Updates from ஜனவரி, 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 11:33 am on January 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்! 

  dialogue_pic

  1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??
  2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.
  3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..
  4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.
  5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.
  6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!
  7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!
  8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.
  9. தூக்குடா அவன..
  10. நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம்.
  11. உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..
  12. என் அன்னையின் மேல் ஆணை..
  13. யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.
  14. அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…
  15. தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…
  16. எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.
  17. நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக் குடுத்தாதான் எனக்கு நிம்மதி.
  18. என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டீங்களே..
  19. உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன செய்யணும்?
  20. ஏய்ய்ய்ய்ய்ய்ய்!
  21. என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!
  22. என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை பாக்கிறமாதிரியே இருக்கு.
  23. ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??
  24. ஏ.. யாருடி அவன்..?
  25. சார்.. போஸ்ட்..!!
  26. கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
  27. ஒரு பொண்ணு நினைச்சா…
  28. இத்துடன் கோர்ட் கலைகிறது.
  29. நான் இப்ப எங்கிருக்கேன் ?
  30. எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.
  31. ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..
  32. நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு வந்திருக்கறது…
  33. ……..

  தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற  வசனங்கள் என்னென்ன என்று ஒரு போரடித்த பொழுதில் யோசித்தபோது ஞாபகம் வந்தவை இவை.  ஏற்ற இறக்கங்களுடன் படிக்கவும். நீங்களும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்லலாம்.

   
  • chinnappaiyan 12:08 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   1. கங்ராஜுலேஷன்ஸ்… நீங்க அப்பாவாக போறீங்க!!!
   2. பணத்தை எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளியே இருக்கற பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்துடுங்க!!!

  • Yaathirigan 12:17 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   :-)))))))))))))))) sema collection

  • நாமக்கல் சிபி 1:26 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   :))

   தயவு செஞ்சி என்னை மறந்துடுங்க ராஜு!

  • மருதநாயகம் 1:45 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்கள பத்தி முழுசா தெரியாம ஏதேதோ பேசிட்டேன் என்ன மன்னிச்சுருங்க

  • Rajathi Raj 1:55 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   A few from me:
   பெத்தமனம் பித்து பிள்ள மனம் கல்லுனு சும்மாவா சொன்னாங்க
   …என்ன செய்வேனு எனக்கே தெரியாது
   இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா????
   வயித்தில நெருப்ப கட்டிகிட்டு இருக்குறது எனக்கு தான் தெரியும்…
   ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா??
   Bast**d
   அவன மொத்த dept வல வீசி தேடிட்ருக்கு
   மாத பிதா குரு தெய்வம்….
   சட்டம் தன்னோட கடமைய செய்யட்டும்
   தோள்ளயும் மார்லயும் தூக்கி வளத்த என்ன பாத்து….
   கல்யாணங்ரது சொர்க்கத்துல நிசசயிக்கபடுது
   இந்த உலகத்தில அனாதைனு யாரும் இல்ல
   என்ன எதுக்க இனிமே ஒருத்தன் பொறந்து தாண்டா வரணும்…
   பணத்தால எதையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்காதீங்க

   காதல்னா…..

  • sridharkannan 2:35 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நான் இப்ப எங்கிருக்கேன் ?

   🙂

  • Rajathi Raj 5:36 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Sridhar,
   Chithran has already said… # 29 🙂

   Raj

  • sridharkannan 5:42 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Raj,
   நான் சும்மா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. நீங்கள் சீரியஸ் ஆகா எடுத்து கொள்ள வேண்டாம் .. 🙂

  • sandanamullai mugilvananan 6:57 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   :-))))

  • Sakthi 8:55 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   வில்லன்: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்
   ஹீரோ: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய

  • துளசி கோபால் 11:58 பிப on ஜனவரி 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   25. நம்ம டுபுக்கு சாருக்கு எடுத்து வச்சுருங்க:-)

  • சித்ரன் 4:36 முப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   வாவ்.. எல்லார்கிட்டேயும் பெரிய லிஸ்டே இருக்குது போல..
   நன்றி!
   இன்னும் சிலது:
   1. பொண்ணு அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா.
   2. ஆங்.. பை தி பை.. இது என்னோட………
   3. அவ வயித்துல ஒரு புழு பூச்சி உண்டாகாதான்னு இத்தனை வருஷமாஆஆஆ..
   4. அம்மா! எனக்கு மெட்ராஸ்ல வேலை கிடைச்சிருச்சு. மாசம் ஆஆஆஆயிரம் ரூபா சம்பளம்.
   5. இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தா எப்படி? (பஞ்சாயத்து ஸீன்)
   6. எட்றா வண்டிய….
   7. டேய்.. நீ யாராயிருந்தா எனக்கென்னடா?
   8. வேண்டாம் முதலாளி! என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க!
   9. மிஸ்டர் ராஜா! வெல்டன். சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க.
   10. உன் கைய காலா நெனச்சுக் கேக்கறம்பா..
   11. இந்த உதவிய நான் என் வாழ்நாள் பூரா மறக்கமாட்டேன்.

  • துளசி கோபால் 4:45 முப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சரியான நேரத்துலே கொண்டுவந்துட்டீங்க. இன்னும் பத்து நிமிசம் லேட்டாயிருந்தா காப்பாத்தி இருக்க முடியாது.

  • SRIKANTH 7:54 முப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   NAN MADURA KARAN DA
   NANGALLAM

  • ஷாஜி 7:58 முப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   super collecton

  • Robot 8:39 முப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   naakula narambilama pesathinga….
   itha maranthutinga sir…

  • manikandan 9:19 முப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   wonderful collection..laughed like anything after a long time… 🙂
   we add these also…
   oru student nenacha…
   neenga ilatha vazhaiya enala nenachu kooda parka mudiyathu…

  • சித்ரன் 1:02 பிப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Rajathi Raj : நீங்க சொன்ன மாதிரி திரையில் அதிகம் பேசப்பட்ட வசனம் “காதல்ங்கறது…” -ன்னு நினைக்கிறேன்.

   இன்னும் பேசிகிட்டே இருக்காங்கப்பா!

  • r k prabu 1:28 பிப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   mappillai romba thangamanavaru

  • R.Kanagasabai 11:03 பிப on ஜனவரி 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Very Good Collections

   Some Words as follows:

   Ayya Pichai Podungayya……
   Autooooo…….
   Taxiiii……..
   Pathinettu Patti Gramam…..

  • Ramachandran Usha(உஷா) 12:19 முப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஐ ஹேட் யூ – ஈரோயினி, ஈரோக்கிட்ட அழுதுக்கிட்டே சொல்லிட்டு ஓடுவது.

   அவன தூக்கிடுங்க- சமீபக்கால வசனம்.

  • பிரேம்ஜி 1:19 முப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   டாக்டர் சொல்லுவார்.It is a medical miracle.அவர் உயிர் பொழச்சது ரொம்ப அதிசயம்.

  • பிரேம்ஜி 1:22 முப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   I am proud of you.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

  • சித்ரன் 2:15 முப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உஷா: அவன தூக்கிடுங்க -வை “9வது வசனமாக பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.” எனினும் anyway (ரைமிங் பாத்தீங்களா!) நன்றி.

  • aswin 3:23 முப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   innaki seththa naalakki paal
   vithiyai yaralum matra mudiyathu.
   Dr :sorry.nanga evvalavo try panniyum avara kaappatha mudiyala (kandippa intha edathula dr kannadiya kalattuvar)

  • navin 10:24 முப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   iyyo naa yenna pannuven?
   petha vayiru patthi eriyudu
   kappatunga

  • பினாத்தல் சுரேஷ் 12:44 பிப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   1. சேலை மேலே முள்ளு விழுந்தாலும் முள்ளு மேலே சேலை விழுந்தாலும்..

   2. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சு..

  • சித்ரன் 12:59 பிப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இதுவும்..

   • அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத ஒனக்கு என் பொண்ணு கேக்குதா?
   • நாழியாயிடுத்து.. பொண்ண அழைச்சுண்டு வாங்கோ!
  • Rajathi Raj 2:58 பிப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நன்றி
   மற்றும் ஒன்று:

   கெட்டி மேளம் கெட்டி மேளம்….

  • Rajathi Raj 3:17 பிப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்களோட “6. எட்றா வண்டிய…” பார்த்ததும் ஞாபகத்திற்க்கு வந்தது:

   ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஒரு காட்சி: ராதா ரவி விஜயை தேடி அவர் வீட்டுக்கு வந்து கத்திட்டு போகும்போது…எட்றா வண்டிய…னு sound-அ சொல்லிட்டு அவரே ஓட்டிட்டு போவார் 🙂

  • Sriram 10:57 பிப on பிப்ரவரி 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Enna vittudu … Enna vittudu … Plz…
   (Heroine or Hero’s sister during raping scene)

  • athirai 7:34 முப on பிப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி?.
   2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும்! இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .
   3.வில்லன்: எவன் லே இந்த சிவா?. “அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்”.
   4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.
   5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்
   5.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.
   6.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா ?).

   மேலும் இது போன்ற சினிமா கடிக்களுக்கு:

   http://aruvadai.blogspot.com/2008/12/blog-post_3839.html

  • tnvmaniraj 10:07 முப on பிப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மிகவும் சுவையாக இருந்தது!

  • சித்ரன் 10:34 முப on பிப்ரவரி 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே இருக்குதே.

   மேலும் சில :

   • ஹலோ.. யார் பேசறது?
   • கமிஷனர் : இந்தக் காரியத்தை வெற்றிகரமா செய்து முடிக்க நம்ம டிபார்ட்மெண்ட்ல ஒருத்தராலதான் முடியும்.. அவர் பேரு…. (ஹீரோ இண்ட்ரொடக்‌ஷன்)
   • நான் பண்ணின பாவத்துக்கெல்லாம் ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை குடுத்துட்டார்.
   • ச்சே! உன்னயெல்லாம் என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுக்கே வெக்கமாயிருக்கு. (இனிமே என் மூஞ்சில முளிக்காத!)
   • குண்டடிபட்ட துணை நடிகர்: என்னப் பத்திக் கவலப்பட வேண்டாம்.. நீங்க எப்படியாவது இங்கிருந்து சீக்கிரம் தப்பிச்சு போயிருங்க!
  • athirai 4:01 முப on பிப்ரவரி 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   More
   1. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.

   2. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்?.

   3. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.

   4. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு?).

   5. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,

   6. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இதெல்லாம் பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).

   http://aruvadai.blogspot.com/2009/02/blog-post.html

  • rajesh 2:03 முப on பிப்ரவரி 5, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   tamilish is good…… matrum onru (neeum naanum apadiya pazhaganum)

  • S.Vadivelmurugan 8:53 முப on மே 15, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அவன்: அவர் வரட்டும்
   மற்றவன்: அதோ அவரே வந்துட்டாரே
   சகாதேவன்

  • KK 2:20 முப on ஜூன் 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Aazaghukirthu Mugathil illa aathu maanasulathan eeruku!!!!!!!!!!!!!

  • sethu 8:44 முப on ஜூன் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   படிச்சி முடிச்சி ஊருக்கு ஹீரோஇன் வந்தவுடன் ….
   ரயில் பயணம் எப்பிடிமா இருந்திச்சி ? னு ஹீரோஇன் அம்மா/அப்பா கேட்பாங்க..
   அடுத்தது , குளிச்சிட்டு வாம்மா டிப்பன் ரெடியா இருக்கு …னு சொல்லுவாங்க …

  • sethu 9:08 முப on ஜூன் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   1) சட்டம் தன் கடமையை செய்யும் …
   2) என் தலைய அடமானம் வச்சாவது …. இத முடிப்பேன் …
   3) ஜாம்.. ஜாம்… னு கல்யாணத்த நடத்திடலாம்…..
   4) சின்ன மீன போட்டுதான் பெரிய மீன பிடிகணும்

  • Madhan 10:04 முப on செப்ரெம்பர் 23, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஹா ஹா, அற்புதம்

   1. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாவே நடக்கும்
   2. இந்த இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் நான் இதையேதான் செஞ்சிருப்பேன்
   3. எனக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்க கூடாது
   4. என்ன வார்த்தை சொல்லிடீங்க (கோபால்!)

   இதையும் சேர்த்துக்கலாம் 🙂

  • கெளதம் 10:04 முப on செப்ரெம்பர் 23, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   என்னை யாரும் தடுக்கதிங்க…

  • val payan 12:36 முப on செப்ரெம்பர் 24, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நீ எல்லாம் ஒரு மனுஷனா??

  • Madhankrish 5:52 பிப on செப்ரெம்பர் 25, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   My two cents:

   1) நான் என்ன சொல்ல வர்றேன்னா…
   நீ எதுவும் சொல்ல வேணாம்..

   2) ஆட்டோ.. அந்த car’அ follow பண்ணுங்க

  • veera 6:49 முப on ஜனவரி 31, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

   enna ponnuda ava(romantic) sappa figura athu

  • sathiaraj 3:39 முப on ஏப்ரல் 4, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

   1. Naan oru anaadha
   2. Enakku cancer
   3. Ivlo neram neenga pesikitturundhadhai kettukittudhan irundhen

 • சத்யராஜ்குமார் 6:46 am on January 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  மாலைக்காட்சி 

  ஞாயிறு மாலை பாதி தியேட்டர் நிரம்பியிருந்தால் அது பெரிய விஷயம். பல படங்கள் தியேட்டரில் நான் மட்டுமே உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்.

  கொஞ்ச நாள் முன்னால் Chronicles of Narnia: Prince Caspian அகிலையும், தென்றலையும் கூட்டிப் போன போது கூட மொத்தமாய் நாங்கள் மூன்று பேர் மட்டுமே தியேட்டரில் இருந்தோம். தென்றல் அடம் பிடிக்க ஆரம்பிக்கவே, அவளை எடுத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டதால் அகில் மட்டுமே தன்னந்தனியாக உட்கார்ந்து முழுப் படத்தையும் பார்த்து விட்டு வந்தான். 

  முழு தியேட்டரும் நிரம்பி வழிய இங்கே பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். Quantum of Solace, The Bourne Ultimatum, சந்திரமுகி, சிவாஜி போன்றவை.

  நேற்று போனது Slumdog Millionaire. அன்றைக்கு டீனேஜ் கும்பல் அதிகமாயிருந்தது. யாஹூ! மூவீஸ் போன்ற திரைத்தளங்களில் 70 சதம் ரசிகர்கள் அற்புதம் என்று பாராட்டியும் மீதிப் பேர் அப்படி ஒன்றும் இது பிரமாதமில்லை என்று லேசாகவும் எழுதியிருந்தார்கள். இருந்தாலும் Netflix உபயத்தில் ஜோதா அக்பர் பார்த்த பின் – அதன் பிரம்மாண்டமான இசையமைப்பை கேட்ட பின் – ஏ. ஆர். ரஹ்மானுக்காகவாவது இந்தப் படத்தை பார்த்து விட வேண்டுமென போன என்னை ARR சற்றே ஏமாற்றி விட்டார். ஆனால் தொலைக்காட்சி விளையாட்டோடு பிணைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதை கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது. 

  முதல் சேரிக் காட்சியின்போதே Nachos நொறுங்கும் சப்தங்கள் தியேட்டரில் நின்று விட்டன. இந்தியப் பழங்கவிஞர் பற்றிய கேள்விக்கப்புறம் மறுபடி சேரி குப்பை மேட்டில் சின்னப் பையன்கள் குதித்தோடும் காட்சி வந்ததும் பின்னிருக்கையில் இருந்த நடுத்தர வயது அமெரிக்கப் பெண்மணி எழுந்து வெளியே போய் விட்டார். திரும்பி வரவேயில்லை.   

  மற்றபடி மீதி ஜனம் படம் முடிந்த பிறகு வந்த extra fitting பாலிவுட் மசாலா நடனத்தைக் கூட விடாமல், ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் நாகரீகம் கருதி நானும் உட்கார்ந்திருந்தேன்.

   
  • சரவணகுமரன் 8:11 முப on ஜனவரி 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   வித்தியாசமா இருக்கு. பொதுவா ஞாயிறு மாலை காட்சிதான் கூட்டமா இருக்கும்…

  • சத்யராஜ்குமார் 7:56 பிப on ஜனவரி 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @சரவணகுமரன்:
   அடுத்த நாள் வேலை நாள் என்பதால், வெள்ளி சனி போல் ஞாயிறு மாலை இல்லை. தவிர DVD, ஹோம் தியேட்டர், ப்ரொஜெக்டர், ராட்சஸ திரை தொ.கா பெட்டிகள் போன்றவை தியேட்டர் அனுபவத்தை வீட்டிலேயே கொடுப்பதுவும் தியேட்டர்களை பாதிக்கிறதென்று நினைக்கிறேன்.

 • சத்யராஜ்குமார் 8:50 am on January 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: vivekananda, youth, youth day   

  விழிமின் ! 

  நடிகர் விவேக் அவர்களின் பிறந்த நாள் அளவுக்கு சுவாமி விவேகானந்தா பிறந்த நாள் நம் இளைஞர்களுக்கு அவ்வளவு முக்கியமில்லைதான்.

  akhil-vivekananda

  ஆனால் 84-லிருந்து ஜனவரி 12, அவர் பிறந்த நாளை  இளைஞர்கள் தினமாகக் கொண்டாட இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இன்று. நான் சின்ன வயதில் பள்ளி விழாவில் அவரைப் போல் வேடம் தரித்து அவர் போல் உரையாற்றியுள்ளேன். அந்த வேஷம் கட்டியதுமே, மேடைக் கூச்சம் பறந்தே போய் விட்டது.

  இந்த பாரம்பரியத்தை உடைக்காமல் 2002 இளைஞர் தினத்தின் போது அகில் அதே மாதிரி விவேகானந்தர் காஸ்ட்யூம் அணிந்து உரை ஆற்றினான். (பார்க்க படம்)

  ஆரம்பத்திலிருந்தே இவர் ஒரு சாமியார் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒரு வீரனைப் போல்தான் உருவகமாகியிருக்கிறார். பாரதியாருக்கு அடுத்து இவர் எழுத்துக்கள் படித்தால் உத்வேகம் ஏற்படுவதை மறுக்க இயலாது.

  இவர் போன்ற ஆளுமைகளை மதம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்கும் கலை அறிந்தால் மிகவும் நல்லது.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி