பறவைகள்


அகில் நூலகத்திலிருந்து The Complete Idiot’s Guide to Birdwatching என்ற புத்தகத்தை எதேச்சையாகத்தான் எடுத்து வந்தான். அதைப் பார்த்ததும் சட்டென்று நண்பன் கவுதம் நினைவுக்கு வர போன் போட்டேன். கவுதம் இந்தியாவில் National Bird Watcher’s Association-ல் நெடுங்கால உறுப்பினர்.

சின்ன வயதில் வால்பாறை அட்டகட்டி காடுகளில் திரிந்து பறவைகளைப் படிக்க முயன்ற சமயம் பெற்றோரிடம் எனக்குக் கிடைக்காத சுதந்திரம் அகிலுக்குக் கிடைத்திருப்பது சந்தோஷம் என்றார். இமெயிலில் இன்பாக்ஸ் நிறைய தகவல்கள் செயல்முறைகளை அனுப்பி வைத்தார்.

கவனித்தால்தான் தெரிகிறது பறவைகளில் இத்தனை வகைகளா ? ஆந்தையால் 270 டிகிரிக்கு தலையைச் சுழற்ற முடியுமா ! மரங்கொத்தி மரம் கொத்தி போல தோற்றமளிக்கும் ‘உட்காக்’ 360 டிகிரியையும் தலையை ஒரு மில்லி மீட்டர் கூட அசைக்காமலே பார்த்து விட முடியுமா ! தினமும் நம் வீட்டுக் கொல்லைப்புறத்துக்கு இத்தனை வகை பறவைகள் வந்து போகின்றனவா ?

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கன் கோல்ட் பின்ச்சும், வார்ப்ளரும் ஒரு ராமசாமியைப் போலவோ, பாக்கியலட்சுமியைப் போலவோ எங்கே பார்த்தாலும் ஹாய் சொல்லுமளவுக்குப் பழக்கமாகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.