பெயர்ச்சி


சிதிலமடைந்து வெறிச்சோடிக் கிடக்கும் இடங்களைப் பார்த்தால் மனசுக்குள் இனமறியா சோகம் ஏற்படும். ஒரு காலத்தில் அங்கே இருந்திருக்கக் கூடிய கலகலப்பான தருணங்கள் உள்மனத்தில் சலனப் படம் போல தோன்றி விட்டுப் போகும்.

Thanks Giving Day  விடுமுறையில் Marysville, OH சென்றிருந்தேன். அது ஒரு குக்கிராமம். விரிந்து பரந்த நிலப் பரப்பு. ஓரிரு வருடங்கள் அங்கே வாழ்ந்தது மிக அமைதியான வாழ்க்கை. கூப்பிடு தூரத்தில் ஒரு ஷாப்பிங் மால் இருந்தது. Wal Mart, Bed Bath & Beyond, Radio Shack, ஒரு முடி திருத்தகம் மற்றும் சில கடைகள். கார்களும் மனிதர்களுமாய் பரபரப்பாய் காட்சியளிக்கும் அந்த இடம் இப்போது எல்லாக் கடைகளும் மூடப்பட்டு பாலைவனம் போலக் கிடந்தது.

‘சூப்பர் ஸ்டோர்’ அவதாரம் எடுப்பதற்காக Wal Mart வேறு இடம் பெயர்ந்து விட்டது என்று நண்பர் சொன்னார்.