ஈகோவும், இயந்திரங்களும்


அந்த Get Together முகவரியை கண்டு பிடிப்பது சற்று கடினம்தான். சுற்றிலும் முழு முஸ்திபுகளில் சாலைப் பணிகள் நடப்பதே காரணம். நிறைய Detour அம்புக்குறிகள். GPS உபகரணம் இருந்ததால் சாட்டிலைட் பகவான் புண்ணியத்தில் நான் குழப்பமின்றி இடம் சேGPS on smart phoneர்ந்தேன்.

சென்ற வருடத்து விழாக் கால விற்பனையில் நாயகன் GPS தான். மக்களின் வாங்கும் சக்திக்கு நிகராக அதன் விலை இறங்கி வந்ததே காரணம். சந்தித்தவர்களில் பலரும் இந்த முறை GPS வைத்திருந்தார்கள்.  சந்தேகமில்லாமல் இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. குழப்பத்தைக் குறைத்து மனதை சாந்தப்படுத்துகிறது.

இருந்தும் இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களை வீம்புக்காக முதலில் வாங்க மறுக்கிறோம். Map Quest-ல் Turn by Turn  அச்சடித்துக் கொண்டு, அட்லசில் அட்ச ரேகை  தீர்க்க ரேகைகளுக்கு நடுவே தென்படும் நுணுக்கி நுணுக்கிய எழுத்துக்களைப் படித்து இடம் சேர்வதுதான் வீரம் என்று (பிடி)வாதம் பண்ணி வந்தவர்கள் வீரமா, நேரமா எது முக்கியம் என அன்று உணர்ந்தார்கள்.