ஏன்கள்
- ஏன் இடது புறம் ஸ்டீரிங் பிடித்து, சாலையின் வலது புறம் வாகனம் ஓட்டுகிறார்கள் ?
- ஏன் சாவியின் பற்கள் மேல் நோக்கி இருக்கும்படி பூட்டில் நுழைக்கிறார்கள் ?
- ஏன் ஒற்றைக் கதவின் கைப்பிடியை இடது புறம் பிடித்து உள்ளே தள்ளும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள் ?
- பூட்டைத் திறக்க ஏன் சாவியை கடிகாரச் சுற்றுக்கு எதிர்த்திசையில் திருகுகிறார்கள் ?
- மூச்சா போகும் அறையை ஏன் ஓய்வறை (Rest Room) என்கிறார்கள் ?
- வாஷ்பேஸின் கண்ணாடிக்கு மேலே ஏன் வரிசையாக குண்டு குண்டாய் ஐந்து அல்லது ஆறு பல்புகள் மாட்டி வைத்திருக்கிறரர்கள் ?
- பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடும் விளையாட்டை ஏன் கால் பந்து விளையாட்டு (Football game) என்று அழைக்கிறார்கள் ?
- எல்லா வரிசைகளிலும் புத்தர் போல பொறுமையாய் இருக்கிற இவர்கள் காரில் போகையில் மட்டும் ஏன் காஸ் பெடலில் (ஆக்சலரேட்டரில்) சுடுதண்ணியைக் கொட்டிக் கொண்டது போல் அலை மோதுகிறார்கள் ?
- ஆஸ்பத்திரியில் ஊசி குத்தும்போது ஏன் நீட்டாமல் கொத்துகிறார்கள் (கோலிகுண்டு டெர்மினாலஜிக்கு மன்னிக்கவும் ! ) ?
அமெரிக்கா வந்த புதிதில் இது போல் பல கேள்விகள் மனதில் தோன்றின.
PPattian 9:07 முப on செப்ரெம்பர் 27, 2007 நிரந்தர பந்தம் |
1. ஏன் நன்றாக இருக்கிறேன் என்பதற்கு “I am Good” என்கிறார்கள்
2. ஏன் வீட்டு சுவர்களை சாதாரண போர்டினால் அமைக்கிறார்கள்
3. ஏன் அந்நியரை கூட “How do you do?” என்று கேட்கிறார்கள்
4. ஏன் அதை கேட்டு விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள்
5. ஏன் நாய்களை காரின் முன் சீட்டில் உட்கார வைக்கிறார்கள்
6. ஏன் ஆறு மணிக்கெல்லாம் டின்னர் சாப்பிடுகிறார்கள்
7. ஏன் Coke இப்படி குடித்து கொண்டே இருக்கிறார்கள்
8. ஏன் இவ்வளவு Cheese சாப்பிடுகிறார்கள்
9. ஏன் பெரிய படகுகளை காரில் கட்டி தெருவில் இழுத்து செல்கிறார்கள்
இன்னும் பல…
சத்யராஜ்குமார் 9:14 முப on செப்ரெம்பர் 27, 2007 நிரந்தர பந்தம் |
@PPattian: உபரி ஏன்களுக்கு நன்றி.
Sathia 9:30 முப on செப்ரெம்பர் 27, 2007 நிரந்தர பந்தம் |
இந்தா புடிங்க
1. ஏன் இப்படி இன்னும் மைல், பவுண்ட், காலன் என்று அரதப்பழசாக இருக்கிறார்கள்.
2. ஏன் இன்னும் பேஜரை கட்டிக்கொண்டு அலைகிறார்கள்
3. ஏன் இன்னும் அரதப்பழைய VHSஐ வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள்
4. ஏன் யார்ட் சேல்ல(yard sale) பழைய துணி வாங்கறாங்க, விக்கறாங்க. மத்ததெல்லாம் சரி துணி..????
5. ஏன் பச்சை குத்திக்கறத ஏதோ வேண்டுதல் மாதிரி உடம்பு பூரா குத்திக்கறாங்க
6. ஏதோ நாய கூட்டிட்டு போறா மாதிரி குழந்தைகளை கயித்தல கட்டி கூட்டிட்டு போறாங்க( சந்தேகமா இருந்தா இங்க இல்லை இங்க பாருங்க
7.ஏன் இப்படி இத்தாலி உணவுன்னா பேயா அலையறாங்க..
ஏன்..ஏன.. ஏன்…
8. ஏன் ஆபிஸுக்கு பிச்சைகாரன் மாதிரி ஆடை உடுத்திகிட்டு கோல்ப் விளையாட,டென்னிஸ் விளையாட அழகாக ஆடை உடுத்திக்கிறாங்க
விளையாட்டா இல்லாம கொஞ்சம் ஆழமா பாத்தா இவங்க பண்ற நிறைய சங்கதி, ஐரோப்பியருக்கு எதிரா ஏட்டிக்கு போட்டியா ஆரம்பிச்சது. இன்னும் கேட்டால் இந்த எதிர் எதிர் மாற்றங்களினால இன்னைக்கு நிறைய துறைகள் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கு.
சத்யராஜ்குமார் 9:36 முப on செப்ரெம்பர் 27, 2007 நிரந்தர பந்தம் |
@Sathia: உங்கள் பங்களிப்புக்கு நன்றி.
pedharayudu 10:13 முப on செப்ரெம்பர் 29, 2007 நிரந்தர பந்தம் |
//பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடும் விளையாட்டை ஏன் கால் பந்து விளையாட்டு (Football game) என்று அழைக்கிறார்கள் ? //
Football என்று ஏன் அழைக்கிறார்கள்னா அந்த பந்தின்(?) நீளம் ஒரு அடி (one foot) அதனால்தான்.
//மூச்சா போகும் அறையை ஏன் ஓய்வறை (Rest Room) என்கிறார்கள் ?//
கக்கா போற எடத்துல ஸ்டாண்ட் போட்டு செய்தித்தாள்கள் தொங்குவத நிறைய தடவ பாத்திருப்பீங்களே? நிறைய ஓபி அடிக்கிற ஆளுங்க அங்கயே உக்காந்து இருக்கறதனாலதான் restroomனு சொல்றாங்களோ என்னவோ?
//வாஷ்பேஸின் கண்ணாடிக்கு மேலே ஏன் வரிசையாக குண்டு குண்டாய் ஐந்து அல்லது ஆறு பல்புகள் மாட்டி வைத்திருக்கிறரர்கள் ? //
ஒரு குண்டு பல்பு ப்யூஸ் போனாலும் ஆத்திர அவசரத்துக்கு சிரமப்பட வேண்டியதில்ல பாருங்க. இது சொந்த அனுபவம். ஹி..ஹி..
//ஏன் ஒற்றைக் கதவின் கைப்பிடியை இடது புறம் பிடித்து உள்ளே தள்ளும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள் ? //
அபார்ட்மெண்டுகளில் பாதுகாப்பு மற்றும் அடுத்த வீட்டுக்காரருக்கு தொந்தரவு இல்லாம இருக்கறதுக்காகவோ?
ஆனா பொதுமக்கள் வரும் இடங்களில் பாத்தீங்கன்னா கதவுகள் வெளிப்பக்கம் திறக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஏன்னா, ஆபத்தான தருணங்களில் தீயணைப்புப் படையினர் இலகுவாக திறப்பதற்க்கும், கூட்டமாக வெளியேறும் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும்தான்.
சத்யராஜ்குமார் 5:07 முப on செப்ரெம்பர் 30, 2007 நிரந்தர பந்தம் |
@pedharayudu: Foot Ball-க்கான விளக்கம் நன்று.