வாஷிங்டனில் காதுகுத்து


நூற்றுக் கணக்கில் சுற்றம் சூழ குல தெய்வம் கோயிலில் தென்றலுக்கு ஆகஸ்ட்டில் நடந்த காது குத்து வைபவம் சென்ற இரு பதிவுக்கு முந்தைய பதிவை கவனமாய்ப் படித்திருந்தால் தெரிந்திருக்கும். அது வெறும் வைபவம் அல்ல; பெரிய களேபரம் என்பது கீழே உள்ள புகைப்படம் பார்த்தால் புரியும்.

 

இந்தியாவில் காதுகுத்து

இந்தியாவில் காதுகுத்து

பலியாடு மாதிரி கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்த தென்றலுக்கு ஒரு காது குத்துவதே பெரும்பாடாயிருந்திருக்க, மறு காது குத்துவதற்குள் ஆசாரி முதல் அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள்.  அடுத்த அரை மணி நேரத்திலிருந்தே அவள் தன் தோடைப் பிடித்து இழுப்பதும், வலியில் அழுவதுமாய் இருந்ததில் அடுத்த நாள் காலையில் இரண்டு காதுகளிலும் ரத்தக் காயம். தோடுக்கு பதிலாக வேப்பங்குச்சி சொருகச் சொன்னார்கள் வீட்டுப் பெரியவர்கள். மூன்றே நிமிஷங்களில் குச்சி மாயமாகி விட, தயவு செய்து நடந்த காதுகுத்து சம்பவங்களை மறந்து விடுமாறு எல்லோரையும் நான் கெஞ்சி கேட்டுக் கொண்டேன். நாலாம் நாள் ஓட்டை அடைபட்டுப் போக, காதுகுத்திய சுவடே இல்லாமல் அமெரிக்கா திரும்பி வந்தாள் தென்றல்.

போன வாரம் ஷாப்பிங் மால் வளாகம் சென்ற போது, எதேச்சையாய் இந்த அறிவிப்புப் பலகை பார்த்தோம்.

 

இங்கு இலவசமாய் காதுகுத்தப்படும்

இங்கு இலவசமாய் காதுகுத்தப்படும்

நாள் நட்சத்திரம் பார்க்காமல் வாஷிங்டனில் காதுகுத்துக்கு உடனடி முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் கீழே படங்களில் !

 

இந்தக் குட்டிப் பிசாசுக்கு எப்படி குத்தப் போகிறோனோ என்று மலைக்கிறார் காது குத்து நிபுணி.

இந்தியாவில் நடந்த காதுகுத்து சம்பவங்களை கேட்டுவிட்டு, இந்தக் குட்டிப் பிசாசுக்கு எப்படி குத்தப் போகிறேனோ என்று மலைக்கிறார் காது குத்து நிபுணி.

முன்னேற்பாடுகள் ஆரம்பம்.

முன்னேற்பாடுகள் ஆரம்பம்.

காது குத்த வேண்டிய இடம் குறி பார்க்கப்படுகிறது

காது குத்த வேண்டிய இடம் குறி பார்க்கப்படுகிறது

 

 

 

 

 

 

 

 

மருந்து தடவி இரண்டுபேர் ஆளுக்கொரு காதில் ஸ்டாப்லர் போன்ற கருவியைப் பிடித்துக் கொண்டு, "Ready Set Go", ஏக காலத்தில் இரண்டு காதுகளிலும் ஸ்டாப்லரை ஒரே ஒரு அமுக்கு.

மருந்து தடவி இரண்டுபேர் ஆளுக்கொரு காதில் ஸ்டாப்லர் போன்ற கருவியைப் பிடித்துக் கொண்டு, "Ready Set Go", ஏக காலத்தில் இரண்டு காதுகளிலும் ஸ்டாப்லரை ஒரே ஒரு அமுக்கு.

 

ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை. அப்படி ஏதும் அழுகை இருந்தால் அடைப்பதற்கு வாழைப்பழத்துக்கு பதிலாக லாலிபாப்.

ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை. அப்படி ஏதும் அழுகை இருந்தால் அடைப்பதற்கு வாழைப்பழத்துக்கு பதிலாக லாலிபாப்.

 

இடதும் ...

இடதும் ...

வலதும் ...

வலதும் ...

 

 

 

 

 

 

 

இனிதே மின்ன… காது குத்து சுபம் !