கடல் கடந்தவன்
அமெரிக்கா வந்த புதிதில் இங்கே பிச்சைக்காரர்களைப் பார்க்கையில் ஆச்சரியமாயிருந்தது. பணக்கார நாடு என்றே படித்து வந்ததும், இங்கே பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக மீடியாக்கள் பிம்பம் தந்திருந்ததும் காரணமாயிருக்கலாம்.
வாய்ப்புகளை வாரி வழங்கும் பூமியில் ஏன் இவர்களுக்கு இந்த நிலைமை என்று அந்த ரோட்டோர பிச்சைக்காரர்களைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது. ஒரு டாலருக்காக துப்பாக்கி எடுத்து சுடக் கூட செய்வார்கள் என்று நண்பர்கள் எச்சரிக்கை செய்த போது, மனசுக்குள் திடுக்கென்றிருந்தது. வீடில்லா அந்த விளிம்பு நிலை ஆட்களிடம் இசகு பிசகாக மாட்டிக் கொண்டு மீண்ட நண்பர்களின் கதையை கேட்கும்போது த்ரில்லர் படித்ததைப் போல மயிர்க்கூச்செரிந்தது.
அதற்கப்புறம் நான் வேலை பார்க்க நேர்ந்த எந்த ஒரு down town-மே பகலில் அழகாக தெரிந்தாலும், பின்னிரவிலும், விடிகாலையிலும் ஒரு அமானுஷ்யம் கலந்த பயத்தை அளித்தது. அவ்வப்போது இரவில் நடைபெறும் பெரு நகர துப்பாக்கி சூடுகள் பற்றி செய்திகளில் படிக்கும்போது கொஞ்சம் அபத்திர உணர்ச்சி சில வினாடிகளுக்கு நெஞ்சில் தோன்றும்.
இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் வேலை, நண்பர்கள், கேளிக்கைகளுக்கு இடையே அவ்வப்போது இழையோடிச் செல்லும் இந்த மெல்லிய பய உணர்ச்சியை ஒரு கதையில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது ‘கடல் கடந்தவன்’.
கடல் கடந்தவன்
~ சத்யராஜ்குமார் ~
அவன் கண்கள் ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.
சாலையோரமாய் இருந்த பேக்கரி அருகே சுவரில் தன்னை முட்டுக் கொடுத்து நின்றிருந்தான். இடது கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் கப்பில் கொஞ்சம் சில்லரைகள். கிழிந்த சர்ட்டிலும், பேன்ட்டிலும் சுரண்டினால் வருமளவுக்கு அழுக்கு. எத்தனை கூட்டத்திலும், யாரையும் பார்த்து விடுமளவுக்கு உயரமாக இருந்தான். கை கால்கள் குச்சி குச்சியாய் இருந்தன. ஒடுங்கின முகத்தில் துவங்கிய மீசையும், தாடியும் நெஞ்சு வரை நீண்டன. எண்ணெய் காணாமல் பழுப்படித்து ஒன்றோடொன்று ஒட்டிக் கிடந்த பரட்டைத் தலைமுடி. பிளந்திருந்த தடிமனான உதடுகளுக்குள் மஞ்சளாய் கறை படிந்த பற்கள். மேலுதட்டையும், கீழுதட்டையும் தொட்டுக் கொண்டு பளபளத்தன ஓரிரு எச்சில் கம்பிகள்.
…
…
Periyasamy 7:58 முப on ஜூலை 27, 2009 நிரந்தர பந்தம் |
ஆக்லாந்தின் “Down Town”ல் இருந்த போது இப்படி ஒரு பயத்தினுடனே வாழ்ந்தது உண்டு.
சத்யராஜ்குமார் 6:16 முப on ஜூலை 28, 2009 நிரந்தர பந்தம் |
பெரியசாமி, பகிர்ந்தமைக்கு நன்றி.
என். உலகநாதன் 1:41 முப on ஜூலை 28, 2009 நிரந்தர பந்தம் |
இந்த கதையில் நீங்கள் சொல்ல வருவது என்ன? என்பதே எனக்கு புரியவில்லை.
சத்யராஜ்குமார் 6:18 முப on ஜூலை 28, 2009 நிரந்தர பந்தம் |
உலகநாதன், மேலே பெரியசாமியின் பின்னூட்டத்தை பார்க்கவும்.
என். உலகநாதன் 2:14 முப on ஜூலை 29, 2009 நிரந்தர பந்தம்
பெரியசாமியின் பின்னூட்டத்தை படித்தேன்.
உங்கள் கதையில் அதே பிச்சைக்காரன் எப்படி சென்னை வந்தான்?
நீங்கள் (நாயகன்) பணம் போட்டதூம் ஏன் அவன் ஓடினான்?
நீங்கள் ஏன் சிரித்தீர்கள்?
பயத்துடனே வாழ்வதற்கும், இந்த கதையின் முடிவிற்கும் என்ன சம்பந்தம்?