ஓடாமல் விளையாடு பாப்பா


Game Boy Advance– காலாவதியாகி விட்டது. இனியும் அதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என்று  அகில்  சொல்லி விட்டான். அந்தக் குட்டி இயந்திரம் மிக நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனாலும் அதை வைத்துக் கொண்டிருப்பது அவனைப் பொறுத்த வரை தட்டச்சு மெஷினை வைத்து வலைப்பூ எழுத முயல்கிற மாதிரி என்பது புரிந்தது. இதனால் தனது நட்புகள் பாதிக்கப்படுவதாக வருந்தினான்.
 

Wii

செய்த ஆராய்ச்சியில் இப்போது Wii –  தான் மிகப் பிரபலம் என்று தெரிகிறது. இதில் டென்னிஸ், பௌலிங் எல்லாம் நிஜமாகவே வியர்வை சிந்த விளையாடலாம். ஆஸ்பத்திரிகளில் பிசியோ தெரபிக்கு உபயோகிப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்குமே ஸ்டாக் இல்லை.  Best Buy (ஹைப்பர் லிங்க் கொடுத்துக் கொடுத்து களைப்பாகி விட்டது)- ல் கேட்டால் என்றைக்குக் கிடைக்கும் என்று பேப்பர் பார்த்துக் கொண்டிருங்கள். கிடைக்கும் என்று தெரிந்தால் காலை ஐந்து மணிக்கு வந்து வரிசையில் நில்லுங்கள் என்பது பதில்.
 
கடைசியில் Nintendo DS Lite வாங்கினோம்.  WIFI வசதி உண்டு. ஒரே நெட்வொர்க்கில் இருக்கும்போது விளையாட்டுக்களை பரிமாறிக் கொள்ளலாம். இப்போது அகிலுடைய நாட்காட்டியில் நிறைய Play Date Appointments.