திரை


Brambleton சினிப்ளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் இப்போதுதான் சிவாஜி பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் DVD வந்து விட்டது. நேற்று நந்தா என்னுடைய LCD ப்ரொஜெக்டரில் பார்க்க வேண்டுமென்று இந்திய அங்காடியிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்திருந்தார்.

சிவாஜி, மனிதன் இரண்டு படங்களும் ஒரே DVD-யில்! மெனு திரையில் மனிதன் ரஜினியின் முகத்தையும், சிவாஜி ரஜினியின் முகத்தையும் க்ளோஸப்பில் பக்கம் பக்கம் போட்டிருந்தார்கள். ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முயன்று என்னால் ஒன்று மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்தச் சமயத்தில் ப்ரொஜெக்டர் பற்றி சிறு குறிப்பு. நண்பர்கள் நாற்பது இன்ச் குறுக்களவில் HDTV-களை நிறைய விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்க, அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் HDTV சிக்னலுடன் ஒத்துப் போகிற LCD ப்ரொஜெக்டர் வாங்கினேன். ஏதாவது ஒரு குட்டிச்சுவரில் 100 இன்ச் அகலத்துக்கு படு தாராளமாய்ப் படம் பார்க்கலாம். ஏற்கெனவே வைத்திருந்த BOSE இசை வழங்கியுடன் சேர்ந்து தியேட்டர் அனுபவம் அப்படியே கிடைக்கிறது.

வரவேற்பறையை பந்தாவாகக் காட்ட முடியாதென்பதைத் தவிர வேறெந்த அசௌகரியமும் இதனிடம் இல்லை.