Updates from ஏப்ரல், 2008 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சித்ரன் ரகுநாத் 6:47 am on April 29, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: , , செராங்கூன், நரஞ்சன் ஸ்டோர், முஸ்தபா,   

    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3 

    லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது Singaporeஉறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க கூடுகிற கூட்டம்தான்.  Money Transfer அலுவலகங்களில் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசை நீளமாய்க் காத்திருக்கிறது. அர்ஜூனரு வில்லு அரிச்சந்த்ரன் சொல்லு.. என்று ஒலி பெருக்கியில் பாடல் முழங்குகிறது. சி. ஒ. சி. வி -2-ல் குறிப்பிட்டபடி நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்.

    லிட்டில் இந்தியாவின் மிக முக்கிய அட்ராக்ஷன் செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். எளிதில் புரிய வைக்க இதை சிங்கப்பூரின் சரவணா ஸ்டோர்ஸ் என்று சொன்னால் முதலாளி கோபித்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைவிட 10 மடங்கு இருக்கிற இந்த மெகா ஸ்டோரில் சிங்கப்பூர் விசா தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். இது தவிர முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் (எல்லோரும் ஏன் இதை நிரஞ்சன் என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை) என்று ஒரு சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கிறது.

    ஆக லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் இந்திய இதயம்.

    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 2
    சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1

     
  • சத்யராஜ்குமார் 6:54 am on April 25, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    மரணம் 

    காட்டன் புடவையில் அழகாய் வலம் வரும் இந்திரா டீச்சர் இன்னமும் கண்ணுக்குள் இருக்கிறார். சிறு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவர் அனஸ்திஷியா அதிகமாகி இறந்து விட்டார். அகாலமாய் அவர் இறந்த போதும், மாணிக்கம் டீச்சர் புற்று நோயினால் உயிர் நீத்த போதும், ஏன் பத்து நாட்கள் படுத்த படுக்கையாகி திடீரென என் தாத்தா இறந்த போதும் எனக்கு இப்போதைய அகிலின் வயதுதான் இருக்கும். 

    சின்ன வயதில் அறிமுகமான இந்த மரணங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தின என்று சரியாய் நினைவில்லை. அப்படி பாதித்திருந்தால் எப்படி அதிலிருந்து மீண்டடேன் என்பதும் தெரியாது.

    நேற்று அகிலின் வகுப்பாசிரியை ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவனிடம் இன்று ஒரு  Sealed Envelope கொடுத்தனுப்பப்பட உள்ளதெனவும் அதன் சாராம்சம் கீழே உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். கேன்சருடன் போராடி வந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மரணமடைந்து விட்டார். இச்செய்தி அவனிடம் தெரிவிக்கப்படவில்லை. நீங்களே பக்குவமாக அவனுக்கு இச்செய்தியை சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.  

    குழந்தைகளிடம் இதைப் பற்றி எப்படி பேச வேண்டுமென தெரியாவிட்டால் இந்த இணைய தளங்களை முதலில் படித்துக் கொள்ளவும் என்று சொல்லி இது (http://www.americanhospice.org/) போல சில சுட்டிகளும் தந்திருந்தார். கீழ்க்கண்ட புத்தகங்களும் உங்களுக்கு உதவுமென்று சொன்னார்.

    When Dinosaurs Die by Marc & Laurence Brown

    The Grieving Child, A Parent’s Guide by Helen Fitzgerald

    அகிலுக்கு மேலும் ஆறுதல் தேவைப்படுமெனில் சொல்லவும், பள்ளியில் அதற்கென ஒரு குழு உள்ளது என்றும் மின்னஞ்சல் சொல்லி முடித்தது.

    இறந்த ஆசிரியைக்கு மனதுக்குள் மவுன அஞ்சலி செலுத்திய பின் யோசித்துப் பார்க்கிறேன். மேற்சொன்ன புத்தகங்களும் இணைய தளங்களும் இல்லாமல் சின்ன வயதில் நமக்கெல்லாம் மரணங்களைப் புரிய வைத்தது தமிழ் சினிமாக்களாகத்தான் இருக்க வேண்டும். 

     

     
    • Cyril Alex 10:26 முப on ஏப்ரல் 25, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //இறந்த ஆசிரியைக்கு மனதுக்குள் மவுன அஞ்சலி செலுத்திய பின் யோசித்துப் பார்க்கிறேன். மேற்சொன்ன புத்தகங்களும் இணைய தளங்களும் இல்லாமல் சின்ன வயதில் நமக்கெல்லாம் மரணங்களைப் புரிய வைத்தது தமிழ் சினிமாக்களாகத்தான் இருக்க வேண்டும். //

      பல முக்கிய விஷயங்களையெல்லாம் சினிமாவிலேர்ந்து கத்துகிட்டு பின்னாடி திரும்ப கத்துக்கவேண்டியிருக்குது.

    • blj 2:44 பிப on ஏப்ரல் 28, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Even the person who prepared the note, I guess, have not had such an introduction to death. This is probably new way of teaching children. All well, but what surprises me is, the school seem to forget that the kids would have got their first experience of death in a game console when they were 6. They know you get another chance when you die.

    • சத்யராஜ்குமார் 9:59 பிப on ஏப்ரல் 28, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

      @Cyril Alex:
      கற்க கசடற கற்றால் (நல்லதோ கெட்டதோ) மறுபடி கற்க வேண்டாமே. சினிமாவிலிருந்து கசடற கற்க முடியாது என்று சொன்னீர்களா ?

      @blj:
      True. Game console is now their window to see the world. It worries me that often what they learn from console games are not ‘down-to-earth’ things.

  • சத்யராஜ்குமார் 7:35 pm on April 16, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: gas station, gasoline, petrol   

    பெட்ரோல்: சில குறிப்புகள் 

    பெட்ரோல் விலை விர்ர்ரென்று உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக அத்துறையில் பணியாற்றி வரும் அமெரிக்க அன்பர் அளித்த சில டிப்ஸ்.

    • பெட்ரோலியம் தொழிலில் தட்ப வெப்ப நிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது த்ிரவ எரிபொருளின் அடர்த்தியை தீர்மானிக்கிறது. எரிபொருள் நிரப்பப்படும் ஒவ்வொரு லாரியும் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்பட்டவை. வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் பல டாலர்கள் கையைக் கடிக்கும். ஆனால், காஸ் ஸ்டேஷன்கள் எனப்படும் பெட்ரோல் பங்க்குகள் அவ்வண்ணம் வெப்பநிலை அக்கறை கொண்டவை அல்ல.  அவை பெட்ரோலை நிலத்தடியில் சேமிப்பதால், உங்கள் வாகனங்களுக்கு அதிகாலையில் பெட்ரோல் நிரப்புவதே நல்லது. நிலம் குளிர்ந்திருக்கும் அவ்வேளையில் பெட்ரோலின் அடர்த்தி அதிகமாயிருக்கும். நீங்கள் நிரப்பும் ஒரு கேலன் பெட்ரோல் ஒரு கேலனாக இருப்பது அப்போது மட்டுமே. மதியம் அல்லது மாலையில் நீர்த்துப் போன எரிபொருளை நிரப்புவது, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கின மாதிரிதான். அளவில் தில்லுமுல்லு இருக்கும்.
    • நீங்கள் எரிபொருள் நிரப்பப் போகிறபோது அங்கே ஒரு டாங்க்கர் லாரி பங்க்கின் நிலத்தடி சேமிப்புத் தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தால் வேறு இடம் பாருங்கள். வோட்காவும் சிக்கன் பிரியாணியும் கலந்தடித்த பின் கலங்கிப்போகும் வயிறு மாதிரியே நிலத்தடி சேமிப்புத்தொட்டியில் ஒரு பிரளயமே ஏற்பட்டு குப்பை கூளம் எல்லாம் மேலே எழும்பியிருக்கும். அவற்றை அவசியம் உங்கள் வாகனத்தில் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா ? 
    • காலி என்று சிவப்பு விளக்கு எரியும் வரை காத்திராமல் வாகனத்தில் பாதி டாங்க் தீர்ந்தவுடனே நிரப்பி விடுவது நல்லது. டாங்க்கில் காலியிடம் அதிகமாயிருந்தால் ஆவியாதல் விரைவாய் நடக்கும். நஷ்டம் நமக்கே. 
    • பொதுவாக பெட்ரோல்  பம்ப்புகளில் மெதுவாக, மிதமாக, வேகமாக என மூன்று விதமாய் நிரப்பும் வசதி இருக்கும். சீக்கிரம் வேலை முடிய வேகமாக நிரப்பும் வசதியையே நம்மில் பலரும் தேர்வு செய்கிறோம். இனிமேல் மெதுவாக நிரப்புங்கள். வேகமாய் பெட்ரோல் நிரப்பும்போது  நுரை அதிகம் ததும்பும். குழாயில் நுரை உருவாக்கும் வெற்றிடம் நீங்கள் நிரப்பி முடித்தபின் வாகனத்தின் டாங்க்கிலிருந்து ஓரளவு பெட்ரோலை திரும்ப உறிஞ்சிக் கொள்கிறது. 
     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி