உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல்…


உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இங்கே Expedia அல்லது SideStep தளங்களைப் போலவே இத்தளம் இந்தியாவின் வெவ்வேறு விமான நிறுவனங்களின் பயண விலையை தேடி தொகுத்துக் கொடுக்கிறது. அவர்கள் சேவையும் சிறப்பாகவே இருப்பதாக உமேஷின் வாசகர்கள் தரும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

கூடுதலாக Small World என்ற பகுதியையும் இத்தளம் நிர்வகிக்கிறது.  நீங்கள் பயணிக்க இருக்கும் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் பற்றிய சிறு விபரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.  அதில் சென்னை பற்றிய குறிப்பைப் பார்த்து சற்றே துணுக்குற்றேன்.

People in Chennai are generally averse to speaking in Hindi which makes it difficult to converse with the locals, especially if they are not conversant in English either.           

சென்னைக்கு பயணிப்பவர்களுக்கான உபயோகமான தகவல்தானே என்று தோன்றுகிறதா ? பிரச்சனை தகவல் குறித்து அல்ல.Cleartrip Annoyanceஅது தொகுக்கப்பட்டிருக்கும் இடம். சென்னை நகரத்தின் எரிச்சலூட்டும் அல்லது அசவுகர்யம் தரும் விஷயங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருக்கிறது இந்த மும்பை நிறுவனம். ஒரு பகுதி மக்கள் அவர்கள் தாய்மொழியில் பேசிக்கொள்வதை எப்படி அசௌகர்யம் என்று கருதலாம் ? 

இது போன்ற தகவல்களை கருத்தாக்கமாகத் தராமல்  புள்ளி விபரங்களாகத் தருவது வியாபார நிறுவனங்களுக்கு நல்லது. 

UPDATE: UPDATE: Looks like ClearTrip has changed the page and text. Now I see the following paragraph under Chennai:

“The preferred language of communication amongst the local population is Tamil. However, English is widely spoken as the language of commerce and English speaking visitors should have no problem getting around. The city also has a fair number of people that speak Telugu, Malayalam and Hindi.”

Thank you ClearTrip, for making this change!