தொழில் – கல்வி


பீளமேடு என்று தலைப்பு வைத்திருந்தாலும், கோவை காந்திபுரம் டு விமான நிலையம் அழகாய் City Tour அடித்துக் காட்டியிருந்தார் செல்வன். அவரவர் தங்கள் மலரும் நினைவுகளை நினைவில் மலர்ந்தவைகளை பதிவுக்குக் கீழே வாரிக் கொட்டியிருந்தார்கள்.

நியுயார்க் போன்ற பெரு நகரங்களில் Sight Seeing பஸ்களைப் பார்க்கும்போது எனக்கு கோவையின் காந்திபார்க் டு காந்திபார்க் 7-ஆம் நம்பர் பஸ்ஸும், பேரூர் டு பேரூர் 2-ஆம் நம்பர் பஸ்ஸும் ஞாபகத்துக்கு வரும். ஜன்னலோர இருக்கை பிடித்தால் மலிவு விலையில் கோவை முழுக்க சுற்றுலா !

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்து வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருந்த அந்த இரண்டு பணக்கார இளைஞர்கள் சந்தித்து தங்கள் எதிர்காலத் திட்டங்களை விவாதித்தார்கள். ஒருவர் தன் அப்பாவின் டெக்ஸ்டைல் தொழிலை நவீனப்படுத்தி விரிவுபடுத்தப் போகிறேன், இயந்திரங்கள் தயாரிக்க உள்ளேன் என்றபோது, இன்னொருவர், ” அப்படியானால் உனக்கு நிறைய பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் தேவைப்படுவார்கள். அவர்களை உருவாக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். ” என்றார்.

செல்வன் குறிப்பிட்ட PSG கல்வி நிறுவனங்கள் மற்றும் LMW தொழிற்சாலைகளின் கதை இது.