எச்சரிக்கை


(மேல்) நாட்டு வைத்தியம் பதிவில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து குறித்த விவாதம் எழுந்தது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கடைகளில் வினியோகிக்கப்படும் பல இருமல் மருந்துகளின் அபாயம் குறித்து பத்மா அர்விந்த் நிறைய தகவல்கள் அளித்திருந்தார்.

FDA எச்சரிக்கையைத் தொடர்ந்து,  அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் நேற்று தாமாகவே முன்வந்து மேற்படி மருந்துகளை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டன.

ஏற்கெனவே இம்மருந்துகளை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் அவற்றைத் திருப்பிக் கொடுக்கவோ குப்பைத் தொட்டியில் வீசவோ முயற்சிக்கலாம்.

Advertisements