மறுபடியும் இரங்கல்


மறுபடியும் வருந்த வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன்.  

ஸ்டெல்லா ப்ரூஸ்.

ப்ரம்மச்சாரிகளின் சொர்க்கம் திருவல்லிக்கேணியை சுற்றி வரும் அந்தத் தொடரை எண்பதுகளின் துவக்கத்தில் படித்ததை மறக்க முடியாது. கதை எழுதத் தூண்டிய காரணிகளைப் பட்டியலிட்டால் அதில் அந்தக் கதையும் அடங்கும்.

எழுத்து மோகம் ஒருவரை எந்த அளவுக்கு ஆட்டி வைக்கும் என்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். எழுத்தையும் வாழ்க்கையையும் ஒரே சேர ஜெயிப்பதே இங்கு பெரிய சவால். கதைகளை அச்சில் பார்க்கப் பார்க்க  எழுத்தை தியாகம் செய்ய அத்தனை சுலபத்தில் மனம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் தமிழில் எழுத்தை நம்பி வாழ்வை ஒப்படைக்கும் தைரியம் தற்கொலைக்கு சமானம்தான்.

சொன்னால் யாரும் கேட்கப் போவதில்லை என்று செய்தும் காட்டினாரா ஸ்டெல்லா ப்ரூஸ் ?