ஐ லவ் யூ ரூபி !


திடீரென்று ரூபி மேல் காதல் வந்தது. ரூபியின் பிறப்பிடம் ஜப்பான். ரூபி பல பாரம்பரிய மரபுகளை உடைத்திருக்கும் புதுக் கவிதை. அதனாலேயே அவளைப் படித்துப் பார்க்கும் ஆவல் எழுந்தது.

Dice-ல் தேடிப் பார்த்தால் வேலைக்கு உதவ மாட்டாள் என்று தெரிகிறது. இருந்தாலும் வீட்டிலிருக்கும் Fedora பெட்டிக்குள் சின்ன வீடாகப் போட்டு வைத்துக் கொண்டால் அவ்வப்போது கொஞ்சிக் கொள்ளலாம். இப்போதைக்கு ரூபியைப் படிப்பதென்பது கதை எழுதுவது அல்லது வலைப்பதிவது போன்ற ஆர்வக்கோளாறான காரியம்தான்.

தண்டவாளத்தில் ஏற்றி வைத்தால் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் காட்டுகிறாள். வியக்க வைத்த சில ரூபி ஹைக்கூக்கள் கீழே:

1.
[ 2, 4, 8, 10, 12 ].each {|k| puts k }

2.
def n_times(something)
return lambda {|n| something * n }
end
p1 = n_times(23)
p1.call(3) ===> prints 69
p2 = n_times(“Hi “)
p2.call(3) ===> prints “Hi Hi Hi ”

3.
(1..10).to_a ===>! [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]
(‘bar’..’bat’).to_a ===> [“bar”, “bas”, “bat”]

நீங்களும் காதலித்துப் பார்க்கலாம். Yukihiro Matsumoto-க்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.