Updates from திசெம்பர், 2008 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 7:14 am on December 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  வாஷிங்டனில் காதுகுத்து 

  நூற்றுக் கணக்கில் சுற்றம் சூழ குல தெய்வம் கோயிலில் தென்றலுக்கு ஆகஸ்ட்டில் நடந்த காது குத்து வைபவம் சென்ற இரு பதிவுக்கு முந்தைய பதிவை கவனமாய்ப் படித்திருந்தால் தெரிந்திருக்கும். அது வெறும் வைபவம் அல்ல; பெரிய களேபரம் என்பது கீழே உள்ள புகைப்படம் பார்த்தால் புரியும்.

   

  இந்தியாவில் காதுகுத்து

  இந்தியாவில் காதுகுத்து

  பலியாடு மாதிரி கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்த தென்றலுக்கு ஒரு காது குத்துவதே பெரும்பாடாயிருந்திருக்க, மறு காது குத்துவதற்குள் ஆசாரி முதல் அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள்.  அடுத்த அரை மணி நேரத்திலிருந்தே அவள் தன் தோடைப் பிடித்து இழுப்பதும், வலியில் அழுவதுமாய் இருந்ததில் அடுத்த நாள் காலையில் இரண்டு காதுகளிலும் ரத்தக் காயம். தோடுக்கு பதிலாக வேப்பங்குச்சி சொருகச் சொன்னார்கள் வீட்டுப் பெரியவர்கள். மூன்றே நிமிஷங்களில் குச்சி மாயமாகி விட, தயவு செய்து நடந்த காதுகுத்து சம்பவங்களை மறந்து விடுமாறு எல்லோரையும் நான் கெஞ்சி கேட்டுக் கொண்டேன். நாலாம் நாள் ஓட்டை அடைபட்டுப் போக, காதுகுத்திய சுவடே இல்லாமல் அமெரிக்கா திரும்பி வந்தாள் தென்றல்.

  போன வாரம் ஷாப்பிங் மால் வளாகம் சென்ற போது, எதேச்சையாய் இந்த அறிவிப்புப் பலகை பார்த்தோம்.

   

  இங்கு இலவசமாய் காதுகுத்தப்படும்

  இங்கு இலவசமாய் காதுகுத்தப்படும்

  நாள் நட்சத்திரம் பார்க்காமல் வாஷிங்டனில் காதுகுத்துக்கு உடனடி முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் கீழே படங்களில் !

   

  இந்தக் குட்டிப் பிசாசுக்கு எப்படி குத்தப் போகிறோனோ என்று மலைக்கிறார் காது குத்து நிபுணி.

  இந்தியாவில் நடந்த காதுகுத்து சம்பவங்களை கேட்டுவிட்டு, இந்தக் குட்டிப் பிசாசுக்கு எப்படி குத்தப் போகிறேனோ என்று மலைக்கிறார் காது குத்து நிபுணி.

  முன்னேற்பாடுகள் ஆரம்பம்.

  முன்னேற்பாடுகள் ஆரம்பம்.

  காது குத்த வேண்டிய இடம் குறி பார்க்கப்படுகிறது

  காது குத்த வேண்டிய இடம் குறி பார்க்கப்படுகிறது

   

   

   

   

   

   

   

   

  மருந்து தடவி இரண்டுபேர் ஆளுக்கொரு காதில் ஸ்டாப்லர் போன்ற கருவியைப் பிடித்துக் கொண்டு, "Ready Set Go", ஏக காலத்தில் இரண்டு காதுகளிலும் ஸ்டாப்லரை ஒரே ஒரு அமுக்கு.

  மருந்து தடவி இரண்டுபேர் ஆளுக்கொரு காதில் ஸ்டாப்லர் போன்ற கருவியைப் பிடித்துக் கொண்டு, "Ready Set Go", ஏக காலத்தில் இரண்டு காதுகளிலும் ஸ்டாப்லரை ஒரே ஒரு அமுக்கு.

   

  ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை. அப்படி ஏதும் அழுகை இருந்தால் அடைப்பதற்கு வாழைப்பழத்துக்கு பதிலாக லாலிபாப்.

  ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை. அப்படி ஏதும் அழுகை இருந்தால் அடைப்பதற்கு வாழைப்பழத்துக்கு பதிலாக லாலிபாப்.

   

  இடதும் ...

  இடதும் ...

  வலதும் ...

  வலதும் ...

   

   

   

   

   

   

   

  இனிதே மின்ன… காது குத்து சுபம் !

   
  • சந்தனமுல்லை 7:30 முப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   🙂

  • Sathya 7:53 முப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   🙂 🙂 🙂

  • இலவசக்கொத்தனார் 8:09 முப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்தியாவில் கூட (குறைந்தபட்சம் நகரங்களில்)இது போன்ற ஸ்டேப்பிளர் கன்கள் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

  • dYNo 8:16 முப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   >இங்கு இலவசமாய் காதுகுத்தப்படும்<

   அமெரிக்காவில் இதுவாவது ஃப்ரீயாக் கிடைக்குதே! எகனாமி இருக்கற நிலமயில எல்லோருக்கும் இலவசமா குத்தறாங்க போல?

   தென்றல், அழகோ அழகு!

  • bsubra 9:15 முப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   டாக்டரே கூட குத்திவிடுவார்கள்.

   பலகளம் கண்ட வீரர் தென்றலுக்கு வாழ்த்துகள் 🙂

  • Chithran 12:35 பிப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Interesting…

  • iLa 1:53 பிப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நான் கூட அரசியல்வாதிங்க குத்துற காதோன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனாலும் நிபுணியோட உணர்வு, உலக அழகிப் பட்டம் வாங்குற பொண்ணு அளவுல இருக்குதுங்கோவ்வ்

  • நசரேயன் 2:00 பிப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பாராவா இல்லையே இலவசம் காது குத்து இனிமையா முடிஞ்சு போச்சே

  • சத்யராஜ்குமார் 6:20 பிப on திசெம்பர் 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @சந்தனமுல்லை:
   @Sathya:
   நன்றி 🙂

   @இலவசக்கொத்தனார்:
   ஆமாம். இந்தியாவில் டாக்டர்கள் கூட குத்தி விடுகிறார்கள். ஆனால் நம்ம வீட்டு ஜனங்க ஒத்துக்கணுமே !

   @dYNo:
   நன்றி. ஆனா இங்கே ஏதாச்சும் இலவசமா கிடைச்சுடுமா என்ன ? காதுகுத்துதான் இலவசம். தோடு இலவசமில்லை. அந்த அறிவிப்புப் பலகையே ஒரு இலவச காது குத்துதான் !

   @bsubra:
   நன்றி. இலவசக்கொத்தனாருக்கான பதில் பார்க்க !

   @Chithran:
   Thanks…. நீங்களூம் அப்பப்ப சென்னை விஷேசம் ஏதாச்சும் எழுதிப் போடறதுதானே ?

   @iLa:
   ஆமாம் இளா, இந்த தலைப்பில் ஒரு பெரிய அரசியல் கட்டுரையையோ, பொருளாதாரக் கட்டுரையையோ வலையுலக வல்லுனர்கள் யாராவது எழுதலாம்.

   @நசரேயன்:
   நன்றி. dyNo-வுக்கான பதில் பார்க்க !

  • Baranee 2:48 முப on திசெம்பர் 10, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   🙂

  • anjuvarsh 4:43 முப on திசெம்பர் 10, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Ennada kaadhu kuthureenga? Freeya kadhu kuthuaaa?

  • nchokkan 4:52 முப on திசெம்பர் 10, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஆஹா, க்யூட்டான அனுபவம், அதைவிட க்யூட்டான ஃபோட்டோக்கள் … நன்றி!

   ‘இந்த அறிவிப்புப் பலகையே ஒரு இலவசக் காது குத்துதான்’ என்கிற வரியில் தெரிகிறது உங்கள் அனுபவம் 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூர்.

  • nchokkan 4:54 முப on திசெம்பர் 10, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பெங்களூரில் காது குத்து நிலையங்கள் உள்ளன, சில மருத்துவமனையிலும் அறிவிப்புப் பலகையைப் பார்க்கமுடிகிறது, ஆனால் எதுவும் இலவசம் இல்லை!

   ஒருவேளை இலவசமாகக் கொடுத்தாலும்கூட, மக்கள் அப்போதும் பழனியில்தான் முட்டி மோதுவார்கள்!

   பை தி வே, காது குத்து நிபுணியின் காதில் எம்மாம் பெரிய தோடு!

   – என். சொக்கன்,
   பெங்களூர்.

  • சத்யராஜ்குமார் 6:51 பிப on திசெம்பர் 10, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @Baranee:
   @anjuvarsh:
   🙂

   @nchokkan:
   நன்றி. இருபது வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்பு எனது ஒன்று விட்ட அண்ணா தன் மகளுக்கு டாக்டரிடம் காது குத்தி குடும்ப அளவில் புரட்சி செய்தார். இப்போது அந்தப் பெண் cognizant-க்கு காதுகுத்திக் கொண்டிருக்கிறாள். 🙂 மற்றபடி யாரும் குலதெய்வம் அல்லது பழனி மடம் தாண்டவில்லை !

  • Dpal 10:11 பிப on திசெம்பர் 11, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Interesting!

  • REKHA RAGHAVAN 6:57 முப on திசெம்பர் 16, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   தென்றலை(காதில் தோடுடன்) பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

   ரேகா ராகவன் .

  • சத்யராஜ்குமார் 8:03 முப on திசெம்பர் 19, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ரேகா ராகவன், நன்றி.

 • சத்யராஜ்குமார் 8:55 pm on December 1, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: bloggers meet, readers, writers   

  NJ சந்திப்பு 

  எழுத்தாளராக முயன்று வந்த போது, இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் செல்லும் பழக்கமில்லாமல் சில நுட்பங்கள் அறியாமல் போனேன். தற்சமயம் வலைப்பதிவராகும் முயற்சியில் மேற்படி தவறு நடந்து விடக்கூடாதென நாலு மணி நேரம் பயணித்து NJ சென்று வந்தேன்.

  அறிந்த பெயர்கள். அறியாத முகங்கள். மசாலா உணவகத்தில் நடந்த மசாலா சந்திப்பு. Buffet ஸ்டைலில் எல்லா டாபிக்கையும் தொட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு சிலது சற்று காரசாரமாக இருந்தாலும், பொதுவாக எல்லா அயிட்டங்களும் சுவையாக இருந்தன. 

  வாசகர்கள், வலைப்பதிவர்கள் என்ற இரண்டு லேபிள்களில் அங்கே நபர்கள் இருந்தார்கள். சந்தித்தவர்கள் பற்றியும், பேசியது பற்றியும் விளக்கமாக வேறு சில இடங்களில் காணக்கூடும். 

  எழுத்தாளர்கள் சந்தித்துக் கொண்டால் வாசகர்கள் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியும். வாசகர்கள் சந்தித்துக் கொண்டால் எழுத்தாளர்கள் குறித்து என்னவெல்லாம் பேசுவார்கள் என அன்று அறிந்தேன்.

  வளரும் எழுத்தாளர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கு உபயோகமானவை. அதைப் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. அப்போதுதான் அடுத்த சந்திப்புக்கு இன்னும் கொஞ்சம் கூட்டம் கூடும் !

   
  • ila 9:05 பிப on திசெம்பர் 1, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //அதைப் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. /
   இப்படியே டென்சன் கெளப்புறீங்க..

  • இலவசக்கொத்தனார் 9:27 பிப on திசெம்பர் 1, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஒரு எழுத்தாளரின் பார்வையில் இந்த கூட்டம் எப்படிப் பார்க்கப்பட்டதுன்னு ஆசையா வந்தேன். ஆனா அமுக்கி வாசிச்சுட்டீங்களே! 😦

   உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். நாம் பேசிய விக்கிபசங்க பக்கத்தின் உரல் – http://wikipasanga.blogspot.com/

  • நசரேயன் 10:43 பிப on திசெம்பர் 1, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஐயா நான் ரெம்ப நல்லவன் பாத்து செய்யுங்க

  • சத்யராஜ்குமார் 7:13 முப on திசெம்பர் 3, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @ila,:
   @நசரேயன்:
   எழுதாமல் விட்டவை கேட்டலே நன்று 🙂

   @இலவசக்கொத்தனார்:
   எப்படியும் எல்லோரும் விரிவாக எழுதப் போகிறார்கள் என்பதால் சுருக்கமாக எழுதி விட்டேன். விக்கி பசங்க பார்த்தேன். உபயோகமான தளம்தான். தேடல் வசதி இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி