐஸ் கட்டியைப் பள்ளிக் குழந்தைகளின் உற்சாகத்துடன் பொறுக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவரின் சட்டைக்குள் ஐஸ் கட்டிகளைப் போட்டு நெளிய வைத்து சிறிது நேரம் விளையாட்டு தொடர்ந்தது. சில்லென்று உற்சாகம் பிறந்துவிட்டது எல்லோருக்கும். பால்கனித் தாவரங்கள் மழையில் நனைந்து குளிர்ந்து சிலிர்த்தன. தெருவெங்கும் வெள்ளை முத்துக்கள் சிதறிப் பரவின. ஆலங்கட்டி மழையோடு அனைவரின் சந்தோஷக் குரல்களும் கலந்து கரைந்தன.

சாரலில் நனைந்த சட்டையுடன் இருக்கைக்குத் திரும்பினபோது மனது குளிர்ந்திருந்தது.

பி.கு: An official in the climatology section said that Chennai had never recorded a hailstorm – என்று ஹிண்டுவில் போட்டிருக்கிறார்கள்.