காதல்


சுஜாதா குமுதம் ஆசிரியர் ஆனபோது அப்பத்திரிகையில் ரெகுலராய் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலர் திணறிப்போனார்கள். பல காலமாய் குமுதம் ஆதரித்து வந்த சில கதை வடிவங்கள் திடீரென மறுக்கப்பட்டது.

” என்ன ஸார் கதை போடறான் சே ! ” என்று அவர்கள் குமுதத்தைத் திட்டினார்கள். ஏற்கெனவே நான் ட்ரான்சிஷனில் இருந்ததால் அங்கே நிகழும் மாற்றங்களை என்னால் சுலபமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது.  

கதை என்பது வெறும் மொழிநடையோ, திருப்பங்களோ மட்டுமல்ல; அவற்றைக் கடந்து அதைப் படித்த பின் ஏற்படும் உணர்வு என்பதை ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன். வாழ்க்கையின் இயல்பான தருணங்களை அடிக்கோடிட்டு கதைகளாக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. குமுதத்தின் அப்போதைய எதிர்பார்ப்பும் அதுதான். அப்படி எழுதிய ‘காதல்’, ‘சுருண்டு கிடந்தார்’, ‘கூடு’ போன்ற சிறுகதைகளை குமுதம் உடனே வெளியிட்டது. 

காதல் குறுங்கதையை இந்த வார தமிழோவியத்தில் வாசிக்கலாம்.