பள்ளியறை


ஆனந்த விகடனில் 1998-ல் நான் எழுதிய சிறுகதை ஓரிரு நாள் முன்பு பள்ளித் தலம் பதிவிட்ட போது நினைவுக்கு வந்தது. பள்ளித் தலம் அமெரிக்க Back to School பற்றிய சிறுகட்டுரை என்றால் தேய்பிறைகள் இந்திய Back to School பற்றிய சிறுகதை.

அந்த பிரபல கான்வென்ட்டில் நான்கு வயதே ஆன என் தங்கை மகளை ஞாபக மறதியாய் வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டி வைத்து விட்ட சம்பவத்தை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அடுத்து மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாய் விடுமுறை. நாங்கள் அவளை ஸ்கூல் முழுவதும் தேடிக் கொண்டிருந்தபோது, “அம்மா… அம்மா… யாராவது கதவைத் திறங்க… ” என்று ஹீன ஸ்வரத்தில் கேட்ட பிஞ்சுக் குரல் இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது.

அந்தச் சின்னக் குழந்தையின் முதல் முதலான பள்ளி அனுபவங்களைக் கோர்த்து அவளின் View Point-லேயே எழுதிய விகடன் இதழைத் தேடிப் பிடித்து நேற்று சத்யராஜ்குமார்.காம்-ல் வெளியிட்டேன். இந்த அவசர இணைய யுகத்தில் ஐந்து பக்கங்கள் படிக்கப் பொறுமையும் நேரமும் இருந்தால் இங்கே சென்று வாசிக்கலாம்.