திருட்டு


ஆர்த்தியை சந்தித்தபோது, இங்கே யாரும் வீடுகளைப் பூட்டுவதே கிடையாது. அப்படியே போட்டது போட்டபடி அலுவலகம் செல்கிறோம் என்றார். Upstate New York-ல் மலைப்பாங்கான கிராமம்.

முதன் முதலில் அமெரிக்கா வந்திறங்கியது நினைவுக்கு வந்தது. Baggage Claim Section-ல் நம்ம ஊர் ஜாக்கிரதை உணர்வோடு இடது கையில் ஒரு பெட்டியைப் பிடித்துக் கொண்டு வலது கையால் ஓடும் பெல்ட்டிலிருந்த இன்னொரு பெட்டியை எடுக்க முயன்ற போது, தோளைத் தட்டி சிரித்தார் ஒரு இந்திய அன்பர்.

” Hello, this is America. No one is going to steal your bags ! ”

அடுத்த பத்தாவது நிமிஷம் என்னுடன் வந்த நண்பர் பேயறைந்த முகத்தோடு என்னை உலுக்கினார்.

” Cart மேல வெச்சிருந்த Cabin Bag-ஐ பார்த்திங்களா ? ”

அதில்தான் அவருடைய பாஸ்போர்ட், விசா, பல்கலை சான்றிதழ்கள், வேலை அனுபவச் சான்றிதழ்கள்  உள்ளிட்ட சகலமும் இருந்தன.  அவர் ஒரு மிட்டாய்க் கடையைப் பார்த்துக் கொண்டிருந்த அவகாசத்தில் யாரோ பெட்டியை லவட்டி விட்டார்கள்.

போன வாரம் அமர் அலுவலக Cafeteria-வில் சாப்பிட்டு விட்டுத் திரும்பும்போது பர்சை தவற விட்டார்.  கண்டெடுத்த யாரோ அதை செக்யூரிட்டி டெஸ்க்கில் ஒப்படைத்திருக்க, பெற்றுக் கொள்ளும்படி போனில் சொன்னார்கள். பர்சிலிருந்த $300-ஐக் காணவில்லை. மொத்த சம்பவமும் ஐந்து நிமிஷங்களுக்குள் நடந்து முடிந்தது.

” இது தெருவில் நடந்திருந்தால் வருந்தியிருக்க மாட்டேன். Well educated and cultured people மட்டுமே இருக்கும் (அல்லது இருப்பதாக நம்பப்படும்) அலுவலகத்துக்குள் நடந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ” என்றார் அமர்.