விழிமின் !


நடிகர் விவேக் அவர்களின் பிறந்த நாள் அளவுக்கு சுவாமி விவேகானந்தா பிறந்த நாள் நம் இளைஞர்களுக்கு அவ்வளவு முக்கியமில்லைதான்.

akhil-vivekananda

ஆனால் 84-லிருந்து ஜனவரி 12, அவர் பிறந்த நாளை  இளைஞர்கள் தினமாகக் கொண்டாட இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இன்று. நான் சின்ன வயதில் பள்ளி விழாவில் அவரைப் போல் வேடம் தரித்து அவர் போல் உரையாற்றியுள்ளேன். அந்த வேஷம் கட்டியதுமே, மேடைக் கூச்சம் பறந்தே போய் விட்டது.

இந்த பாரம்பரியத்தை உடைக்காமல் 2002 இளைஞர் தினத்தின் போது அகில் அதே மாதிரி விவேகானந்தர் காஸ்ட்யூம் அணிந்து உரை ஆற்றினான். (பார்க்க படம்)

ஆரம்பத்திலிருந்தே இவர் ஒரு சாமியார் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒரு வீரனைப் போல்தான் உருவகமாகியிருக்கிறார். பாரதியாருக்கு அடுத்து இவர் எழுத்துக்கள் படித்தால் உத்வேகம் ஏற்படுவதை மறுக்க இயலாது.

இவர் போன்ற ஆளுமைகளை மதம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்கும் கலை அறிந்தால் மிகவும் நல்லது.