கார்களும், பெண்களும் 

கார்களை பெண்களோடு ஒப்பிட்டு வாலி எழுதிய பாட்டுத்தான் ஞாபகம் வந்தது. வாஷிங்டன் டி.சியில் நடந்த Auto Show போயிருந்தேன்.
 
போன வருடத்தை விட இந்த முறை கூட்டம் அதிகம் என்றார் நந்தா. இந்த வருடத்து அறிமுகக் கார்கள் பளபளவென்று அதி அலங்காரத்துடன் கண்ணைக் கவரும் உயரங்களிலும், சுழலும் மேடைகளிலும் சுயம்வரத்தனமாய் நிறுத்தப்பட்டிருந்தன.
 Cheer Leaders
Ferrari, Hummer போன்ற கார்களில் ஏக்கப் பெருமூச்சுடன் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள தள்ளு முள்ளு.
 
முதல் வரிக்கு வருவோம். Lamborghini நிறுவனம் பிரபல Cheer Leader பெண்களை கவர்ச்சிகரமாய் தங்கள் களத்தில் நிறுத்தி சோதித்ததில், Lamborghini ரசிகர்கள் அந்தப் பெண்களை விட கார்களையே ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
 
நானும் ஒரு தடவை அந்தக் காரைத் தடவிப் பார்த்து விட்டு வந்தேன். விற்பனை விலை $450,000.00 மட்டுமே.