பார்த்துத் தொலைப்போம்!!


விஜய் டிவியின் ஜோடி நெ.1 நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவரான சிம்புவின் நேரடி அதிரடித் தீர்ப்பின் தீர்க்கத்தை தாங்க மாளாத நடிகர் பப்லு என்கிற பிருத்வி தன் உணர்ச்சிப் பிழம்பின் சீற்றத்தை சிம்புவின் மேல் திருப்பி அனுப்ப, நிகழ்ச்சி ரசாபாசமாகி சிம்பு ‘இந்த நிகழ்ச்சியிலிருந்து eliminate ஆவது நான்தான்’ என்று தானே அறிவித்துக் கொண்டு கேமரா, ட்ராலி, செட்களைத் தாண்டி வெளியேற, போட்டியில் கலந்து கொண்டவர்கள் வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு காரில் ஏறும்முன் மடக்கி, கெஞ்சி மறுபடியும் கொண்டுவந்து நடுவர் இருக்கையில் அமர வைத்தார்கள். மேலும் தொடர்ந்த சிம்புவின் emotional burst-out அழுகை இன்னபிற காரணங்களால் பிருத்விராஜ் போட்டியிலிருந்து வெளியேற, இத்தனையையும் லைவ் ரிலே என்ற பெயரில் போட்டுக் காட்டி டி.வி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

பெரிய திரையில் K. பாலசந்தர் கையால் எல்லாம் குட்டுப்பட்ட நடிகர் பப்லு என்கிற பிருத்வி சின்னத்திரையில் இப்படி சிம்புவிடம் சிலுப்பிக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது என்கிற கேள்வியை பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள்தான். அதை விடுங்கள்!

இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage-ல் இருக்கவேண்டிய நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது.

ரொம்ப கஷ்டம்தான்! ஆனாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.